பக்கம் எண் :

272

     
 ஆர்கலி யினனே சோணாட் டண்ணல்
மண்ணாள் செல்வ ராயினு மெண்ணார்
கவிகை வாள்வலத் தொழியப் பாணரிற்
பாடிச் சென்றார் வரறோ றகமலர்
5.பீத லானா விலங்கு தொடித் தடக்கைப்
 பாரி பறம்பிற் பனிச்சுனை போலக்
காண்டற் கரிய ளாகிய மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
10. அகிலார் நறும்புகை யைதுசென் றடங்கிய
 கபில நெடுநகர்க் கமழு நாற்றமொடு
மனைச்செறிந் தனளே வாணுத லினியே
அற்றன் றாகலிற் றெற்றெனப் போற்றிக்
காய்நெற் கவளந் தீற்றிக் காவுதொறும்
15.கடுங்கண் யானை காப்பன ரன்றி
 வருத லானார் வேந்தர் தன்னையர்
பொருசமங் கடந்த வுருகெழு நெடுவேற்
குருதி பற்றிய வெருவரு தலையர்
மற்றிவர் மறனு மிற்றாற் றெற்றென
20.யாரா குவர்கொ றாமே நேரிழை
 உருத்த பல்சுணங் கணிந்த
மருப்பிள வளமுலை ஞெமுக்கு வோரே.

     திணையும் துறையு மவை. கபிலர் பாடியது.

     உரை: சோணாட்டண்ணல் ஆர்கலியினன் - சோணாட்டுத் தலைவன்
நிறைந்த   ஆரவாரத்தையுடையன்;   மண்ணாள்   செல்வரா   யினும் -
நிலவுலகத்தையாளும் அரசியற் செல்வமுடையராயினும்; எண்ணார் - அதனை
யெண்ணாராய்; கவிகை வாள் வலத்து ஓழிய - இடக்கவிந்த தம்முடைய
கையில் வலமுண்டாக ஏந்தும் வாளை நீக்கி; பாணரிற் பாடிச் சென்றார் -
பாண்மக்கள்  போலப்  பாடி வந்தோர்;  பரல்  தோறும் அகம் மலர்பு
வருந்தோறும் மனமலர் விரிந்து; ஈதல் ஆனா கொடுத்தலமையாத; இலங்கு
தொடித் தடக்கை - விளங்குகின்ற தொடியணிந்த பெரிய கையையுடைய;
பாரி பறம்பின் பனிச்சுனை போல - வேள் பாரியின் பறம்புமலையிலுள்ள
குளிர்ந்த சுனைநீர் போல; காண்டற் கரியளாகி - பிறர் காண்பதற்கு
அரியவளாய்; மாண்ட பெண்மை நிறைந்த பொலிவொடு ;மாட்சிமையுற்ற