| | தோறா தோறா வென்றி தோலொடு துறுகண் மறயைினு முய்குவை போலாய் நெருந லெல்லைநீ யெறிந்தோன் றம்பி அகற்பெய் குன்றியிற் சுழலுங் கண்ணன் | 5 | பேரூ ரட்ட கள்ளிற் | | கோரிற் கோயிற் றேருமா னின்னே. |
திணை: தும்பை: துறை: தானை மறம். அரிசில்கிழார் பாடியது.
உரை: தோல்தர தோல்தர என்றி - கேடகத்தைக் கொணர்ந்து தருக, கேடகத்தைக் கொணர்ந்து தருக என்று கேட்கின்றாய்; தோலொடு துறுகல் மறையினும் - கேடகத்தோடு துறுகல் லொன்றைக் கேடகமாகக் கொண்டு நின் மார்பை மறைப்பாயாயினும்; உய்குவை போலாய் - உய்குவாய் போல்கின்றாய்; நெருதல் எல்லை - நேற்றைப் பகலில்; நீ எறிந்தோன் தம்பி நின்னால் கொல்லப்பட்டோனுடைய தம்பி; அகல்பெய்குன்றியின் சுழலும் கண்ணன் - அகலின்கண் பெய்த குன்றிமணியுருளுதல் போலச் சுழலுகின்ற கண்ணையுடையனாய்; பேரூர் அட்ட கள்ளிற்கு - பெரிய ஊரின்கண் காய்ச்சியகள்ளைப் பெறும் பொருட்டு; ஓர் இல் கோயின் நின் தேரும் - மனைக்குட்புகுந்து ஒரு கட்கலயத்தைத் தேடுவதுபோல நின்னைத் தேடா நின்றான்; எ - று.
கலயம் அகப்படாதொழியாதவாறு நீ அவற்கு அகப்படாதொழி யாய் என்பதாம். அவனது படைக்குத ் தன் மார்பு ஆற்றாதெனத் தோல் வேண்டுவதை இகழ்ந்து தோலேயன்றித் துறுகல் கொண்டு காக்கினும் நீ உய்தல் அரிதென்பான், தோலொடு துறுகல் மறையினும் உய்குவை போலாய் என்றான். தன் படையைப் பிறர்பால் கொடுத்து வேண்டுங்கால் அது பெறாது இறப்பவன் பேதையாமென்பதுபற்றி உய்குவையல்லை யென்னாது உய்குவை போலாய் என்றான். அகலிடத்துக் குன்றிமணி யுருளுவதுபோலக் கண்ணில் விழி சுழலுவது கூறியது சினமிகுதியால் வீரனுடைய கண்கள் சினத்தால் சிவந்திருக்கும் திறத்தையும் உணரத்தி நின்றது. கோய் - கள் முகக்கும் கலம். என்றி, போலாய்; தம்பி, கண்ணன், தேரும் என வினைமுடிவு செய்க.
விளக்கம்:தானை மறமாவது, பூம்பொழிற் புறங் காவலனை யோம்படுத்தற்கு முரித்தென மொழிப (பு. வெ. மா. 7:4) என்பது காண்க. மறையினும் என்புழி உம்மையை இசை நிறையாக்கி, மறையின் உய்குவை; இன்றேல் உய்தல் இன்று என வுரைக்கினும் அமையும். நீ எறிந்தோன் - நீ எறிய அதனால் உயிர் துறந்தோன். போர்ச் சினத்தால் சிவந்த கண்ணையுடையனாதலால், குன்றி யுவமமாயிற்று. இவ்வுவம நயத்தை இனிது துய்த்த பரஞ்சோதியார், வென்றிக் கணத்தை விடுத்தானகல் மீதுபெய்த, குன்றிக்கணம்போற் சுழல் கண்ணழல் கொப்புளிப்ப (திருவிளை. 5:30) என்று பாடுகின்றார். ஒருமை, கலயத்துக் கேற்றுக. |