பக்கம் எண் :

76

     
 சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே
5பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே
 என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே
10அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ
 இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்றவன்
15அருநிறத் தியங்கிய வேலே
 ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
இனிப், பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநரு (மில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்
20றீயாது வீயு முயிர்தவப் பலவே.

    திணையும் துறையு மவை. அதியமான் நெடுமான் அஞ்சியை
ஒளவையார் பாடியது.

    உரை: சிறிய கள் பெறினே - சிறிய அளவினையுடைய
மதுவைப்பெறின்; எமக்கு ஈயும் மன் - எங்களுக்கே தருவன், அது கழிந்தது;
பெரிய கள் பெறின் - பெரிய அளவினையுடைய மதுவைப் பெற்றானாயின்;
யாம் பாட - அதனை யாம் உண்டு பாட; தான் மகிழ்ந்துண்ணும் மன் -
எஞ்சிய மதுவைத் தான் விரும்பி நுகர்வான், அது கழிந்தது; சிறு
சோற்றானும் நனி பல கலத்தன் மன் - சோறு எல்லார்க்கும் பொதுவாதலால்
சிற்றளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத் தோடுங் கூட
வுண்பன், அது கழிந்தது; பெருஞ் சோற்றானும் நனிபல கலத்தன்மன் -
மிக்க அளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட
உண்பன், அது கழிந்தது; என்பொடு தடிபடு வழியெல்லாம் - என்பொடு
கூடிய ஊன்றடியுளதாகிய இடமுழுதும்; எமக்கு ஈயும் மன் - எங்களுக்கு
அளிப்பன், அது கழிந்தது; அம்பொடு வேல் நுழை வழி யெல்லாம் -
அம்பொடு வேல்