| | இல்லது நிரப்ப லாற்றா தோரினும் உள்ளி வருநர் நசையிழப் போரே அனையையு மல்லை நீயே யொன்னார் | 10 | ஆரெயி லவர்கட் டாகவு நுமதெனப் | | பாண்கட னிறுக்கும் வள்ளியோய் பூண்கட னெந்தைநீ யிரவலர் புரவே. |
திணையுந் துறையு மவை. சேரமான் பாமுளூரெறிந்த சோழன் நெய்தலங்கான இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
உரை: கழிந்தது பொழிந்தென - கழிந்த காலம் பெய்தேனெனக் கருதி;வான்கண் மாறினும் - மழை பெய்யாது மாறினும்; தொல்லது விளைந்தென - முற்காலத்துவிளைந்தேனெனக்கருதி; நிலம் வளம் கரப்பினும் - நிலம்விளைவையொழியினும்;எல்லாஉயிர்க்கும் வாழ்க்கைஇல் - எல்லாவுயிர்கட்கும்உயிர் வாழ்க்கையில்லை அதுபோல;இன்னும்தம்மெனஎம்மனோர் இரப்பின் - இன்னமும் எமக்குப்பரிசில்தாருமென்றுசொல்லி எம்போல்வார் இரப்பின்; முன்னும்கொண்டிர்எனநும்மனோர்மறுத்தல்இன்னாது - அவர்க்கு முன்னும் பரிசில் கொண்டீரென்று நும்போல்வார் மறுத்தல் இன்னாது; அம்ம - கேளாய்; இயல்தேர் அண்ணல் - இயற்றப்பட்ட தேரையுடையஅண்ணலே;இல்லதுநிரப்பல் ஆற்றாதோரினும் - இல்லாதபொருளைத்தேடிநிரப்பமாட்டாது வறுவியோரினும்; உள்ளிவருநர் நசை இழப்போர் - அவராற் பரிசில் நினைந்து வரப்படுவார்கொடாராயின்அவ்விரப்போரால்நச்சப்படும் இன்பத்தை இழப்பர்; அனையையும் அல்லை நீ - தம் வறுமையாற் கொடுக்கமுடியாமையின் நாணி அவரெதிர் முக நோக்கமாட்டாது இன்பமிழக்கும்மாந்தர் தன்மையையு மல்லை நீ, இறந்துபடுவை; ஒன்னார் ஆரெயில் அவர் கட்டாகவும் பகைவரது அரிய அரண் அவரிடத்ததாகவும் அதனை அழித்துக் கொள்ளுவதன் முன்னே; நுமது எனப் பாண்கடன் இறுக்கும் வள்ளியோய் - நும்முடைய தெனப் பாணர்க்குக் கடனாகக் கொடுக்கும் வென்றியோடு கூடிய வண்மையையுடையோ யாதலான்; எந்தை - எம் இறைவ; நீ இரவலர் புரவு கடன் பூண் - நீ இரப்போரைப் பாதுகாத்தலை முறைமையாகப் பரிகரிப்பாயாக; எ - று.
அனையையுமல்லை யென்பதற்கு இரவலர் வேண்டுமளவும் பாணி யாது முன்னேயளித்தலின், நசையிழப்போர் தன்மையையுடையாயல்லை யென்றுமாம். எம்மனோரென்றது பிறரை நோக்கியன் றெனவுணர்க. பொழிந்தென, விளைந்தென என்பனவற்றை வினையெச்சமாக்கி மாறினும் கரப்பினுமென்னும் வினையோடு முடிப்பினுமமையும். |