உரை: அகன்றலை வையத்துப் புரவலர்க் காணாது - அகன்ற இடத் தையுடைய நிலவுலகத்தின்கண் எம்மைப் பாதுகாக்கும் வேந்தரைக் காணப் பெறாமையால்; மரந்தலைச் சேர்ந்து - மன்றத் தின்கண் நிற்கும் வேப்ப மரத்தின் அடியிலே இருந்து; பட்டினி வைகி - பட்டினி கிடந்த; போதவிழ் அலரி நாரின் தொடுத்து - அரும்பு மலர்ந்த பூக்களை நாரால் மாலையாகத் தொடுத்து; தயங்கு இரும்பித்தை பொலியச் சூடி - விளங்குகின்ற தலைமயிர் அழகுறச் சூடிக்கொண்டு; பறை யொடு தகைத்த வைத்த பையை யுடையேனாய்; முரவு வாய் ஆடுறு குழிசி பாடின்று தூக்கி - சிதைந்த வாயையுடைய சமைத்தற்கமைந்த பானையைக் கெடாதபடி மெல்ல எடுத்து வைத்து; மன்ற வேம்பின் ஒண்பூ உறைப்ப - மன்றத்தின் கண் நின்ற அந்த வேம்பினது ஒள்ளிய பூவுதிரே; அரிசியின்மையின் - சோற்றுக்குரிய அரிசி யில்லாமையாலே; குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன் - மிக இன்றியமையாத வேறு எச் செயலையும் செய்ய விரும்பாது பொருள் நசையே கொண்ட இருக்கையினை யுடையேனாய்; ஆரிடை நீந்தி - பின்பு அரிய வழிகள் பல கடந்து; கூர் வாய் இரும்படை நீரின் மிளிர்ப்ப - கூரிய வாயைுடை பெரிய வாட்படைகள் தம்முடைய நீர்மைப் படி மேலும் கீழுமாகச்சுழல; வருகணை வாளி தம்மை நோக்கி - வரும் அம்புகளை; ....................அன்பின்று தலைஇ ......................அன்பின்றிப் பகைவரை ஏறட்டு வேற்சென்று; இரை முரைசு ஆர்க்கும் உரைசால் பாசறை - ஒலிக்கின்ற முரசு முழங்கும் புகழமைந்த பாசறைக்கண்ணே தங்கி; வில்லேர் உழவின் நின் நல்லிசை யுள்ளி - வில்லை யேராகக் கொண்டு போராகிய உழவினைச் செய்யும் நின்னுடைய நல்ல புகழை நினைந்து; குறைத்தலைப் படு பிணன் எதிர - தலைகள் வெட்டுண்டு குறை யுடலங்களாய் வீழும் பிணங்கள் தன்னெதிலே குவிய; போர்பு அழித்து - அப் பிணக்குவையாகிய போரை யழித்து; யானை யெருத்தின் வாள் ம்டலோச்சி - யானைகளாகிய எருதுகளை வாளாகிய பனைமடல் கொண்டு சூழ்வரச் செலுத்தி; அதரி திரித்த ஆள் உகு கடா வின் கடா - விடுதலால் தலை வேறு உடல் வேறாகப் பிரிந்து தொக்க களத்தின்கண்; மதியத்தன்ன என் விசியுறு தடாரி முழுமதிபோன்ற - வாராற் கட்டப்ட்ட என் தடாரிப் பறையை; அகன்கண் அரிர அகன்ற - கண்ணதிரும்படி யறைந்து; ஆகுளி தொடாலின் - ஆகுளிப் பறைகை் கொட்டிக்கொண்டு; பணை மருள் நெடுந்தாள் - பறைபோன்ற நெடிய கால்களையும்; பல்பிணர்த் தடக்கை - பலவாகிய சருச்சரைகளையுடைய பெரிய கையையும்; புகர் முக முகவைக்கு வந்திசின் - புகர்பொருந்திய முகத்தையுமுடைய களிறாகிய பரிசில்பொருட்டு வந்தேன்; |