| | களிறுங் கடிமரஞ் சேரா சேர்ந்த | 5. | ஒளிறுவேன் மறவரும் வாய்மூழ்த் தனரே | | இயவரு மறியாப் பல்லயங் கறங்க அன்னோ, பெரும்பே துற்றன்றிவ் வருங்கடி மூதூர் அறனிலண் மன்ற தானே விறன்மலை வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் | 10. | முகைவனப் பேந்திய முற்றா விளமுலைத | | தகைவளர்த் தெடுத்த நகையொடு பவைவளர்த் திருந்தவிப் பண்பி றாயே. |
திணை: காஞ்சி. துளை: மகட்பாற் காஞ்சி. பரணர் பாடியது.
உரை: வேட்ட வேந்தனும் வெஞ்சினத்தினன் - மகட்கொடை விரும்பிய வேந்தனும் வெவ்விய சினமுடையன்: கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான் - செய்யத்தக்க கடமைகளைச் செய்தலை இவள் தந்தையும் செய்ய விரும்புகின்றிலன்; ஒளிறு முகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின் - விளங்குகின்ற முகத்தின்கண் உயர்ந்துள்ள பெரிய தொடிகயணிந்த கோட்டினையுடைய; களிறும் கடிமரம சேரா - களிறுகளும் கடிமரத்தைச் சேர்ந்து நில்லாவாயின். சேர்ந்த ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனர் - வேந்தனும் தந்தையுமாகிய இருவரையும் சேர்ந்துள்ள விளங்குகின்ற வேலேந்திய வீரரும் வாய்மூடியொன்றும் உரையாடாராயினர்; இயவரும் அறியாப் பல்லியம் கறங்க - வாச்சியக்காரராலும் அறியப்படாத பல பல வாச்சியங்கள் முழங்க; இவ்வருங்கடி மூதூர் பெரும் பேதுற்றன்று - இந்தக் கடத்தற்கரிய காவலையுடைய பழைமையான வூர் பெரிய பேதுற வினை யெய்தியுள்ளது; அன்னோ - ஐயோ, விறன்மலை வேங்கை வெற்பின் - விறல்படைத்த மலையாகிய வேங்கை மலையின்கண்; விரிந்த கோங்கின் முகைவனப் பேந்திய முற்றா இளமுலை - பூவிரிந்த கோங்க மரத்தினுடைய அரும்பினது வனப்புடைய முதிராத இள முலையினையுடைய மகளது; தகை வளர்த்தெடுத்த நகையொடு - அழகு மிக வளர்த்தலால் உண்டாகிய மகிழ்ச்சியினையும்; பகை வளர்த்திருந்த பண்பில் தாய் ஊர்க்குப் பகைவர் மிகவுளாராக இருத்தலால் பண்பின்மையினையுமுடைய இத் தாய்; அறன் இலள் மன்ற - அறப்பண்பில்லாள், ஒருதலையாக; எ - று.
வேந்தன் சினத்தினன்; தந்தை செய்யான்; களிறு சேரா; மறவர் வாய் மூழ்த்தனர்; ஊர் பேதுற்றன்று; தாய் அறனிலள் எனக் கூட்டி வினை முடிவு கொள்க. வேந்தற்குச் செய்யக்கடவனவும், மகட்கொடை வேண்டினார்க்குச் செய்யக்கடவனவும் அடங்க, கடவன எனப்பட்டன. மகட்கொடையும் |