பக்கம் எண் :

429

     

     திணை:  அது.  துறை ; கடைநிலை.  பொறையாற்று கிழானைக்
கல்லாடனார் பாடியது.

     உரை:  தண்டுளி பலபொழிந்து எழிலி இசைக்கும் - தண்ணிய
நீர்த்துளிகள்  பலவற்றையும்  சொரிந்து   மேகங்கள்  முழங்கும்;  விண்டு
அனைய விண்தோய் பிறங்கல் - மலைபோன்ற வானளாவிய குவியலாய்;
முகடுற வுயர்ந்த நெல்லின் - உச்சி   யுண்டாக  வுயர்வுறக்  குவித்த
நெல்லாகிய;   படுகதரு பெருவளம் மகிழ்வர வாழ்த்திப்றெ்ற - எருதுகளின்
பேருழைப்பால் உண்டாகயி பெரும்பொருளை மகி்ழ்ச்சி மிக வாழ்த்திப்
பெற்றதை; திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி - திருந்தாத ஊன்கறியைச்
சிறுசிறு துண்டாகப் பரக்குமாறு துண்டித்து; அரியல் ஆர்கையர் உண்டு -
கள்ளுண்போர் உடனுண்டு; இனிது உவக்கும் - மிகவும்  இன்புறும்;  வேங்கட
வரைப்பின்  வடபுலம் பசித்தென - வேங்கட நாடாகிய வடநாடு
வறங்கூர்ந்ததனால்; ஈங்குவந்திறுத்த என் இரும்பேரொக்கல் - இங்கே  வந்து
தங்கிய  என் பெரிய சுற்றம்; தீர்கை விடுக்கும் பண்பின் - இந்நாட்டினின்றும்
நீங்குதலைக்  கைவிடும்  பண்பினையுடையவாய்; முதுகுடி நனந்தலை   மூதூர்
- பழங்குடிகள்   நிறைந்த  அகன்ற   இடத்தையுடைய மூதூரின்கண்; 
.............வினவலின் -  .............கேட்டலால்;  இவன்  முன்னும் வந்தோன்
மருங்கிலன் - இவன் முன்பேயும்  இங்கே  வந்தவன்  பொருள் இல்லாதவன்,
பொருநன் - கினணப் பொருநன்; ஆகலின் இன்னும் அளியன் என -
ஆதலால்   இப்பொழுதும்   அளிக்கத்   தக்கவன்   என்று;   நின் 
உணர்ந்தறியுநர்  என்  உணர்ந்து  கூற - நின்பால் நெருங்கிப் பயின்று நின்
உள்ளக்  கிடையை  யறிந்த சான்றோர் என் நிலைமையினை நன்குணர்ந்தது
எனக்கு அறிவிக்க; பெரும் கழியிடத்தே துழவி மீன் பிடித்துண்ணும்; துதைந்த
தூவியம்  புதாஅம்  சேக்கும் - நெருங்கிய  தூவியையுடைய புதா வென்னும்
புள்ளினம் தங்கும்; ததைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின் - தழை செறிந்த
புன்னைகளையுடைய  செழுவிய  நின்  நெடுமனையின்கண்; நெஞ்சமர் காதல்
நின்வெய்யோளொடு - நெஞ்சமர்ந்த காதலையுடைய நின்னால் விரும்பப்பட்ட
மனைவியுடன்; இன்றுயில் பெறுகதில் நீ - இனிய உறக்கத்தை நீ பெறுவாயாக;
வளஞ்சால் பதன் அறிந்து துளி பொழிய - நெல்வளம் நிறையும்
செவ்வியறிந்து மழைபொழிய;  நின்வயல்  வேலி  ஆயிரம்  விளைக - நின்
வயல்கள் வேலி ஆயிரமாக விளைக எ- று.

     
விண்டு, மலை. விண்டோய் பிறங்கலென்றது ஈண்டு நெற்குவியன் மேற்று.
“விண்டு வனைய வெண்ணெற் போர்வின்” (ஐங். 58) என்று பிறரும்