பக்கம் எண் :

238

     
 கலியார் வரகின் பிறங்குபீ ளொளிக்கும்
வன்புல வைப்பி னதுவே சென்று
தின்பழம் பசீஇ...னனோ பாண
வாள்வடு விளங்கிய சென்னிச்
 10. செருவெங் குருசி லோம்பு மூரே.


     திணையும்  துறையு  மவை.  உறையூர்  மருத்துவன்  தாமோதரனார்
பாடியது.


     உரை: பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல் - புள்ளி பொருந்திய
புறத்தையுடைய குறும்பூழ்ப் பறவையின்  சேவல்; மேந் தோல்  களைந்த
தீங்கொள் வெள்ளென் - மேலுள்ள தோல் நீக்கப்பட்ட இனிமை பொருந்திய
வெள்ளிய எள்ளாகிய; சுளகிடை யுணங்கல் செவ்வி கொண்டு - முற்றத்தில்
வைத்து உலர்த்தப்பட்டவற்றைக் கவர்ந்துண்டு; உடன் - உடனே; வேனற்
கோங்கின் பூம்பொகுட்டன்ன - வேனிற் காலத்து மலரும்  கோங்கினது
பூவிடத்துள்ள கொட்டையைப்போன்ற; குடந்மையம் செவிய - வளைந்த
அழகிய காதுகளையுடையவாகிய; கோட்டெலி யாட்ட - கொல்லை வரப்பில்
வாழும் எலியை யலைக்க; கலியார் வரகின்  பிறங்கு  பீள்  ஒளிக்கும் -
தழைத்தலைப்பொருந்திய வரகின் உயர்ந்த தோகையிடையே அவ்வெலி
சென்று மறையும்;  வன்புல  வைப்பினது -  வன்புலமாகிய  நாட்டின்
கண்ணேயுளது; சென்று தின்பழம் பசீஇ - சென்று பறித்துத் தின்னப் படும்
பழம் பசந்து...பாண - பாணனே; வாள் வடு விளங்கிய சென்னி - வாளால்
வடுப்பட்டு விளக்கும் தலையையுடைய; செருவெங் குரிசில் ஓம்மபும் ஊர் -
போரை விரும்பும் குரிசிலாகிய தலைவன் காத்தளிக்கும் ஊர்; எ - று.


      ஊர், சேவல் உணங்கல்கொண்டு கோட்டெலியாட்ட, (அல்வெலி) பீள்
ஒளிக்கும் வன்புல வைப்பினது எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆட்டப்
பீள் ஒளிக்கும் என்றதற்கு ஆட்டின் பொருட்டுப் பீளின்கண் ஒளிக்கும் என
வுரைப்பினுமமையும். எள்ளின் மேல்தோல் நீங்கியவழி அதன் உள்ளீடு
வெளுத்துத் தின்பார்க்கு இனிமை பயப்பதாகலின், “தீங்கொள் வெள்ளென்”
என்றார். செவ்வி கொண்டென்றார், காவலின்மை யறிந்து அக்காலத்தே
தப்பாது கவர்ந்துண்பது பூழ்ப் பறவைக்கு இயல்பாதலின், வரகு விளையும்
கொல்லையின் வரப்பில் வளையமைத்து வாழ்வதுபற்றிச் கண்டெலியைக்
“கோட்டெலி”  யென்றார்.  வரகின்  உதிர்ந்த  வைக்கோல்  ஈண்டுப்
பீளெனப்பட்டது; அதனைத்  தோகை  யென்றலும்  வழக்கு. வன்புலம் -
முல்லைநிலம்.   சென்னியில்   உண்டாகிய   வாள்வடு,  தலைவனது
வாட்போர்வன்மையைச்  சிறப்பித்துக் காட்டலின் “வாள்வடு விளங்கிய
சென்னி” யென்றார். ஓம்புமூரென்றது ஆற்றலால் ஈன்ற தாய் தன் குழவியை
யோம்புவது போல ஓம்புகின்றானென்பது விளங்க நின்றது.

     விளக்கம்: கோழிகளை வளர்த்துப் போர் செய்து  வெற்றி பெறப்
பயிற்றுவதுபோலப் பண்டைநாளில் குறும்பூழையும் பயிற்றுவது மரபு;