பக்கம் எண் :

332

     

அறியலாம். ஐயாதிச் சிறு வெண்டேரையார் பாடிய தலைவனையே இவரும்
பாடியிருத்தலின்,   இருவரும்  ஒரு  காலத்த  வரென்பது தெளிவு. இப்
பாட்டின்கண், போர் வேட்கை கொண்டு நாளும் அதனையே செய்து சிறந்த
வேந்தனொருவனைக் கண்ட, “வேந்தே பாணற்குத் தாமரையும் விறலிக்கு
மாலையும் தந்து அவரும் பிறருமாகிய சுற்றம் சூழ விருந்து ஆட்டுக் கறியும்
கள்ளும் உண்டு, இரவலரை இவ்வாறே யுண்பித்து மகிழ்வோமாக; முதுமரப்
பொந்திலிருந்து கூகைக்கோழி கூவும் இடுகாட்டையாம் அடைவோமாயின்,
இவ் வுண்டாட்டினைப் பெறுவது அரிது” என அறிவுறுத்தியுள்ளார்.

 வாடா மாலை பாடினி யணியப்
பாணன் சென்னிக் கேணி பூவா
எரிமரு டாமரைப் பெருமலர் தயங்க
மைவிடை யிரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்
 5.காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை
 நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
உண்டுந் தின்று மிரப்போர்க் கீய்ந்தும்
மகிழ்கம் வம்மோ மறப்போ ரோயே
அரிய வாகலு முரிய பெரும
 10.நிலம்பக வீழ்ந்த வலங்கற் பல்வேர்
 முதுமரப் பொத்திற் கதுமென வியம்பும்
கூகைக் கோழி யானாத்
தாழிய பெருங்கா டெக்திய ஞான்றே.

     திணையும் துறையு மவை. அவனைக் கூகைக்கோழியார் பாடியது.

     உரை: பாடினி வாடா மாலை யணிய - பாண்மகளாகிய பாடினி
பொன்மாலை யணியவும் பாணர் சென்னிக் கேணி பூவா எரிமருள் தாமரைப்
பெருமலர் தயங்க - பாணன் தன் சென்னியின்கண் நீர்நிலையிற் பூவாத
எரிபோலும் பெரிய பொற்றாமரைப் வூணிந்து விளங்கவும்; மைவிடை
இரும்போத்து - கரிய ஆட்டுக்கிடாயை வீழ்த்து; செந்தீச் சேர்த்தி - அதன்
ஊனைத் தீயிலிட்டுச் சுட்டு; காயம் கனிந்த கண்ணகன் கொழுங்குறை - காயம்
பெய்தட்ட இடமகன்ற கொழுவிய ஊனுணவை; நறவுண் செவ்வாய் நாத்திறம்
பெயர்ப்ப்த் தின்றும் உண்டும் - கள்ளுண்ணும் சிவந்த வாயிலிட்டு நாவானது
இரு மருங்கும் புரட்டிக்கொடுக்கத் தின்றும் உண்டும்;இரப்போர்க்கு ஈந்தும்-
இரவலரை யுண்பித்தும்; மகிழ்கம் வம்மோ - மகிழ்வேம் வருவாாக; மறப்
போரோய் - மறம் பொருந்திய போரைச்செய்பவனே; நிலம்பக வீழ்ந்த
அலங்கல் பல்வேர் - நிலம் பிளவுபடக் கீழே சென்ற அசகைின்ற பலவாகிய
வேர்களையுடைய; முதுமரப் பொத்தின்