பக்கம் எண் :

43

     

அப்போதுமேற்கொண்டிலர்.  ஆயினும்,  வடக்கிருந்தஅவன்
உயிரோடிருக்குங்காறும்  அடிக்கடிசென்றுகண்டுகொண்டுவந்தார்.
சின்னாட்களில் கோப்பெருஞ்சோழன் உண்ணா நோன்பால் உயிர் துறந்தான்.
அவன் பிரிவால் பெரிதும் கையற்று மனங்கவன்ற சான்றோர் ஒருவாறு தேறி
அவற்குநடுகல்நிறுவிச்சிறப்புச்செய்தனர். அவன்நடுகல்லான சில
நாட்களில் பிசிராந்தையார் வந்து சேர்ந்தார். அவர் அவனது நடுகல்லையும்
சூழ இருந்த சான்றோரையும் கண்டு பெருவருத்தமுற்றார்.
கோப்பெருஞ்சோழன் சொன்ன குண நலமுற்றும் பிசிராந்தையார் பால்
இருக்கண்ட சான்றோர்க்கு மிக்க வியப்பும் விம்மிதமும் உண்டாயின.
பொத்தியார்க்கு உண்டான வியப்பு அவருள்ளத்தைக் கவர்ந்து ஒரு
பாட்டாய் வெளிப்பட்டது. அப் பாட்டு இது.

 நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே
எனைப்பெருஞ் சிறப்பினோ டீங்கிது துணிதல்
அதனினு மருட்கை யுடைத்தே பிறனாட்டுத்
தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி
5இசைமர பாக நட்புக் கந்தாக
 இனையதோர் காலை யீங்கு வருதல்
வருவ னென்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவ னறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே
10அதனால், தன்கோ லியங்காத் தேயத் துறையும்
 சான்றோ னெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை யிழந்தவிவ் வுலகம்
என்னா வதுகொ லளியது தானே.

   திணை: பொதுவியல், துறை: கையறுநிலை. அவன் வடக்கிருந்
தானுலைச் சென்ற பிசிராந்தையாரைக்கண்டு பொத்தியார் பாடியது.


    உரை: நினைக்குங்காலை மருட்கையுடைத்து - கருதுங் காலத்து
வியக்குந்தன்மையையுடைத்து; எனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது
துணிதல் - எத்துணையும் பெரிய தலைமையுடனே கூடியும் இவன்
சிறப்புக்களைக் கைவிட்டுவரத் துணிதல்; அதனினும் மருட்கையுடைத்து-
இவன் அவ்வாறு துணிந்த அதனினும் வியக்குந் தன்மையையுடைத்து;
பிறன் நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன் - போற்றி - பாதுகாத்து;
இசை மரபாக புகழ்மேம்பாடாக; நட்புக் கந்தாக - நட்பே பற்றுக் கோடாக;
இனையதோர் காலை - இத்தன்மைத்தாகிய ஓர் இன்னாக்காலத்து; ஈங்கு
வருதல் - இவ்விடத்து வருதல்; வருவன் என்ற கோனது பெருமையும் -
இவ்வாறு வருவானென்று துணிந்து சொல்லிய வேந்தனது மிகுதியும்;