| தொடிமாண் பரூஉ உலக்கை குற்றரிசி - பூணிட்டு மாட்சியுறுவித்த பருத்த உலக்கையால் குற்றப்பட்ட அரிசி கொண்டாக்கிய சோற்றை; காடி வெள்ளுலைக் கொளீஇ - காடி நீர் பெய்த வெள்ளுலையிற் பெய்து கொண்டு; நீழலோங்கு சினைமாவின் தீங்கனி நறும்புறி - நீழலுயர்ந்த கிளைகளோடு கூடிய மாமரத்தின் தீவய கனிகைப் பிசைந்து செய்த நறிய புளிக்குழம்பும்; மோட்டிரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை பெரிய கரிய வராலிசைச்சியும் - கோட்டையுடைய சுறா மீனினது துண்டமாகிய கொழுவிய இறைச்சியும்; செறுவின் வள்ளை - வயல்களிற் படர்ந்த வள்ளைக்கீரையும்; சிறுகொடிப் பாகல் - சிறு கொடியாகிய பாகற்காயும்; பாதிரியூழ் முகை அவிழ்விடுத்தன்ன - பாதிரியின் முதிர்ந்த அரும்பினது இதழை விரித்தாற்போன்ற; மெய் களைந்து இனனோடு விரைஇ - தோலைநீக்கி இனமாகியவற்றோடு கலந்து; ஐதின் - மென்மையுண்டாக; மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல் - மூடும்படியாகப் பெய்த முழுத்த சோறும்; அழுகளிற் படுநர் களியாட வைகின் - வைக்கோல்களிற் பொழுதெல்லாம் உழைக்கும் களமர் தாமுண்ட கள்ளாற் பிறந்த மயக்கத்தால் மடிந்திருப்பாராயின்; பழஞ்சோறு அயிலும் - விடியலிற் பழஞ்சோற்றையுண்ணும்; முழங்கு நீர்ப்படப்பை - முழங்குகின்ற நீர்நலம் சான்ற தோட்டங்களையுடைய; காவிரிக்கிழவன் - காவிரியும் நாட்டையுடையனாகிய; மாயா நல்லிசைக் கிள்ளி வளவன் உள்ளி - கெடாத நல்ல புகழையுடைய கிள்ளிவளவனை நினைந்து; அவன் படர்தும் - அவனை நோக்கிச் செல்கின்றேம்; பிறர் செல்லேன் செல்லேன் முகம் நோக்கேன் -பிறர் பால் ஒருகாலும் செல்லேன், பிறருடைய முகத்தை உதவி கருதிப் பாரேன்; நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்து - செடிய மூங்கிலாகிய தூண்டிலாற் பிடித்த மீனை விற்று; கிணை மகள் அட்ட பாவால் புளிங்கூழ் - கிணைமகள் சமைத்த நீர்த்தர்ப் பரந்த புளிங்கூழை; பொழுது மறுத்துண்ணும் உண்டயேன் - காலமல்லாத காலத்தில் உண்ணும் உணவையுடையேன்; அழிவுகொண்டு ஒருசிறை இருந்தேன் - செஞ்சழிந்து ஒரு புடையே இருந்தேனாக; என்ன - நின் நல்லூழ் இருந்தவாறென்னே; இனி - இப்பொழுது; அறவர் அறவன் - அறவோர்களிற் சிறந்த அறவோனும்; மறவர் மறவன் - அறவர்க்குள் சிறந்த மறவனும்; மள்ளர் மள்ளன் - உழவருட் சிறந்த உழவனும், தொல்லோர் மருகன் பழையோருடைய வழித்தொன்றலு மாகிய அவன் - தாமான் தோன்றிக் கோன்; இசையிற்கொண்டான் - நின்புகழால் நின்பால் அன்புகொண்டு விட்டானாகலின்; நசையமுது உண்க என - நீ விரும்பும் செல்வத்தைப் பெறுவாயாக என அறிந்தோர் கூறவே; மீப் படர்ந்து இறந்து - மேலே செயற்பாலவற்றை நினைந்து சென்று; வன்கோல மண்ணி - |