பக்கம் எண் :

228

     

உறங்குபவனாகிய; அவன் எம் இறைவன்அவனே எம்முடைய தலைவன்;
யாம் அவன் பாணர் - யாங்கள் அவனுடைய பாணராவேம்; நெருதை வந்த
விருந்திற்கு நேற்றுத் தன்பால் வந்த விருந்திரை யோரம்புதற்பொருட்டு; தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன் - தனது பெரிய பக்கத்தேயிருக்கும்
பழைய வாளை ஈடு வைத்தான்; இக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்-ஈது
உண்மை யென்றற்கு இக் கரிய கோட்டையுடைய சிறிய யாழைப் பணயமாக
வைக்கின்றேம்; இது கொண்டு - இதனால்; இன்று ஈவது இலாளன் என்னாது-
இன்று அவன் சென்றால் ஈதற்கு  ஒன்றும்  இல்லாதவனாவான்  என்று
நினையாமல்; நீயும்-; வள்ளி மருங்குல் வயங்கிழை அணிய - கொடி போலும்
இடையையுடைய நின் பாடினி விளங்குகின்ற இழையாகிய பொற்பூ வணிய,
கள்ளுடைக்   கலத்தேம்  யாம்  மகிழ  தூங்க  -   கள்ளையுடைய
கலங்களையுடையராகிய யாம் மகிழ்ச்சி கொள்ள; சென்று வாய் சிவந்து மேல்
வருக - அவன்பாற்சென்று விருந்துண்டு வாய் சிவந்து பின்பு வருக;
எ - று.


     வேந்து விழுமுறவே கள்ளின் வாழ்த்தின் துஞ்சுவோனாகிய அவன்
இறைவன்; யாம் பாணரேம்; நெருதை வைத்தனன்; சீறியாழ் பணையம் இது
கொண்டு ஈவதிலாளனென்னாது, நீயும், அணிய, தூங்கச் சென்று சிவந்து
மேல் வருக என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. வேந்து விழுமுறவே
பெரும் பொருள் கிடைத்தமையின் வருவிருந் தோம்புதற் கிடையூறிம்மை
யால் களித்து உறங்குகின்றான் என்பார், “நாட்செருக்கனந்தர்த் துஞ்சுவோன்”
என்றும்,    போர்    எய்துதற்கு   முன்   வரு   விருந்தோம்பற்குரிய
பொருளில்லாமையால்  வாடினான்  என்பான்,  “இரும்புடைப்  பழவாள்
வைத்தன”  னென்றும்,  அதனை  ஏலாதான்போல்  எதிர்வந்த பாணன்
நோக்கினானாகத் தன் கூற்று மெய்யென்பது வற்புறத்தச் “சீறியாழ் பணையம்”
என்றும், இப்போது பெரும்  பொருளுடையனாதலின்  செல்க  என்பான்,
“ஈவதிலாளன் என்னாது நீயும் சென்று வருக” என்றும் கூறினான். பாடினி
இழைபெறுதல் கூறவே பாணன் தனக்குரிய வரிசை பெறுவது தப்பாதென்றற்கு
“வயங்கிழை யணிய” என்றார். யாம் எனத் தன்னையும் உளப்படுத்தான்;
இனம் பற்றி; அன்றித் தானும் உடன் வருவது உணர்த்தியவாறுமாம். வாய்
சிவந்து வருவதாவது, உண்ணாமையால் வெளுத்திருக்கும் வாய் உண்பன
நிரம்ப உண்டு மகிழ்ச்சி மிக்கு வருதல்.

     விளக்கம்: காட்டு, செத்தை; காட்டிடத்துதிர்ந்த சருகு முதலிய வற்றைக்
காற்றுக் கொணர்ந்து தொகுத்தலால்துகள் பட்டகுப்பைகாட்டேனப்பட்டது.
துப்புரவு செய்யப்படாத முன்றிலை, “சீயா முன்றில்” என்றார். நன்கு துப்புரவு
செய்யப்பட்டவிடத்தே கிடந்து உறங்குவோனாகிய வேந்தன் கண்மயக்கால்
“காட்டொடு மிடைந்த சீயா முன்றிற் கண் நாட்செருக்குற்று உறங்குகின்றா”
னென்பதாம். இவ்வாறு, தன்னைப் பேணாமல், கிடக்குமிடத்தின், புன்மைமயும்
நோக்காதான், நீ செல்லின் நினக்கு நின் ஒக்கலின் பன்மை நோக்காது
வேண்டுவன ஓம்பாது நல்குவனென்றானாயிற்று. களிமயக்குற்றோர் முன்றிற்
கிடத்தலை, “முன்றிற் கிடந்த பெருங்களியாளன்” (புறம். 317) என்று பிறரும்
கூறுதல் காண்க.