9925 வா தாவுகை
9926 வாக்கல் வடிக்கப்பட்ட சோறு
9927 வாக்கி வார்த்து
9928 வாக்கு வடிவு, திருந்திய வடிவு
9929 வாக்குதல் வார்த்தல்
9930 வாகுவலயம் தோளணி
9931 வாகை அகத்தி; எயினன் என்பவனது ஊர்
9932 வாங்க தோற்றுவிக்க
9933 வாங்கிய கதிர் நீண்டு பறிந்த கதிர்
9934 வாங்கு எழில் நோக்கினார் கண்ணை வாங்கிக் கொள்ளும் அழகு
9935 வாங்கு சினை வளைந்த சினை
9936 வாங்குதல் இழத்தல், பெயர்த்தல், முறித்தல், வளைதல், வளைத்தல், பறித்தல், பறிதல், அலைதல், அணைத்தல், குவித்துக் கொள்ளுதல், தொடக்குதல்
9937 வாச்செலல் தாவுதல்
9938 வாசம் மணம்
9939 வாட் சுறா வாள் போன்ற கொம்பினையுடைய சுறா
9940 வாட்டாமை கெடாமை
9941 வாட்டாறு ஓர் ஊர், மலை நாட்டுத் திருமால் திருப்பதிகளுள் ஒன்று
9942 வாட் தானை அறு வகைத் தானைகளுள் ஒன்றான வாட் படை
9943 வாட்டு பொரியல்
9944 வாட்டுதல் அழித்தல்
9945 வாட்டுநர் கெடுக்குமவர்
9946 வாடல் வற்றல்
9947 வாடாத் தாமரை பண்டைக்கால அரசர் பாணர்க்கு அளிக்கும் பொற்றாமரைப் பூ
9948 வாடாப் பூ கற்பகப் பூ
9949 வாடா மாலை பொன்னரி மாலை
9950 வாடா வஞ்சி கருவூர்
9951 வாடா வள்ளி ஒரு வகைக் கூத்து
9952 வாடிய சினை தளிர்கள் வாடிய கொம்பு
9953 வாடு வாடற் பூ
9954 வாடு இல் வெகுளி குறையாத கோபம்
9955 வாடுதல் மெலிதல், கெடுதல், துன்பப் படுதல், சிறிது கெடுதல்
9956 வாடு நா வாடுகின்ற நாக்கு
9957 வாடுபு வாடி
9958 வாடுவது கெடுவது, கெடுவதற்கு
9959 வாடூன் உப்புக் கண்டம்
9960 வாடை வாடைக் காற்று
9961 வாணிகம் ஊதியம்
9962 வாணிகன் வியாபாரி
9963 வாணுதல் ஒளி பொருந்திய நெற்றி, ஒள்ளிய நெற்றியுள்ள பெண்
9964 வாதம் மாறுபாடு
9965 வாதி தருக்கிப்பவன்
9966 வாதுவன் குதிரைப் பாகன்
9967 வாதுளி வாதூள கோத்திரத்தான்
9968 வாம் தாவும்
9969 வாய் உதடு, ஆயுதத்தின் முனை, மெய்ம்மை, முகம், சிறப்பு, இடம், வாக்கு, படைக்கலத்தின் கூரிய உறுப்பு, வாயிற் கூறும் மொழி
9970 வாய் ஓடி வாயிற் கூறும் மொழி சிதைந்து
9971 வாய்க் கோட் படல் வாயாற் சிறி திடம் விழுங்கப்படுதல்
9972 வாய் கூம்ப வாய் குவியா நிற்க
9973 வாய்த்தல் சித்தித்தல், நடத்தல், சேர்தல், தப்பாமை
9974 வாய்த்தனம் வாய்ப்பைச் செய்தனம்
9975 வாய்தல் நிச்சயமாய் நிகழ்தல், மனம் நேர்தல்
9976 வாய் திறத்தல் பாடுதல்
9977 வாய் நில்லா வலி முன்பு பகைத்தவை எதிர் நில்லாத மிக்க வலி
9978 வாய்ப் பகை வாயினின்று எழும் இருமலாகிய பகை
9979 வாய்ப் படல் வழிபடல்
