பக்கம் எண் :

385

     

     ஓவியர் பெருமான் என்பது ஓய்மான் என மருவிற்று, அருமருந்தன்ன
என்பது ‘அருமந்த’ என்பதுபோல.

 யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை
அவனே பெறுகவென் னாவிசை நுவறல்
நெல்லரி தொழுவர் கூர்வாண் மழுங்கிற்
பின்னைமறத்தோ டரியக் கல்செத் து
 5.அள்ளல் யாமைக் கூன்புறத் துரிஞ்சும்
 நெல்லமல் புரவி னிலங்க கிழவோன்
வில்லி யாதன் கிணயேம் பெரும
குறுந்தா ளேற்றைக் கொழுங்க ணல்விளர்
நறுநெய் யுருக்கி நாட்சோ றீயா
 10.வல்ல னெந்தை பசிதீர்த் றீயா
 கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்
கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
விண்டோய் தலைய குன்றம் பின்பட
நசைதர வந்தனென் யானே வசையில்
 15.தாயிறூஉங் குழவி போலத்
 திருவுடைத் திருமனை யதுதோன்று கமழ்புகை
வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
குறும்படு குண்டகழ் நீண்மதி லூரே;

     திணை: அது. துறை:  பரிசிற்றுறை.  ஓய்மான்  வில்லியாதனைப்
புறத்திணை நன்னாகனார் பாடியது:


     உரை: அவன்  தாணிழல்  வாழ்க்கையே  யான் பெறுக - அவனது
அருணிழலில் வாழும் எனக்கு உண்டாகுக; என் நாவிசை நுவறல் அவனே
பெறுக - என் நாவால் புகழ்ந்து பாடப்படும் பாட்டிசையை அவன் ஒருவனே
பெறுவானாக; நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின் - நெல்லறுக்குங்
களமர்  தம்முடைய  கூரிய  அரிவாள்  வாய் மழுங்குமாயின், பின்னை -
பின்னையும்; மறத்தோடு அரிய - மறங்குன்றாது அரிது வேண்டி; கல் செத்து
- தீட்டுக் கல்லாகக் கருதி; அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும் -
சேற்றிற் படிந்திருக்கும் யாமையின் வளைந்த முதுகோட்டில் தீட்டும்; நெல்
லமல  புரவின்  இலங்கை  கிழவோன்  -  நெற்பயிர்   நெருங்கிய
விளைவயல்களையுயை மா விலங்கையென்னும் ஊர்க்குத் தலைவனான;
வில்லியாதன் கிணையேம் - ஓய்மான் வில்லியாதனுக்குக் கிணைப்
பொருநராவோம்; பெரும - பெருமானே; எந்தை - எங்கள் தலைவனான
அவன்