பக்கம் எண் :

124

     
 முன்னூர்ப் பூசலிற் றோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தந் துடிபுணை யாக
15வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து
 வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வையேயிற் றுய்ந்த மதியின் மறவர்
கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையொடு வந்த வுரைய னாகி
20உரிகளை யரவ மானத் தானே
 அரிதுசெல் லுலகிற் சென்றன னுடம்பே
கானச் சிற்றியாற் றருங்கரைக் காலுற்றுக்
கம்பமொடு துளங்கிய விலக்கம் போல
அம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே
25உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே
 மடஞ்சான் மஞ்ஞை யணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே.

   திணை:அது.துறை:கையறுநிலை.பாண்பாட்டுமாம்...வடமோதங்கிழார்
பாடியது.

     உரை: வளரத் தொடினும் - ஓசை மிக வேண்டுமென்று எறியினும்;
வௌவுபு திரிந்து - ஓசையை யுள்வாங்கி வேறு பட்டு; விளரி உறுதரும்
தீந்தொடை நினையா - இரங்கற் பண்ணாகிய விளரியைச் சென்றுறுகின்ற
இனிய நரம்புத் தொடை யினது தீங்கை நினைந்து; தளரும் நெஞ்சும்
தலைஇ -நடுங்கும் நெஞ்சத்தைத் தலைப்பட்டுப் புறப்பட்ட அளவில்;
மனையோள் உளரும் கூந்தல்நோக்கி - நிமித்த வழியாக ஒரு மனைவி
விரித்து வருகின்றமயிரைப் பார்த்து; களர கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி -
களர் நிலத்துள்ள கள்ளி மரத்தின் நிழற்கண் உண்டாகிய தெய்வத்தை
ஏத்தி; பசிபடு மருங்குலை - பசி தங்கிய வயிற்றையுடையாய்; கசிபு கை
தொழா - இரங்கிக் கையால்தொழுது; காணலென் கொல் என வினவினை
வரூஉம் - நம்குரிசிலைக் காணமாட்டேன் கொல்லோ என்று எதிர்
வருவாரைப் பார்த்துக் கேட்டு வருகின்ற; பாண கேண்மதியாணரது நிலை
- பாண கேட்பாயாக நமது செல்வம் பட்டநிலைமை; புரவுத்தோடு
துண்குவை யாயினும் - இனி நீ அவன் நமக்குவிட்ட பண்டங்களைக்
கைப்பற்றி உண்பாயாயினும்; இரவு எழுந்து எவ்வம்கொள்குவையாயினும் -
அன்றி