9980 வாய்ப் படுதல் வழிப்படுதல்
9981 வாய்ப் புள் நற் சொல்லாகிய நிமித்தம், நற் சொல்
9982 வாய்ப் பெய்தல் வாயிலிட்டுத் தின்னுதல்
9983 வாய் பாடி வாயாற் சொல்லி
9984 வாய் மூழ்த்தல் வாய்மூடுதல்
9985 வாய்மை தப்பாத மொழி, உண்மை, மெய்
9986 வாய் மொழி உண்மை மொழி, வேதம்
9987 வாய்வது உண்மை
9988 வாய் வாள் குறி தப்பாத வாள்
9989 வாய் வாளாமை சொல்லாமை
9990 வாய் வாளேன் கூறேன், வாய் திறந்து சொல்லேன்
9991 வாய்விடுதல் பேசுதல், மலர்தல், அலர்தல், கூறுதல்
9992 வாய்வைத்தல் ஊதுதல்
9993 வாயடை உணவு
9994 வாயமைத்து பொருந்தப்பண்ணி
9995 வாயாகின்று உண்மையாயது
9996 வாயில் கட்டடத்துள் நுழையும் வாசல், வழி, இடம், வாயில் காப்பான்
9997 வாயில் விடுதல் வாயில் காவலர்க்கு உணர்த்தி விடுதல்
9998 வாயின உண்மையிடத்தன
9999 வாயுறை தாளுருவி என்னும் மகளிர் காதணி
10000 வார் கோதுதல், நீட்சி, நேர்மை, ஒழுங்கு, வா என்னும் ஏவல்
10001 வார் கோடு நீண்ட கொம்பு
10002 வார் சிறை நீண்ட சிறகு
10003 வார்தரல் வடியாநிற்றல்
10004 வார்தல் வெளிவிடுதல், நெடுமையாதல், ஒழுங்குபடுதல், நெல் மணி முதலியன பால் கட்டுதல், ஒழுகுதல், உரிதல், மயிர் கோதுதல், வடிதல்
10005 வார்ந்த நீண்ட, நேரிதான
10006 வார்ந்தன்ன ஒழுகின தன்மைத்தாக நெருங்கின
10007 வார்பு வார்தல், நீளவாக்கிற் சீவப் படுகை
10008 வாரணம் கோழி, யானை
10009 வாரணவாசி வாரணாசி
10010 வாரணவாசிப் பதம் வாரணாசியிலுள்ளவர் போலப் பிறர் வருத்தத்தைத் தம் வருத்தமாகக் கொண்டொழுகும் தன்மை
10011 வாரல் வாராதே
10012 வாரா உலகம் வீரர் முதலியோர் அடைதற்குரிய சுவர்க்கம்
10013 வாராது வாராமல்
10014 வாராமல் பெறுகற்பின் வாராதிருத்தலை யான் பெறின்
10015 வாராமை வாராத படியால்
10016 வாரி விளைவு, தழுவி, வழித்து, யானை அகப்படுத்தும் இடம், வருவாய், கோதி
10017 வாருதல் அரித்தல், யாழ் நரம்பைத் தடவுதல்
10018 வாருறு கூந்தல் வாருதலுற்ற கூந்தல்
10019 வாருறுதல் கோதுதல்
10020 வாரூஉக் கொண்ட வாருதல் கொண்ட
10021 வால் தூய்மை, நன்மை, மிகுதி
10022 வால் அவிழ் வெண் சோறு
10023 வால் இணர் வெள்ளிய பூங் கொத்து
10024 வால் எக்கர் வெண்மையையுடைய இடு மணல்
10025 வால் எயிறு வெள்ளிய பல்
10026 வால் நார் வெள்ளிய நார்
10027 வால் நிறம் வெண்ணிறம்
10028 வாலம் வால்
10029 வாலா வேழம் வெண்மை இல்லாத யானை
10030 வாலிது சீரிது, நன்று
10031 வாலிது கிளர்ந்த நன்றாய் உயர்ந்த
10032 வாலியோன் பலராமன்
10033 வாலிழை முத்தாரம்
