| ஆண்டோர் - இந்நிலவுலகம் இன்பநிலைய மாமாறு ஆண்ட வேந்தர்; சிலர் - சிலராவர்; பெரும - பெருமானே; இனி கேள் - இப்பொழுது யான் சொல்வதைக் கேட்பாயாக; அஃது அறியாதோர் பலர் - அவ்வாறு அவர் வாழுந்திறத்தையறியாதவர் பலர்; அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது - அவ்வறியாதாருடைய செல்வமும் நிலைத்து நில்லாது; அதன் பண்பு இன்னும் அற்று - அச் செல்வத்தின் நிலையாப் பண்பு இப்பொழுதும் அவ்வாறேயாம்; அதனால் நிச்சமும் ஒழுக்கமும் முட்டிலை - ஆதலால் நாடொறும் நினக்குரிய ஒழுக்கத்தில் குன்றாதொழிக; பரிசில் நச்சுவர நிரப்பல் ஓம்புமதி - நின்பாற் பொருள்நச்சி வருவார் வர அவர்கட்கு வேண்டும் பொருளை நிரம்ப நல்குதலைப் பாதுகாப்பாயாக; அச்சுவரப் பாறு இறை கொண்ட பறந்தலை - கண்டார்க்கு அச்சமுண்டமாறு கேடு பொருந்தியிருத்தலால் பாழிடமாகிய; மாறுதக - மாறுபட்ட இடத்துக்கத் தக; கள்ளி போகிய களரி மருங்கின் - கள்ளிகள் ஓங்கியுள்ள பிணஞ்சுடு களத்தின்கள்; வெள்ளில் நிறுத்த பின்றை - பாடையை நிறுத்தி பின்பு; புல்லகத்துக் கள்ளொடு இட்ட சில்லவிழ் வல்சி - பரப்பிய தருப்பைப் புல்லின்மேல் கள்ளுடனே படைக்கப்பட்ட சில சோறாகிய உணவை; புலையன் ஏவ - புலையன் உண்ணுமாறு படைக்க; புல்மேல் அமர்ந்துண்டு - தருப்பைப் புல்லின்மேல் இருந்து உண்டு; அழல்வாய்ப் புக்க பின்னும் - சுடலைவாய்த் தீயில் வெந்து சாம்பரானது கண்ட பின்னும்; பகுத்துண்டோர் பலர் வாய்த்திரார் - பகுத்துண்டு வாழும் வலருள்ளும் பலர் ஒழுக்கங்குன்றாத புகழ் வாயத்திலர்; எ - று.
பெரிதுண்டல் நோயும், கழிசினம் தீமையும் பயத்தலின், பெரிதாராச் சிறு சினத்தர் என்றும், தெளிந்த அறிவுடைமை தோன்ற, சில சொல் லுவரென்றும் கூறினார். பல கேள்வியின் பயன் நுண்ணுணர்வுடைமை. நுண்ணுணர்வுடைார்க்கப் பணிவின்கண் உவப்பும் பிறரை இன்சொல்லாற் றழீ இக்கோடலும் இயல்பு. பிறர் பிழைபட்ட பல சொற்கள் கூறினும் பொருள் தேர்ந்து தழீஇக் கொள்வரரெனினுமாம்; வல்லாராயினும் புறம றைத்துச் சென்றோரைச்சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி, நல்லிதின் இயக்கம் (மலைபடு. 78-80) நயனு டைமை தோன்ற, தாழுவந்து தழூஉமொழியர் என்றாரென்றுமாம். பலர்க்கம் உதவும்போது மிக்க பயன் கருவனவற்றைத் தேர்ந்து உதவுவரென்பார், பயனுறுப்ப பலர்க் காற்றி என்றார். இப்பெற்றியோர் இருப்பு, உலகர்க்கு அரணாய் இன்பத்துக் காக்கமாதலின், ஏமமாக இந்நிலை மாண்டோர் எனல் வேண்டிற்று. ஏமம், இன்பம். தெய்ய; அசை நிலை. தகையென்பதே பாடமாயின் பெருந்தகையே யென விளியாக்குக. இன்னோர் பெரிய தவமுடைய ராதலின், ஆண்டோர் சிலராயினர். தவமுடையாராதற்கேது நிலையாமையறிவாகலின், அதனை அஃது என்றொழிந்தார். அறியாரது அறியாமை பற்றிச் செல்வம் நிலை பெறாதென்பார், அன்னோர் செல்வமும் மன்னி நில்லா தென்றும், நிலையாமை செவ்வத்துக்கென்றுமுள்ளதோரியல் பென்றற்கு இன்னும் அற்றதன் |