| | கொடுத்தோ னெந்தை கொடைமேந் தோன்றல் நுண்ணூற் றடக்கையி னாமருப் பாக வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம் | 10 | பெயர்க்கும் பண்ணற் கேட்டிரவன்... | | வினைப்பக டேற்ற மெழீஇக் கிணைதொடா நாடொறும் பாடே னாயி னானா மணிகிளர் முன்றிற் றென்னவன் மருகன் பிணிமுர சிரங்கும் பீடுகெழு தானை | 15 | அண்ணல் யானை வழுதி | | கண்மா றலீஇயரென் பெருங்கிளைப் புரவே. |
திணை: அது, துறை; இயன்மொழி - சிறுகுடிகிழான் பண்ணனை மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார் பாடியது.
உரை: வெள்ளி தென் புறத்துறைய - வெள்ளியாகிய மீன் தென்றிசையில் நிற்க; வினைவயல் பள்ளம் வாடிய பயனில்காலை - விளை வயல்களும் நீர்நிலைகளும் வற்றிய பயனில்லாத காலமாகிய வற்கடத்தில்; இரும்பறைக் கிணைமகன் சென்றவன் - பெரிய பறையாகிய தடாரியை இசைக்கும் பொருநன் சென்று; பெரும்பெயர் சிறுகுடிகிழான் பண்ணற் பொருந்திய - பெரிய புகழையுடைய சிறுகுடிக்குரியனாகிய பண்ணனையடைந்து; தன்நிலை அறியுநனாக- தனது வறுமைநிலையையறிவித்தானாக; அந்நிலை - அப்பொழுதே; இடுக்கண் இரியல்போக - அவனுற்ற பசித்துன்பம் நீங்குமாறு; உடைய கொடுத்தோன் - தான் உடைய பொருள்களைக் கொடுத்தான்; எந்தை - எங்கள் தலைவனும்; கொடை மேந்தோன்றல் - கொடையால் மேம்பட்ட தோன்றலுமாகிய பண்ணன்; நுணணூல் தடக்கையின் நா மருப்பாக - நுண்ணிய நூற்பொருளே பெரிய கையாகவும் நாவே மருப்பாகவும்; வெல்லும் வாய்மொழிப் புலவர்க்கு - வெல்லுகின்ற வாய்மொழியாகிய களிற்றையுடைய புலவர்கட்கு; புல்லுடை விளைநிலம் பெயர்க்கும் - பண்ணன் கேட்டிர் நெல்லாகிய புல்லையுடைய விளைவயல்களை நல்கும் பண்ணனையான் கூறக்கேட்பீராக்;...அவன் வினைப்பகடு ஏற்றம் எழீஇக் கிணைதொடா - அவனுடைய உழவுவினைக் குரிய எருதுகளையும் ஏற்றத்தையும் யாழிலிட்டிசைத்துக் கிணைப் பறையைக் கொட்டி; நாடொறும் பாடேனாயின் - நாளும் பாடா தொழிவேனாயின்; ஆனா மணிகிளர் முன்றில் - நீங்காத ஆராய்ச்சி மணி கட்டியிருக்கும் முன்றிலையுடைய; தென்னவன் மருகள் - பாண்டியன் வழித்தோன்றலான; பிணி முரசு இரங்கும் நீடு கெழு தானை - வாராற்கட்டப்பட்ட |