பக்கம் எண் :

3

     

     இருங்கோவே புலிகடிமாஅல், கிழவ, நாடுகிழவோய், நீ இப்படிப்பட்ட
உயர்ந்த குடியிற் பிறந்தவனாதலால், யான்தர இவரைக் கொண்மதி யெனக்
கூட்டி வினை முடிவு செய்க. யான் இவருடைய தந்தை தோழனாதலானும்
அந்தணனாதலானும் யான் தர இவரைக் கோடற்குக் குறையில்லை யென்பது
கருத்து.

    விளக்கம்: இருங்கோவளுக்குபாரிமகளிரைமுன்னர்க் காட்டிப்
பின் அவர்கட்கும்தனக்கும்  உண்டாகிய  தொடர்புகாட்டி, “யான்தர
இவரைக்கொள்க”என்கின்றாராகலின்,  முதலில்பாரிமகளிரைக் 
கூறினார்.இரவலர்க்கு ஊரும், முல்லைக்குத் தேரும் தந்தான் என்பவர்,
“தேருடன்” என்பதற்குத் “தேருடனே புரவியும்” முல்லக் கீத்தான் என்று
உரைகாரர்கூறுகின்றார்.  இவ்வாறுகூறாது, முல்லைக் கொடியின்
நிலைகண்டு பிறந்த அருளால் முன்பின்நினையாது  உடனே,தேரை
ஈந்தான் என்றிருப்பின்சிறப்பாகஇருக்கும்.  பறம்பு - பறம்பு மலை.
இவர் தந்தைக்குத் தோழன்;அதனால் யானும் இவர்கட்குத் தந்தையென்பார்,
“இவர் என் மகளிர்” என்றார். அந்தணரும் மகட்கொடை நேர்தற்குரிய
ரென்பது தோன்ற “அந்தணன்” என்றார். விசுவபுராண சாரமென்னும்
தமிழ்நூலையும், இரட்டையர் செய்த தெய்விகவுலாவையும் துணையாகக்
கொண்டு, வடபால் முனிவன் என்றது சம்புமுனிவனாக
இருக்கலாமென டாக்டர். உ. வே. சா. ஐயரவர்கள் “ஊகிக்கின்றார்கள்.”
துவரையென்றது, வடநாட்டில் “நிலங்கடந்த நெடுமுடி யண்ணல்” இருந்து
ஆட்சிபுரிந்த துவரை யென்றும், அவன்பாலிருந்து மலயமாதவனான
குறுமுனிவன் கொணர்ந்தவர் வேளிர்கள் என்றும் பதினெண்
குடியினரென்றும் நச்சினார்க்கினியர் குறிக்கின்றார். “துவரைமாநகர்
நின்று போந்த தொன்மைபார்த்துக் கிள்ளிவேந்தன், நிகரில் தென்கவிர்
நாடு தன்னில் நிகழ் வித்த நிதியாளர்”* எனவரும் கல்வெட்டால்,
துவரை வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டிலே தொன்மையுடையதாகக்
காணப்படுவது நச்சினார்க்கினியர் கூற்றை வற்புறுத்துகின்றது. மைசூர்
நாட்டுத் துவரை பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே
உண்டாகியநகரம். இத்துவரையிற் றோன்றி மேம்பட்ட ஹொய்சள
வேந்தரோடு புலிகடிமாலாகிய இருங்கோவேளை இணைத்துக் கண்டு,
புலிகடிமால் என்றது ஹொய்சள என்ற தொடரின் தமிழ்ப் பெயராகக்
கருவதுமுண்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் மைசூர் நாட்டில் இருந்து
ஆட்சி செலுத்திய ஹொய்சள வேந்தருடைய கட்வெட்டுக்களுள், பண்டை
நாளில்யதுகுலத்தில் தோன்றிய  சளவென்ற  பெயரினனானவேந்த
னொருவன் சஃகிய மலைகளிடையே (மேலை வரைத் தொடர Western
Ghats) வேட்டைபுரியுங்கால் முயலொன்று புலியொடு பொருவது கண்டு
வியப்புற்று இந்நிலம் மிக்க வன்மை நல்கும் பெருநிலம் போலும் என
எண்ணியவனாய் அவற்றைத் தொடர்ந்து சென்றானாக, அங்கே தவம்
புரிந்துவந்த முனிவனொருவன் புலியைக் கண்டு,


*Pudukkota State. Ins. 120.