பக்கம் எண் :

460

     

இயம்ப - பொறிகள் பொருந்திய மயிரையுடைய கோழிச் சேவல் விடிற்போதின்
வரவறிந்து கூவ; பொய்கைப் பூமுகை மலர - பொய்கைக்கண் கூம்பியிருந்த
பூக்களின் முகை இதழ் விரிந்து மலர; பாணர் கைவல் சீறியாழ் கடல் அறிந்து
இயக்க - பாணர் தாம் கைதேர்ந்த சிறிய யாழை முறைமை யறிந்து இசைக்க;
இரவுப்புறம் பெற்ற ஏம வைகறை - இரவுப்போது நீங்கும் விடியற்காலத்தில்;
பரிசிலர் - பரிசிலர்களை; வரையா விரைசெய் பந்தர் நீங்காத மணம் கமழும்
பந்தரின்கண்...; வரிசையின்  இறுத்த  வாய்மொழி  வஞ்சன் -  அவரவர்
வரிசையறிந்து புரவுக்கடன் செலுத்திய  வாய்மையே மொழியும்  சேரமான்
வஞ்சனுடைய;  நகைவர்  குறுகினல்லது -  இன்பஞ்செய்பவராகிய பாணர்
முதலாயினாரும் நட்புடைய  வேந்தராயினாரும்  மெல்ல  வியலுவதன்றி;
பகைவர்க்கு - பகைவராயினார்க்கு, புலியின  மடிந்த  கல்லளை  போல -
புலியினம்   கிடந்துறங்கும்   கன்முழைஞ்சுபோல;   துன்னல்  போகிய -
நெருங்குதற்காகாத; பெருபெயர் மூதூர் - பெரும் பொருந்திய பெயரையுடைய
மூதூர்க்குச் சென்று; மதியத்தன்ன என் அரிக்குரல் தடாரி - முழுமதிபோன்ற
வடிவினதாகிய அரித்த ஓசையையுடைய என் தடாரிப் பறையை; இரவுரை
நெடுவார் அரிப்ப வட்டித்து - தனது இரப்புரை புலப்படுமாறு அதன் நெடிய
வார்கள் அரித்த குரல் எடுத்தியம்ப இசைத்து; உள்ளிவருநர் கொள்கலம்
நிறைப்போய் - மறவா வுள்ளத்தால் நின்னை நினைந்துவரும் பரிசிலருடைய
பொள்கலம் நிரம்ப - அரிய பொருள்களை வழங்குபவனே; எமக்குத் தள்ளா
நிலையையாகியர் என - எம்மிடத்து நீங்காத அன்புற்ற நிலையையுடையனாகுக
என்று என் வரவைக் குறிப்பித்து நின்றோனாக; என் வரவு அறீஇ - என்
வரவை யறிந்து; சிறிதிற்குப் பெரிதுவந்து - என் சின்மொழிக்குப் பெரிதும்
மகிழ்ந்து; விரும்பிய முகத்தனாகி - அன்பால் மலர்ந்த முகமுடையனாய்; என்
அரைத் துரும்பு படு சிதாஅர் நீக்கி - என் இடையில் சிதர்ந்து நார்நாராய்க்
கிழிந்திருந்த உடையை நீக்கி, தன் அரைப் புகை விரிந்தன்ன பொங்குதுகில்
உடீஇ - தன் அரையில் உடுத்திருந்த புகையை விரித்தாற் போன்ற உயர்ந்த
உடையைத் தந்து என்னை யுடுப்பித்து; அழல் கான்றன்ன அரும்பெறல்
இல்லையாயின என் உண்கலத்தில்; நிழல்காண் தேறல் நிறைய வாக்கி -
உண்பார் நமது நிழலைக் காணுமாறு தெளிந்த கட்டெளிவை நிரம்ப பெய்து;
யான் உண அருளல் அன்றியும் - யான் உண்டற்கு வழங்கியதேயன்றி; தான்
உண் மண்டைய கண்டமான்வறைக் கருனை - தான் உண்ணும்
மண்டையிடத்துத் துண்டித்த மானிறைச்சியாகிய வறுத்த பொரிக்கறியையும்;
கொக்கு உகிர் நிமிரல் -