பக்கம் எண் :

324

     

களிறொடு - தெருண்ட நடையினையுடைய குதிரையும் யானையும்; தன்
அருள் பாடுநர்க்கு அருணலம் பாடும் பொருநர் முதலாயினார்க்கு; நன்கு
அருளியும் - மிகக் கொடுத்தும்; ஒன்னார்க் கொன்ற தன் தாள் சேருநர்க்கு
உருள் நடைத் தேர் பல இனி  தீத்தும் -  பகைவரைக்  கொன்ற   தன்
தாளாண்மையைப் பாராட்டிப் பாடும் புலவர்க்கு உருண்டு செல்லும் தேர்கள்
பல வுவந்தளித்தும்; புரிமாலையர் பாடினிக்கு - பொன்னரிமாலை பெறற்குரிய
பாடினிகட்கும்;  பொலந்தாமரைப்  பூம்பாணரொடு -  பொன்னாற் செய்த
தாமரைப் பூவைப் பெறற்குரிய பாணர்கட்கும்;கலந்தளைஇ நீள் இருக்கையால்
- தம்மிற்   கலந்து   வேண்டுவன  நல்கி  அளவளாவியிருக்கும் நெடிய
இருக்கைக்கண்; பொறையொடு மலிந்த கற்பின் - பொறுமைக் குணங்களால்
நிறைந்த கற்பிணையும்; மான் நோக்கின் - மான்போலுங் கண்களையும்;
வில்லென  விலங்கிய  புருவத்து - வில்போல்  வளைந்த  புருவத்தையும்
வல்லென  நல்கின் - வல்லென  ஒரு  சொல்   வழங்கின்;  நாவஞ்சும்
முள்ளெயிற்று   மகளிர் - நா  அஞ்சு  தற்கேதுவாகிய   முட்போன்ற
பற்களையுமுடைய மகளிர்; அல்குல் தாங்கா அசைஇ - அல்குலிலணிந்த
மேகலையைத் தாங்கமாட்டாது  தளர்ந்து; மெல்லென - மென்மையாக;
கலங்கலந் தேறல்   பொலங்கலத்   தேந்தி - கலங்கலாகிய  கள்ளைப்
பொன்வள்ளத் தேந்தி; அமிழ்தென மடுப்ப மாந்தி - அமிழ்துண்பிப்பாரைப்
போல வுண்பிக்க  வுண்டும்;  இகழ்விலன் - நிலையாமை  யுணர்வை
மறப்பதிலன்; நில்லா  உலகத்து  நிலையாமை  நீ  சொல்ல  வேண்டா -
நிலைபேறில்லாத    உலகியலின்   நிலைாமை  யியல்பை  நீ  எடுத்துச்
சொல்லவேண்டா; தோன்றல் - எங்கள் தலைவனாகிய அவன்; முந்தறிந்த
முழுதுணர் கேள்வியன்- முன்பே யறிந்து மறவா தொழுகும் உணரத்தகுவன
வற்றை முற்றவுணர்ந்த கேள்வியறிவுடையன்; ஆகலின் - ஆதலால்...;
விரகினான் - விரகின்கண்: எ - று.


     கார்காலத்து மழைமுகிலிற் றோன்றும் இடி எதிர்பாரா வகையில்
திடீரெனத் தோன்றி முழங்குவது போலக் கூற்றுவன் தோன்றி யச்சுறுத்தலின்
“காரெதிர் உருமு”  எடுத்தோதப்பட்டது.  எளவிறந்த  உயிர்   இரவு
பகலென்னாது ஓய்வின்றி யுண்டும்  அமையாது மேன்  மேலும் உண்ட
வண்ணமிருத்தலின், “ஆருயிர்க் கலமரும் ஆராக் கூற்றம்” என்றார்.
கூற்றம்: விளி. வேள்வி செய்தலையுடைய அந்தணர்தாம் பெறுவனவற்றை
நீர்வார்த்துத்தரப்பெ.றவதையே இயல்பாகவுடைய ரென்பதுபற்றி, “அருங்கலம்
நீரொடுசிதறி” யென்றார். “ஏற்ற பார்ப்பார்க்கும் ஈர்ங்கை நிறைய, பூவும்
பொன்னும் புனல்படச் சொரிந்து” (புறம். 367) என்றார் பிறரும். கதியும்
சாரியையும் நன்கு பயின்ற குதிரையின் நடை மிகவும் தெளிவாக இருத்தலின்,
“தெருணடைமா” எனச்சிறப்பிக்கப்பட்டது. தாயினும் சிறந்த அன்புகொண்டு
ஈதலின், பலரென்றது இரவலரை யாயிற்று. தாள் சேருநர் என்றது அருள்
வேண்.டிய வேந்தரையென்றுமாம்.