பக்கம் எண் :

440

     

விடுத்த யானை திரும்பி வரக்கண்ட திருக்குட்டுவன்,தான் தந்த வேழப்பரிசில்
தம் வரிசை நோக்கச் சிறிதாமெனக் கருதி விட்டார்போலும் இச் சான்றோர்.
விரசையறியும்  தரமில்லாது  போனேனே  எனத்   தானே  நாணி, அவ்
வேழத்தோடு பிறிதொரு பெருங்களிறு கொணரச் செய்து அதனையும் முன்னே
விடுத்ததுபோல ஒப்பனை  செய்து  சான்றோராகிய  குமரானார்க் கென
விடுத்தான். அவனுடைய அச் சான்றோராகிய குமரனார்க்கென விடுத்தான்.
அவனுடைய அச் செயலறிந்த குமரனார் பெருவியப்புக்கொண்டு இப்பாட்டை
ஒரு   பொருநன்    கூற்றில்   வைத்துப்   பாடினார்.    இதன்கண்
கிணைப்பொருநனாகிய தான், வெண்குடை்கிழவோனான திருக்குட்டுவன்
பெருமனையை  யடைந்து  விடியலில்  எழுந்து  அவன்  தந்தையின்
வஞ்சிப்போர்த்திறத்தைப் பாடினதாகவும், அதுகேட்டுத் தன்னை அவன்
தன்பால் பிரிவின்றி யிருத்தல்வேண்டிக் களிற்றுப் பரிசில் நல்கினானெனவும்,
அது போரிற் பகைவரைக் கொன்று சினம் தணியாத வெஞ்சின வேழமெனவும்,
அதுகண்ட கிணைவன் அஞ்சி   அதனைப்   பெயர்த்தும்   அவன்பாற்
செல்லவிடுத்ததாகவும், அதனையவன் சிறிதெனத் திருப்பி விட்டதாகக் கருதிப்
பிறிதுமொரு களிறு நல்கினானெனவும் அவன் தந்த பெருஞ்செல்வத்தால் தான்
பின்பு என்றும் இரத்தலை மேற்கொள்ளாத செல்வனானதாகவும் கூறி.
வஞ்சப்புகழ்ச்சியாக “அவன் துன்னரும் பரிசில் தந்தான்;அது கொண்டு யான்
அவன் பால் என்றுஞ் செல்லேன்; உய்ரமொழிப் புலவீர், நீவிரும் அவன்
வையம் புகழும் வள்ளியோனென்ப துண்மையாயினும் அவனை உள்ளுதலை
யோம்புமின்” என்று கூறியுள்ளான். கி. பி. 1229 ஆம் ஆண்டில் மாறவன்மன்
முதற் சுந்தர  பாண்டியன்  காலத்தில் வஞ்சி பாடிய புலவன் திருவரன்
குளமுடையான்  என்பவனுக்கு  மறச்சக்கரவர்த்தி   பிள்ளை  யென்ற
சிறப்புப்பெயர் கொடுத்து, விளைநிலம் பல இறையில் காணியாகக் கொடுத்த
செய்தியைக் கல்வெட்டு (P. S. Ins. 278) கூறுவது ஈண்டு நினைத்தற்குரியது.

 சிலையலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்
ஒலிகதிர்க் கழனி வெண்குடைக் கிழவவோன்
வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன்
வள்ளிய னாதல் வையகம் புகழினும்
 5.உள்ள லோம்புமி னுயர்மொழிப் புலவீர்
 யானும், இருணிலாக கழிந்த பகல்செய் வைகறை
ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றிப்
பாடிமிழ் முரசி னியறேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினெ னாக
 10.அகமலி யுவகையொ டணுகல் வேண்டிக்
 கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
வெஞ்சின வேழ நல்கின னஞ்சி
யானது பெயர்த்தனெ னாகத் தானது
சிறிதென வுணர்ந்தமை நாணிப் பிறிதுமோர்
 15.பெருங்களிறு நல்கி யோனே யதற்கொண்