பக்கம் எண் :

63

     
 சேண்விளங்கு சிறப்பிற் செம்பியர் மருகன்
10கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
 தேவ ருலக மெய்தின னாதலின்
அன்னோற் கவிக்குங் கண்ணகன் றாழி
வனைதல் வேட்டனை யாயி னெனையதூஉம்
இருநிலந் திகிரியாப் பெருமலை
15மண்ணா வனைத லொல்லுமோ நினக்கே.

   திணை: அது. துறை: ஆனந்தப்பையுள். அவனை ஐயூர் முடவனார்
பாடியது.

    உரை: கலம் செய் கோவே - அடுகலம் வனையும் வேட்கோவே;
கலம் செய் கோவே - அடுகலம் வனையும் வேட்கோவே; இருள்
திணிந்தன்ன குரூஉ - இருள்நீங்கி ஓரிடத்தே செறிந்து நின்றாற் போன்ற
நிறமுடைத்தாய்; திரள் பரூஉப் புகை - திரண்ட மிக்க புகை; அகல்
இருவிசும்பின் ஊன்றும் - அகலிய பெரிய ஆகாயத்தின்கண் சென்று
தங்கும்; சூளை நனந்தலை மூதூர்க்கலம் செய் கோவே - சூளையையுடைய
அகலிய இடத்தினையுடைய பழையவூரின்கண் கலம் வனையும்
வேட்கோவே; அளியை நீ - இரங்கத்தகுவை நீ; யாங்காகுவை கொல் -
என்ன வருத்த முறுவைதான்; நிலவரை சூட்டிய நீணெடுந்தானை -
நிலவெல்லையின்கண் பரப்பிய மிக்க பெரிய சேனையினையுடைய; புலவர்
புகழ்ந்த பொய்யா நல்லிசை - அறிவுடையோர் புகழ்ந்த பொய்யாத நல்ல
புகழினையும்; விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன- பரந்த
சுடரினையுமுடைய ஆதித்தன் வானத்தின்கண் பரந்தாலொத்த; சேண்
விளங்கு சிறப்பின் - சேய்மைக்கண்ணே விளங்கும் தலைமையையுடைய;
செம்பியர் மருகன் - செம்பியர் மரபினுள்ளான்; கொடி நுடங்கு யானை
நெடுமாவளவன் - கொடிகள் நுடங்காநின்ற யானையினையுடைய
மிகப்பெரிய வளவன்; தேவருலக மெய்தினன் - அவன் தேவருடைய
விண்ணுலகத்தை யடைந்தானாகலான்; அன்னோற் கவிக்கும் இடமகன்ற
தாழியை; வனைதல் வேட்டனையாயின் -வனைதலை நீ விரும்பினாயாயின்;
எனையதூஉம் - எப்படியும்; இருநிலம் திகிரியா- பெரிய நில வட்டம்
உருளியாக; பெருமலை மண்ணா - பெரிய மேருமலை மண்ணாக; வனைதல்
ஒல்லுமோ நினக்கு - வனைய இயலுமோ? இயலாதன்றே நினக்கு; எ - று.


    அடுக்கு விரைவின்கண் வந்தது. கலஞ்செய் கோவே, வளவன்
தேவருலக மெய்தினானாதலான், அன்னோற் கவிக்கும் தாழி வனைதல்
வேட்டனையாயின் இருநிலம் திகிரியாக, மாமேரு மண்ணாக வனைதல்
ஒல்லுமோ? ஒல்லாமையின் யாங்காகுவை; நீ இரங்கத்தக்காய் எனக் கூட்டி