| | ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித் தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ | 25 | பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க் | | களந்து கொடை யறியா வீகை மணிவரை யன்ன மாஅ யோனே. |
திணையுந் துறையு மவை. கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ் சேரலிரும்பொறை இன்ன நாளிற்றுஞ்சுமென அஞ்சி, அவன் துஞ்சிய விடத்துக் கூடலூர்கிழார் பாடியது.
உரை: ஆடு இயல் அழற்குட்டத்து - மேடவிராசி பொருந்திய கார்த்திகை நாளில் முதற்காலன்கண்; ஆரிருள் அரை இரவின் - நிறைந்த இருளையுடைய பாதியிரவின்கண்; முடப் பனையத்து வேர் முதலா - முடப்பனை போலும் வடிவையுடைய அனுட நாளில் அடியின் வெள்ளி முதலாக; கயம் குளத்துக் கடை காய- கயமாகிய குள வடிவுபோலும் வடிவையுடைய புனர்பூசத்துக் கடையில் வெள்ளி எல்லையாக விளங்க; பங்குனி உயர் அழுவத்து- பங்குனி மாதத்தினது முதற்பதினைந்தின்கண்; தலை நாண் மீன் நிலை திரிய - உச்சமாகிய உத்தரம் அவ்வுச்சியினின்றும் சாய; நிலை நாண் மீன் அதன் எதிர் ஏர்தர - அதற்கு எட்டாம் மீனாகிய மூலம் அதற்கெதிரே எழா நிற்க; தொல் நாண் மீன் துறை படிய - அந்த உத்தரத்திற்கு முன் செல்லப்பட்ட எட்டா மீனாகிய மிருகசீரிடமாகிய நாண் மீன் துறையிடத்தே தாழ; பாசிச் செல்லாது - கீழ்த் திசையிற் போகாது; ஊசி முன்னாது வடதிசையிற் போகாது; அளக்கர்த் திணை விளக்காக - கடலாற் சூழப்பட்டது பூமிக்கு விளக்காக; கனை எரி பரப்ப முழங்காநின்ற தீப்பரக்க; கால எதிர்பு பொங்கி - காற்றாற் பிதிர்ந்து கிளர்ந்து; ஒரு மீன் வீழ்ந்தன்றால் விசும்பினான் - ஒரு மீன் வீழ்ந்தது வானத்தினின்றும்; அது கண்டு - அதனைப் பார்த்து; யாமும் பிறரும் பல்வேறு இரவலர் - யாமும் பிறருமாகிய பல்வேறு வகைப்பட்ட இரவலர்; பறையிசை அருவி நன்னாட்டுப் பொருநன்- பறையொலி போலும் ஒலியையுடைய அருவியையுடைய நல்ல மலைநாட்டுக்கு வேந்தனாகியவன்; நோயிலனாயின் நன்று என நோயை யுடையனல்லானாகப் பெறின் அழகிதென; அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப - இரங்கிய நெஞ்சத்துடனே மடிந்த உள்ளம் பரப்ப; அஞ்சினம் - யாம் அஞ்சினேம்; எழுநாள் வந்தன்று - அஞ்சினபடியே - ஏழாம் நாள் வந்ததாகலின்; இன்று வலியையுடைய யானை கையை நிலத்தேயிட்டு வைத்துத் துஞ்சவும்; திண் பிணி முரசம் கண் கிழிந் துருளவும் - திண்ணிய வாராற் பிணிக்கப்பட்ட முரசம் கண் கிழிந்து உருளவும்; காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும் - உலகிற்குக் காவலாகிய வெண்கொற்றக்குடை கால் |