பக்கம் எண் :

204

     

     மா உகளும்: பூ கூந்தற் கொண்ட; சீறூர் பாணர்க் கோக்கிய; காளை
அட்ட  களிறு  எண்ணின்  மீனும்  உறையும் உரையாற்றா எனக் கூட்டி
வினைமுடிவு செய்க. கோதை சுற்றிய சீறியாழ் என இயையும். வார், வார்தல்;
சுட்டுவிரற் செய்தொழில் என்பர் அடியார்க்கு நல்லார்: இசைக் கரணம்
எட்டனுள் ஒன்று காளைபோல்வானைக் காளை யென்றார்.

     விளக்கம்: வளைத்து  விட்ட  மூங்கில்  சிவ்வென்று  மேலெழுதல்
போலக் குதிரையும் மேலெழுந்து பாயும் என்றார்; பிறரும் “விட்ட குதிரை
விசைப்பின்னன், விசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன்” (குறுந்-74) என்று
கூறுதல் காண்க. சீறூர்க்குச் செல்வோர் சிலராதலின், செல்லும் வழியும் மிகக்
குறுகியிருக்குமாகலின்,   “நிரம்பாவியவு”   எனப்பட்டது.   இயவு - வழி.
“வரம்பிடை விலங்கி வழங்குதற்கரிதாய், நிரம்பாச் செலவின் நீத்தருஞ்
சிறுநெறி” (பெருங். 1:19:30-1) என்று பிறரும் கூறுவது காண்க. “நிரம்பா
வியல்பின்” என்று பாடமாயின்,  நிரம்ப  விளையாக வியல்பினையுடைய
கரம்பை யென்றுரைத்தக்  கொள்க.  “நோக்கினர்ச்  செகுக்குங்  காளை”
என்றதனால் நோக்கத்தின்கண் செகுத்தற்குரிய பகைமைக் குறிப்புண்மை
பெற்றாம்; “எள்ளுநர்ச் செகுக்குங் காளை” (புறத். 1375) என்பதனால்,களிறே
ஈண்டு எண்ணப்பட்டன. அட்டகளிறுகள்  சிதைந்து  வேறாகித்  குவிந்து
கிடத்தலின்,  கிடந்தாங்  கெண்ணலாகாதென்பார், “பெயர்த் தெண்ணின்”
என்றும்,    வீழ்வன    பலவாய்    எண்ணலுறுவார்    எண்ணத்தை
ஈர்த்துக்கொள்ளுதலால்,  வீழ்ந்தவற்றை   எண்ண  வியலாதென்பதற்கு
“எண்ணின்” என்றும், தொகையாக நோக்குமிடத்து விண்மீன் தொகையும்
மழைத்துளியின் தொகையும் உறையிடற்காகா என்பார். “விண்ணிவர்
விசும்பின் மீனும் தண்பெயலுறையும் உறையாற்றா” என்றும் கூறினார்.


303. எருமைவெளியனார்

     போர்க்களமொன்றில் தாளை வீரரிடையே நிகழ்ந்த நிகழ்ச்சிகளை
ஆசிரியார் எருமைவெளியனார் கண்டு வந்தார். அவற்றுள் ஒரு நிகழ்ச்சி
அவர் கருத்தைக் கவர்ந்தது. வீரனொருவன், பகை வேந்தன் காண அவனது
கடல்போன்ற தானைப் பரப்பைக் கடலைப் பிளந்தேகும் தோணி போலப்
பிளந்து சென்று பகைவருடைய களிற்றியானைகளைக் கொன்று வீழ்த்தினான்.
களிற்றின் பிரிவாற்றாக மடப்பிடிகள் புலம்பிப் பிளிறின. மறு நாள் அவ்ீகூரன்
படையணி்யில் முன் நிற்கையில்  பகைவர்  படையிலிருந்து  ஒரு  காளை
குதிரையொன்றின்மேல் வந்தான். வருகையில் அவனை வீரர் பலர் எதிர்த்து
மார்பிற் புண்பட்டு வீழ்ந்தனர். இங்ஙனம்  வென்றி  மேம்பட்டு வேலை
அலைத்துக்கொண்டு வருபவன் தன்னை நோக்கி வருதலை அவ்வீரன்
அறிந்து, “இவன் என்னைப் பொருது வென்றி காண வருகின்றான். வருக”
என்று மறத்தீக் கிளர மொழிந்தான். அதனைக் கேட்ட இச் சான்றோர்
அவனது மறமாண்பை வியந்து இப் பாட்டினைப் பாடியுள்ளார்.

 நிலம்பிறக் கிடுவது போற்குளம்பு கடையூஉ
உள்ள மொழிக்குங் கொட்பின் மான்மேல்