யிருக்குமென நினைத்தற்கு இடமுண்டாதலால், மதுரைத் தமிழக்கூத்தன் என்பாரைப் பாண்டிநாட்டுச் சான்றோரென்றும், தமிழக்கூத்தன் நாகன் தேவனாரைச் சோழநாட்டுச் சான்றோரென்றும் மதுரை யென்பது ஏடெழுதினோரால் நேர்ந்த கைப்பிழை யென்றும் தெளியவேண்டும். இந் நூலைத் தொகுத்தோர் இவரை மதுரைத் தமிழக்கூத்தனாரென்றே குறித்துள்ளார். இவர் பாடியனவாக வேறே பாாட்டுகள் இல்லை. இவ்வொரு பாட்டும் சிதைந்து கிடக்கிறது. இதுவும் மூதின்முல்லைப் பாட்டாகும். இதன்கண் வேந்தனொருவனுடைய ஊரியல்பு கூறி, அவ்வூர் வாழும் தலைவன் தனக்குரிய கொடை நலத்தால் மேம்பட்டுப் பரிசிலர்க்குப் பொற்பட்டமணிந்த யானைகளை வழங்குவதில் தவறுவதிலன் என்றும், அவன் மனைவிதனக்குரிய விருந்தோம்புந் துறையில்சிறந்து பாணர்க்கும் ஏனைப் பரிசிலர்க்கும் பேருணவு தந்து பேணுவதில் பிழைபடுவதிலள் என்றும் கூறுகின்றார். | காமரு பழனக் கண்பி னன்ன தூமயிர்க் குறுந்தா ணெடுஞ்செவிக் குறுமுயல் புன்றலைச் சிறாஅர் மன்றத் தார்ப்பிற் படப்பொடுங் கும்மே........பின்பு........ | 5. | .........றூரே மனையோள் | | பாண ரார்த்தவும் பரிசில் ரோம்பவும் ஊணொலி யரவமொடு கைதூ வாளே உயர்மருப் பியானைப் புகழ்முகத் தணிந்த பொலம் புனையோடை...ப் | 10. | பரிசில் பரிசிலர்க் கீய | | உரவுவேற் காளையுங் கைதூ வானே. |
திணையும் துறையு மவை. மதுரைத் தமிழக்கூத்தனார் பாடியது.
உரை: காமரு பழனக் கண்பின் அன்ன - அழகிய நீர் நிலைகளில் வளர்ந்திருக்குஞ் சண்பங் கோரையின் கதிர்போன்ற தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல் - தூய மயரிடர்ந்த குறுகிய கால்களையும் நெடிய காதுகளையுமுடைய குறுமுயல்; புன்றலைச் சிறாஅர் மன்றத் தார்ப்பின் - புல்லிய தலையையுடைய சிறுவர்கள் மன்றத்தின்கண் விளையாடுவோர் செய்யும் ஆரவாரத்துக் கஞ்சி; படப்பு ஒடுங்கும் - வைக்கோற் போருக்குள்ளே பதுங்கும்; ......பின்பு.....வேந்தனூர்- வேந்தனது ஊர்; மனைமோள் பாணர் ஆர்த்தவும் - மனையவள் பாணர்களை யுண்பிக்கவும்; பரிசிலர் ஓம்பவும் - பரிசிலராகிய புலவர் முதலாயினாரை வரவேற்றுப் புறந்தரவும்; ஊணொலி யரவமொடு கைதூவாள் - அவர்கள் உண்பதனா லுண்டாகும் ஆரவாரத்திடையே அச் செயலிற் கையொழி யாளாயினாள்; உயர் மருப்பு யானைப் புகர் முகத்து அணிந்த பொலம்புனை யோடை |