பக்கம் எண் :

413

     
 திருந்துதொழிற் பலபகடு
பகைப்புல மன்னர் பணிதியை தந்துநின்
நகைப்புல வாணர் நல்குர வகற்றி
மிகப்பொலியர்தன் சேவடியத்தையென்
15றியாஅ னிசைப்பி னனிநன்றெனாப்
 பலபிற வாழ்த்த விருந்தோர்தங் கோன்,,,
மருவவின்னக ரகன் கடைத்தலைத்
திருந்துகழற் சேவடி குறுகல் வேண்டி
வென்றிரங்கும் விறன் முரசினோன்
20என்சிறுமையி னிழித்து நோக்கான்
 தன்பெருமையின் றகவுநோக்கிக்
குன்றுறழ்ந்த களிறென்கோ
கொய்யுளைய மாவென்கோ
மன்றுநிறையு நிரையென்கோ
25மனைக்களமரொடு களமென்கோ
 ஆங்கவை. கனவென மருள வல்லே நனவின்
நல்கி யோனே நசைச றோன்றல்
ஊழி வாழி பூழியர் பெருமகன்
பிணர்மருப் பியானைச் செருமிகு நோன்றாட்
30செல்வக் கடுங்கோ வாழி யாதன்
 என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண்
விடுவர் மாதோ நெடிதே நில்லாப்
புல்லிலே வஞ்சிப் புறமதி லலைக்கும்
கல்லென் பொருநை மணலினு மாங்கட்
35பல்லுார் சுற்றிய கழனி
 எல்லாம் விளையு நெல்லினும் பலவே.

     திணையும் துறையு மவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலியாதனார் பாடியது.

     உரை: வள்ளுகிர  வயலாமை - கூரிய  நகங்களையுடைய வயலிடத்து
வாழும்  யாமையினது;  வெள்ளகடு  கண்டன்ன - வெண்மையான வயிற்றைக்
கண்டாற்  போன்ற;  வீங்கு  விசிப்  புதுப் போர்வை - பெரிதாய்  வலித்துக்
கட்டப்பட்ட புதிய தோல் போர்த்த;தெண்கண் மாக்கிணை இயக்கி -தெளிந்த
கண்ணையுடைய  பெரிய தடாரிப்  பறையை   யறைந்து;  என்றும்
மாறுகொண்டோர்   மதில்  இடறி- எப்போதும்  பகைவருடைய
மதில்களைத் தகர்த்து; நீறாடிய நறுங்கவுள -
நீறு