பக்கம் எண் :

396

     

பசித்துன்பற நல்குவன் - நீ செல்லின் நின் பசித் துன்பம் நீங்குமாறு
கொடுப்பன்; என்ப நின் பொருநர் - என்று கூறாநின்றனர் நின்னுடைய
பொருநர்; பெரும - பெருமானே; அதற்கொண்டு - அதனால்; முன்னாள்விட்ட
மூதறி சிறாரும் - முன்னாள் நீ பரிசில் தந்து விட்ட தொன்முறையறிந்த
சிறுவரும்; யானும்-; ஏழ்மணியங்கேழ் அணி உத்தி - எழுச்சியையுடைய
மணியையும் நிறம் பொருந்திய பொறிகளையும்; கட்கேள்விக் கவைநாவின் -
கண்ணிற் பொருந்திய செவியையும் சுவைத்த நாவையுமுடைய; நிறன் உற்ற
அரா அப் போலும் - நிறம்பொருந்திய பாம்பு தன் தோலை யுரிந்து
நீக்கினாற்போல; வறன் ஒரீஇ - வறுமையின் நீங்கி; வழங்கு வாய்ப்ப -
பிறர்க்கும் யாம் வழங்குதல் அமைய; கடுமான் தோன்றல் - கடுகிச் செல்லும்
குதிரைகளையுடைய தலைவனே; விடுமதி - எமக்கு வேண்டுவன தந்து
விடைதருவாயாக; முந்நீர் உடுத்த இவ்வியனுலகு அறிய நினதே - கடல்
சூழ்ந்த இவ்வகன்ற உலகம் சான்றோர் பலரும் அறிய நின்னுடையதேயாகும்;
கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை அறிய - எனது நெட்டியின்
காம்புபோன்ற தெளிந்த கண்கணையுடைய பெரிய தடாரிப்பறை பலருமறிய
என்னுடையதாதல்போல; கண்ணகத்து யாத்த நுண்ணரிச் சிறுகோல் - இதன்
கண்ணிற் கட்டப்பட்ட  நுண்ணிய  அரித்த  வோசையை  யெழுப்பும்
சிறியகோலானது; எறிதொறும் - அடிக்குந்தோறும்; நுடங்கியாங்கு - தடாரியின்
கண் நடுங்குவது போல; நின் பகைஞர் கேட்டொறும் நடுங்க - நின் பகைவர்
கேட்குந்தோறும் மனம் நடுங்குமாறு; பிறர் வேத்தவையான் - பிற
வேந்தருடைய அவையின்கண்; வென்ற தேர் ஏத்துவென் - நின்னால்
வெல்லப்பட்ட தேர்களைச் சொல்லிப் பாராட்டிப் புகழ்வேன்; எ - று.


     கலங்களிற் சென்று அருமணம் (பர்மா), சாவகம் சீனம் ஈழம் முதலிய
நாடுகளிலிருந்து பெரும்பொருள் ஈட்டி வருவது பண்டைத் தமிழர் மரபு.
அந்நிலையிற் பகைவர் கடலிற் கலஞ்செலுத்திப் போந்து சூறையாடுபவாதலின்
அவர்களொடு பொருது அவர் செய்யும் குறும் பினைக் களைதல் வேண்டிக்
கடற்படை வேண்டியிருந்தமையின், கடற்படையும் அதுகொண்டு பெறும்
பெரும்பொருளும் எடுத்தோதப் பட்டன. சோழன் நலங்கிள்ளி யைப் பாடிய
நாவால் பிறவேந்தரைப் பாடி அவர்தரும் பொருளை விரும்பேம்; பொருள்
குறித்துப் பிறர்பாற் செல்லவேண்டாத அளவு அவன் எங்கட்கு வேண்டுவன
நிரம்பத் தருவன், அவனது நெடுவாழ்வே எங்கட்குப் பெருஞ்செல்வமாம்
என்பான், “அவற் பாடுதும் அவன்றாள் வாழிய” என்றான். முன்னாள் விட்ட
சிறாரென்றது. முன்னாள் பரிசில் தந்துவிடப்பட்ட சிறுவர். ஆண்டால்
இளையராயினாரை, “சிறாஅர்” என்றார். மூதறிவு, பொருநர்க்கெனப்
பழைமையாய்த் தொன்றுதொட்டு வரும் பாடற்றுறை யறிவு. ஏழ்மணி,
எழுச்சியையுடையமணி. எழுச்சி, உயர்ந்தமதிப்பு. பாம்பின் கட்பொறியே
செவிப்புலனையு முடைய தென்பது பண்டையோர் கொள்கை; பாம்பைக்
கட்செவியென்றும் வழக்கும் நாட்டில்