| பசிய தும்பை மாலையினயைும்; எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் - பகைவரை யெறிந்து இலை முறிந்து வடுப்பட்ட வாயையுடைய வேலினையும்; மணநாறு மார்பின் - சந்தனத்தின் மணங் கமழும் மார்பினையுமுடைய; மறப்போர் அகுதை - மறம் பொருந்திய போரைச் செய்யும் அகுதை யென்பானது; குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன - ஆழ்ந்த நீர்நிலைகளையுடைய இடமாகிய கூடல் நகரைப் போன்ற; குவை இருங் கூந்தல் - குவிந்த கரிய கூந்தலையுடையவளை; வருமுலை சேப்ப-தோன்றுகிற இளமுலை சிவக்கும்படி; .............; நம் ஊருள் மரன் - நம்முடைய ஊர்க்குள்ளேயிருக்கும் மரங்கள்; நன்றும் விளங்குறு பராரைய வாயினும் - பெரிதாய் விளங்குதல் பொருந்திய பருத்த அடியையுடைய வாயினும்; வேந்தர் வினை நவில் யானை பிணிப்ப - வேந்தர்கள் தம்முடைய போர் வினை பயின்ற யானைகளைக் கட்டுவதால்; வேர் துளங்கின - வேர்கள் தளர்ந்து அசையத் தொடங் கினவாதலால்; என்னாவது கொல் இவ்வூர் என்னாகுமோ எ - று.
கள்ளுண்போர் இடையிடையே கறித்தற்பொருட்டு இ்ஞ்சியும் இறைச்சி வற்றலும் மீனும் தின்ப. அவற்றுட் சில பற்களிடையே புகுந்து கொள்ளின் நாவாற் கோலுதலும், அதனாலும் இயலாதவழித் துரும்பு கொண்டு குத்தி யெடுத்தலும் இயல்பு. இவ்வகையில் பன்முறையும் பல்லிடை நுழைந்து சிவப்பேறுதல் கண்டு, அச் சிவப்பைக் குருதி தோய்ந்து விளங்கும் வாள் வாய்க்கு உவமம் கூறினார். கள்ளுண் போர் இடையே சிலவற்றை யுண்பரெ ன்பதை இஞ்சி வீவிராய பைந்தார் பூட்டி (பதிற். 43) என்பதன் பழைய வுரையிற் காண்க. அகுதை யென்பான் சங்கத் தொகை நூல்களில் காணப்படும் வள்ளல்களுள் ஒருவன். பெருங் காற்று மழைகளால் தாக்குண்டும் பல்லாண்டுகளாய்ச் சிலயாது நின்று அடி பருத்திருப்பதால், நன்று விளங்குறு பராரைய என்றார். போர் செய்யும் துறையில் நன்கு பயின்ற யானைகளை வினை நவில் யானை யென்பது வழக்கு; செறுநர் செல்சமந் தொலைத்த வினை நவில் யானை (பதிற். 82) எனச் சான்றோர் வழங்குவது காண்க. ஊருள் மரம் வேர் துளங்கின் வெனவே, ஊரழிதல் சொல்ல வேண்டாமையின், என்னாவது கொல் என்றார். தானே யென்பது கட்டுரைச்சுவை குறித்து நின்றது. இடையே அடிகள் சில சிதைந்தமையின், பொருண்முடிவு விளங்கவில்லை. நறுங்கள்ளின் சில இட, உண்போன், பல்லிடை நாதேர்பு கோலச் சிவந்தாங்கு ஒளிறு வாள் அடக் குழைந்த தும்பையும், வேலும் மார்புமுடையே அகுதையது கூடலன்ன கூந்தலுடையாள் என இயையும். மரன் பராரையவாயினும், வேந்தர் யானை பிணிப்ப, வேர் துளங்கின; ஆகலின், என்னாவது கொல் எனக் கூட்டி வினை முடிவு செய்க.
விளக்கம்: கதுவாய் வேல், முரிந்து வடுப்பட்ட வேல், அகுதையை, இன்கடுங் கள்ளின் அகுதை (குறுந். 298) என்றும் நன்மா வீசும் வண்மகிழகுதை (அகம். 112) என்றும் சான்றோர் கூறுவதால், அகுதை கள்ளால் சிறப்பெய்தியவனென்பதை இனிது காணலாம். குண்டு நீரென்றது, ஆழ்ந்த |