பக்கம் எண் :

16

     

எத்துணைச்சிறந்த புலவராயினும் ஒருவரது உள்ளத்தின் உள்ளே நிகழும்
எண்ணங்களை  அறிவதுஅரிதன்றோ?அதியமான்கருத்தறியாத
ஒளவையார் அவன் பரிசில் நீட்டிப்பது குறித்து மனத்தே கவலையுற்றார்.
ஒருறாள்அவனைக்  கண்டு தமது கருத்தை யறிவித்துவிட்டு விடைபெற
நினைத்தார்.அவனதுசெவ்விபெறுவதுஅரிதாயிற்று. பெருமனையில்
உள்ளார் அனைவரும் ஒளவையார்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டு
ஒழுகினர். வாயில்காவலர் முதல் அமைச்சர்ஈறாகஅனைவரும்
ஒளவையாரைப்பேணிச்சிறப்பித்தாராயினும்,  அவர்க்குமட்டில்மனக்
கவலை நீங்கவே இல்லை. அதியமானது செவ்வி பெறவேண்டி ஒளவையார்
முயலும்தோறும் வாயில் காவலர் அன்பமைந்த சொற்களால் அவர் கருத்து
நிறைவுறாதவாறு செய்தொழிந்தனர், உடைந்த மனத்தராகிய ஒளவையார்,
வாயில் காவலரை நோக்கினார்: அவர்கட்குத் தலைவன் முகத்தைப் பரக்க
விழித்து நோக்கினார். அவனோ அவர் மனநிலையை யறியானாயினன்.
ஒளவையார் உள்ளத்தில் வெம்மையுண்டாயிற்று. அதனால் சில சொற்கள்
அவர் வாயிலிருந் தெழுந்தன. அச் சொற் கூட்டம் ஒரு பாட்டாயிற்று.
அதுவே இப் பாட்டு. இதன்கண், “வாயிலோனே, நீ எப்போதும் பரிசிலர்
பரிசிற்கு வருந்தும் வாழ்க்கையுடைய ரென்பதறிந்து அவர்க்கு அவ்
வாயிலை அடைப்பதில்லை. ஆயினும், என்மாட்டு வாயிலை யடைக்கின்றாய்.
இது நின் செயலன்றென்பதை அறிவேன். நின் தலைமகனான அதியமான்
ஒன்று, தன் தகவுடைமையை அறியானாக வேண்டும்; அன்றி என் தரத்தை
அறியானாகவேண்டும்; அறிவும் புகழுமுடைய வேள்பாரி முதலிய நல்லோர்
இறந்ததனால், இவ் வளமிக்க உலகம் வறிதாய்விடவில்லை. யாங்கள்
எத்திசையேகினும் எங்கட்குச் சோறு குறை கிடையாது. சோறொன்றே யான்
வேண்டுவது என எண்ணி எனக்கு விடைதர நீட்டிப்பது விழுமிதன்று”
என்று அவர் கூறுகின்றார். இந் நிகழ்ச்சிக்குப் பின்புதான் அதியமான்,
ஒளவைக்கு நெல்லிக்கனி தந்ததும், தொண்டைமானுழைத் தூது விடுத்ததும்
பிறவும் நிகழ்ந்தன.

 வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கு முரனுடை யுள்ளத்து
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
5பரிசிலர்க் கடையா வாயி லோயே
 கடுமான் றோன்ற னெடுமா னஞ்சி
தன்னறி யலன்கொ லென்னறி யலன்கொல்
அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென
வறுந்தலை யுலகமு மன்றே யதனாற்
10காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை
 மரங்கொஃறச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
எத்திசைச் செலினு மத்திசைச் சோறே.

     திணையும் துறையு மவை. அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில்
நீட்டித்தானை ஒளவையார் பாடியது.