பக்கம் எண் :

240

     

பாய்ந்தோடும், என அவ் வன்புலத்தியல்பை இப் பாட்டில் அழகுறக்
கூறியுள்ளார்.

 உழுதூர் காளை யூழ்கோ டன்ன
கவைமுட் கள்ளிப் பொரியரைப் பொருந்திப்
புதுவர கரிகாற் கருப்பை பார்க்கும்
புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பிற்
 5.பெருங்கட் குறுமுயல் கருங்கல னுடைய
 மன்றிற் பாயும் வன்புலத் ததுவே
கரும்பி னெந்திரஞ் சிலைப்பி னயல
திருஞ்சுவல் வாளை பிறழு மாங்கட்
டண்பணை யாளும் வேந்தர்க்குக்
 10. கண்படை யீயா வேலோ னூரே

     திணையும் துறையு மவை. ஆவூர் கிழார் பாடியது.

     உரை: உழுதூர் காளை யூழ்கோடு அன்ன - நிலத்தை யுழுததனால் ஓய்ந்த
நடை கொண்டு  செல்லும்  காளையின்  தலையில்  முளைத்த
கொம்புபோல்; கவைமுள் கள்ளி பொரியரைப் பொருந்தி - கவைத்த
முட்களையுடைய கள்ளி மரத்தின் பொரிந்த அடிப் பகுதியைப் பொருந்தி
யிருந்து; புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் - புதிது விளைந்த வரகை
யரிந்தபின் உண்டாகிய அரிகாலின்கண் வந்து மேயும் எலியைப் பிடிப்பதற்குச்
செவ்விபார்க்கும்; புன்றலைச் சிறாஅர்  வில்லெடுத்  தார்ப்பின்  புல்லிய
தலையையுடைய சிறுவர்கள்  கையில்  வில்லையெடுத்துக்   கொண்டு
ஆரவாரிப்பராயின; பெருங்கண் குறு முயல் - பெரிய கண்ணையுடைய
குறுமுயல்; கருங்கலன் உடைய மன்றில் பாயும் - கரிய புறத்தையுடைய
மட்கலங்கள் உருண்டுடைந்து கெடமன்றிலே பாய்ந்தோடும்; வன்புலத்தது -
வன்புலத்தின்  கண்ணே  யுளது;  கரும்பின்  எந்திரம்  சிலைப்பின் -
கரும்பாட்டும்  ஆலை  யொலிக்குமாயின்;  அயலது  -  அயலதாகிய
நீர்நிலையிலுள்ள; இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண் - பெரிய
பிடரையுடைய வாளைமீன்கள் துள்ளிப் பாயும் அழகிய இடத்தையுடைய;
தண்பணையாளும் வேந்தர்க்கு - குளிர்ந்த மருதநிலத்தூர்களை யாட்சி
செய்யும் அரசர்கட்கு; கண்படை ஈயா வேலோன் ஊர் - கண்ணுறக்கத்தை
யெய்தாமைக் கேதுவாகிய அச்சத்தைத் தரும் வேலையுடையவன் ஊர்;
எ - று.


     ஊர் வன்புலத்தது என விளை முடிவு செய்க. கொம்பு முளையாத
இளங்காளைகளை உழுதற்குப்பயன்படுத்தாராகலின், “உழுதூர் காளையூழ்
கோடு” என்றார்; ஊர்தல், ஓய்ந்து நடத்தல். ஊழ்கோடென்றார். எருத்திலிட்ட
நுகம் முகத்தே சரியாதவாறு தாங்கும் அளவாகத் தோன்றிய கோடு என்பது
விளக்குதற்கு.  பொரித்தாற்போல்  பொருக்குடைய  அரை,  பொரியரை
யெனப்பட்டது. புதுவரகறிந்த அரிகாலில் உதிர்ந்து கிடக்கும்