10034 வாலுவன் சமைப்போன்
10035 வாவல் வௌவால்
10036 வாவுதல் தாவுதல்
10037 வாவுப் பறை தாவிப் பறத்தல்
10038 வாழ்க்கை தொழில்
10039 வாழ்கல்லா வாழ மாட்டாத
10040 வாழ்ச்சி வெற்றியாகிய செல்வம், வாழ்வு
10041 வாழ்த்தல் வாழ்த்துதலைச் செய்தல்
10042 வாழ்த்தியல் தலைவனைப் புலவன் வாழ்த்தும் புறத்துறை
10043 வாழ்தல் வீற்றிருத்தல், உயிர் வாழ்தல், உயிர் கொண்டிருத்தல்
10044 வாழ்துமோ உயிர் வாழ்வோமோ
10045 வாழ்நர் வாழ்வோர், வாழ்பவர்
10046 வாழ் வேலி உயிர் வேலி
10047 வாழலேன் உயிர் வாழேன்
10048 வாழாமை உயிர் கொண்டிராமை
10049 வாழி அசை நிலை, வாழ்வாயாக, வாழ்வீராக
10050 வாழிய வாழ்வாயாக, வாழ்வீராக
10051 வாழியர் வாழ்வாராக
10052 வாழுமோர் வாழ்பவர்
10053 வாழேம் வாழ மாட்டோம்
10054 வாழை வாழை மரம்
10055 வாள் ஒளி, விளக்கம், கூர்மை, கத்திரிகை, வாட் போர்
10056 வாள் எயிறு ஒளியையுடைய பல்
10057 வாள் நிலா ஒளியையுடைய நிலா
10058 வாள் பொரு வானம் ஒளியைத் தருகின்ற வானம்
10059 வாள் முகம் வாளின் வாய், ஒளியினையுடைய முகம்
10060 வாள் வரி வாள் போலும் வரி, புலி
10061 வாள் வாய் நன்றாயினும் வாளின் வாய் கூரிதாய்ச் சுவர்க்கம் பெற்றானாயினும்
10062 வாளரம் ஒரு வகை அரம், சங்கு அறுக்கும் வாள்
10063 வாளகப்பட்டானை வாளோடே அகப்பட்டவனை
10064 வாளாதி பயனில கூறாதே கொள்
10065 வாளாது கூறாதே, சொல்லாயாய்
10066 வாளி வாள் வீரன், அம்பு
10067 வாளியம்பு அலகம்பு
10068 வாளின் வாழ்நர் வாள் வீரர்
10069 வாளுற்ற மன்னர் வாட் போரைச் செய்யத் தொடங்கின மன்னர்
10070 வாளை ஒரு வகை மீன்
10071 வாளோர் வாள் வீரர்
10072 வான் மேகம், மழை, தேவருலகு, நன்மை, அழகு, வெண்மை, நேர்மை, ஆகாயம்
10073 வான் ஏறு இடியேறு
10074 வான்கண் வெள்ளிய கண், வானத்து இடம், சூரியன்
10075 வான் கோடு வெள்ளிய கொம்பு, வெண்மையையுடைய கொம்பு
10076 வான் நிறை நீர் நிறைந்த மேகம்
10077 வான் பிசிர்க் கருவி மேகம் சிதறின நீர்த் தொகுதி
10078 வான் புகழ் வாலிய புகழ்
10079 வான் பூ வெள்ளிய, பெரிய பூ
10080 வான் மலர் வெள்ளிதாகிய மலர்
10081 வான் முந்நீர் அழகையுடைய கடல்
10082 வான்மை தூய்மை, வெண்மை
10083 வான் வாய் பெரிய வாய்
10084 வானம் ஆகாயம், தேவருலகு, மழை, மேகம், விசும்பு
10085 வானம்பாடி சாதகப் பட்சி
10086 வானம் வாழ்த்தி வானம்பாடிப் புள்
10087 வான வரம்பன் சேரன்
10088 வானவன் சேர அரசன்
10089 வான ஊர்தி ஆகாய விமானம்
10090 வானார் வெள்ளி நார்
10091 வானி பவானி, மரவகை
மேல்