| அதியமான் குடியினரை அதியர் என்ப; பாண்டியர் குடிப்பிறந்தாரைப் பாண்டிரென்றும் தொண்டைமான் குடியினைரத் தொண்டையரென்றும் வழங்குவதுபோல. மார்பிலணியும் ஆரம் வளைந்து கிடத்தலின் கொடும்பூண் என்றார். விளங்குமணிக்கொ டம்பூண்ஆய் (புறம்.130) என வருதல் காண்க. இருள் மயங்கிய இளநிலவினைப் பசலை நில வென்றார். கிணைப்பறையின் கண் வட்டமாயிருந்தலின் யானையின் அடிச்சுவட்டை உவமம் கூறினார். பெருங்களிற்றடியின் றோன்று மொருகண், இரும்பறை (புறம். 263) என்று பிறரும் கூறுவர். எழினி, ஆரெயில் கடத்தற்குக்காரணம் கூறுவார் கொடா உருகெழு மன்னர் என்றார், பேயும் கூளியும் விரும்புமிடமாதல் பற்றி அணங்குடை மரபின் இருங்கள் மெனப்பட்ட தென்றுமாம். பகைவர் நாட்டை வென்ற வேந்தன் கழுதையேர் பூட்டி அந்நாட்டைப் பாழ் செய்வது பண்டையோர் போர்முறை; வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப், பாழ் செய்தனையவர் நனந்தலை நல்லெயில் (புறம். 15) என்பர் பிறரும். வெள்ளை வரகு, கவடி, கொள்; குடை ஒருவகை வேலமரம். நாடோறும் இச்செயலே நிகழ்த்துதல்பற்றி. வைகலுழவ எனச் சிறப்பித்தார். கிழிந்த ஆடைக்குப் பாசிவேரை உவமம் கூறுதல் இயல்பு; பாசிவேரின் மாசொடு குறைந்த, துன்னற் சிதா அர் (பொருந 153-4) என ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார் மொழிவது காண்க. நாட்பட்ட தேறல் களிப்புமிகுதியால் தன்னை யுண்டார்க்குப் பெருமயக்கம் விளைத்தலால் அதனை விதந்தோதினார். நாண்மீனினும் கோண்மீன் பெரிதாதலால் அதனைப் பொன் வள்ளத்துக்கு உவமம் செய்தார். ஊண்முறை உண்டற்குரியவற்றுள் தலையும் இடையும் கடையுமாக உண்ணும் முறை; கோண்முறை - கொள்வோர் கொள்வகை யறிந்து படைக்கும் முறை; கரும்பு இவண் தந்த செய்தியை அமரர்ப் பேணியும் (புறம்.99) என்னும் புறப்பாட்டிற் குறித்திரருத்தலைக் காண்க. எழினி நெடுங்கடை நின்று, யான் மாக்கிணை யொற்றுபு, வாழிய பெரிதெனச் சென்று நின்றனெனாக, அன்றே, கரும்பிவண் தந்தோன் பிறங்கடையாகிய அவன் சிதாஅர் நீக்கி, கலிங்கம் உடீஇ, தேறல் அளைஇ, விருந்திறை நல்கினானெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: சேலம் மாநாட்டின் வடபகுதியும் மைசூர் நாட்டின் கோலார் நாட்டுப் பகுதியும் சேர்ந்து ஒரு காலத்திற் கங்கநாடென வழங்கிற்று. *இப்பகுதியை இடைக்காலச்சொழர் கைப்பற்றி இதற்கு நிகரிலிசோழமண்டல’ மெனப் பெயரிட்டு வழங்கினர். சேலநாட்டின் வடபகுதியை அதியான் +தகடூரைத் தலைநகராக்கிக் கொண்டு பண்டை நாளில் ஆட்சி செய்து வந்தனர். தகடூருக்கு இப்போது தருமபுரி என்பது பெயர். இடைக்கால அதியமான்கள் சோழர்க்குப் பணிந்து அவர்கீழ்க் குறுநிலமன்னராயிருந்தனர். அக்காலை இவ்வதியமான்கள் கன்னடரை வென்று புகழ்பெற்றிருந்தனர். இவர்களைக் கன்னடநாட்டுக் கல்வெட்டுக்கள் அதியமா # எனக் குறிக்கின்றன. பிற்கால அதியமான்களான எழினி, விடுகாதழகிய பெருமாள் முதலியோர்கள் தம்மைச்சேரர் குடிக்குரிய ரென்றே $ கூறிக்கொள்வாராயினர். கல்வெட்டிலாகாவினர் சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொன்ற அதியமானை வென்று அவனது தகடூரைக் கைப்பற்றிக் கொண்டதனால், @ அதிய
*Mysore Gazetteer Vol. l.P. 3 4. # EP. Ind Vol. Vl. P. 33 +Bom. Gazetteer Vol. II. P. 495. $ EP. Ind. Vol. Vl. P. 332. @பதிற் |