பக்கம் எண் :

424

     
 அறவை நெஞ்சத் தாயர் வளரும்
மறவை நெஞ்சத் தாயி லாளார்
அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ்
விழவணி வியன்கள மன்ன முற்றத்
5தார்வலர் குறுகி னல்லது காவலர்
 கனவினுங் குறுகாக் கடியுடை வியனகர்
மலைக்கணத் தன்ன மாடஞ் சிலம்பவென்
அரிக்குரற் றடாரி யிரிய வொற்றிப்
பாடி நின்ற பன்னா ளன்றியும்
10சென்ற ஞான்றைச் சென்றுபடரிரவின்
 வந்ததற் கொண்ட நெடுங்கடை நின்ற
புன்றலைப் பொருந னளியன் றானெனத்
தன்னுழைக் குறுகல் வேண்டி யென்னரை
முதுநீர்ப் பாசி யன்ன வுடைகளைந்து
15திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ
 மகிழ்தரன் மரபின் மட்டே யன்றியும்
அமிழ்தன மரபி னூன்றுவை யடிசில்
வெள்ளி வெண்கலத் தூட்ட லன்றி
முன்னூர்ப் பொதியிற் சேர்ந்த மென்னடை
20இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகன்ற
 அகடுநனை வேங்கை வீகண் டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்
கொண்டி பெறுகென் றோனே யுண்டுறை
மலையல ரணியுந் தலைநீர் நாடன்
25கண்டாற் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி...
 வானறி யலவென்ப ரடுபசி போக்கல்
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ வறியலர் காண்பறி யலரே.

   திணையும் துறையு மவை. அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார்
பாடியது.

     உரை: அறவை நெஞ்சத்து ஆயர் - அறம்புரியும் நெஞ்சினையுடைய
ஆயர்களும்; வளரும் மறவை நெஞ்சத்து ஆய்இலாளர் - பெருகு கின்ற மறம்
பொருந்திய நெஞ்சத்தினையுடைய சிறுகுடியில் வாழ்பவரும் கூடியெடுக்கும்;
அரும்பலர் செருந்தி நெடுங்கான் பலர் கமழ் விழவணி வியன்கள மன்ன -
அரும்பு மலர்ந்த செருந்தி முதலிய மரங்கள் செறிந்த