| மறவன் ஒருவன். தலைவன் வீழ்ந்தது தெரிவிக்குங்கால், பாசறையில் உள்ளவர்களே! நம் தலைவன் கையதாகிய வேல் துடி கொட்டுவோன் கையில் உளது;தோலாகிய கேடயம் பாணன் கையில் உளது;அவன் சூடிய மாலையும் வாடிவிட்டது; தலைவன் வே ல் மார்பில் ஊடுருவிப்போக, குருதி சோர நிலம் சேர்ந்தான்; சான்றோர் பலரும் அவனைச் சூழ்ந்து நின்று அவன் சால்பினைப் பாராட்டினர்; பாராட்டுமிடத்து, தலைவன் தன்னுடைய நாட்டு மருத நிலத்தூர்களை முன்வந்த இரவலர்க் கீத்தொழிந்தான், இறுதிக்கண் வந்த இரவலர் தலைவனுக்கு எஞ்சிநின்ற கரம்பை மிக்க சீறூரைக் கொடுத்தான் என்றனர்; அது கேட்டுத் தலைமகன் நாணித் தலை கவிழ்ந்தான்; என்னே அவன் சால்பிருந்தவாறு என்று தெரிவித்தான். இதனை உடனிருந்து சேட்டார் அரிசில்கிழார். தலைவனது தலைமைப் பண்பறிந்து பாராட்டும் தானை வீரர் சொல் அவர்க்கு மிக்க வுவகையைத் தந்தது. இப் பாட்டினைப் பாடினார். இதனுள் சில பகுதிகள் கிடைக்க வில்லை. | பாசறை யீரே பாசறை யீரே துடியன் கையது வேலே யடிபுணர் வாங்கிரு மருப்பிற் றீந்தொடைச் சீறியாழ்ப் பாணன் கையது தோலே காண்வரக் | 5 | கடுந்தெற்று மூடையின்... | | வாடிய மாலை மலைந்த சென்னியன் வேந்துதொழி லயரு மருந்தலைச் சுற்றமொடு நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த மூரி வெண்டோள்... | 10 | சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ | | மாறுசெறு நெடுவேன் மார்புளம் போக நிணம்பொதி கழலொடு நிலஞ்சேர்ந் தனனே அதுகண்டு, பரந்தோ ரெல்லாம் புகழத் தலைபணிந் திறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர் | 15 | அலமருங் கழனித் தண்ணடை யொழிய | | இலம்பா டொக்கற் றலைவற்கோர் கரம்பைச் சீறூர் நல்கின னெனவே. |
திணை: வாகை. துறை: சால்புமுல்லை. அரிசில்கிழார் பாடியது.
உரை: பாசறையீரே பாசறையீரே - பாசறையில் உள்ளவர்களே பாசறையில் உள்ளவர்களே; துடியன் கையது வேல் - துடிப்பறை கொட்டுவேன் கையில் உளதாயிற்று வேல்; அடிபுணர் வாங்கு இருமருப்பின் - அடிகாறும் புணர்க்கப்பட்ட வளைந்த கரிய கோட்டினையும்; தீந்தொடை -இனிய இசையை யெழுப்பும் நரம் பினையுமுடைய; சீறியாழ்ப் பாணன் கையது தோல் - சிறிய யாழையுடைய பாணன் கையதாயிற்றுகேடயம்; |