10092 விக்குதல் விக்கி வெளித் தள்ளுதல்
10093 விச்சி ஒரு மலை
10094 விச்சை கல்வி
10095 விசயம் கருப்பஞ் சாறு, பாகு, கருப்புக்கட்டி, வெற்றி
10096 விசி கட்டு
10097 விசித்தல் இறுகக் கட்டுதல், விம்முதல், உகைத்தல்
10098 விசும்பிடை விசும்பிடம்
10099 விசும்பு ஆகாயம், தேவருலகு, மேகம்
10100 விசும்பு உறழ் விசும்பிலே நீண்டு உறழ்ந்த
10101 விசை வேகம்
10102 விசைத்தல் துள்ளுதல், வேகமாதல், கடுமையாதல்
10103 விசைப்பு வேகம்
10104 விசை வாங்கு தோல் விசைத்து இழுத்துவிடும் துருத்தி
10105 விட்ட அவிழ்ந்தன, மிக்க
10106 விட்டது போல விட்டாற் போல
10107 விட்டம் உத்தரம்
10108 விட்டேனும் போல்வல் விட்டேன் போலேயும் இருப்பேன்
10109 விட்டோர் பற்று விட்டோர்
10110 விடக்கு இறைச்சி
10111 விடத்தர் விடத்தேரை என்னும் முள் மரம்
10112 விடர் நிலப் பிளப்பு, மலைப் பிளப்பு, முழைஞ்சு, மலைக் குகை
10113 விடர் முகை மலைப் பிளப்பு, வெடிப்பையுடைய குகை
10114 விடரகம் மலைக் குகை, மலை, மழை, முழைஞ்சிடம், முழைஞ்சையுடைய மலை, முழையிடம்
10115 விடரளை மலைப் பிளப்பிடம், வெடிப்பையுடைய பொந்து
10116 விடரி மலை
10117 விடரி அம் கண்ணி முழைஞ்சினை யுடைய மலையிற் பூவாற் செய்த அழகையுடைய கண்ணி
10118 விடல் விடுத்தல், விடுதல்
10119 விடலை மருத நிலத் தலைவன்
10120 விடா விடப்பட்டு
10121 விடாஅல் விடாதே
10122 விடாதீமோ விடாதே
10123 விடிதல் நற் காலத்தால் துன்பம் நீங்கி இன்புறுதல்
10124 விடியல் வைகறை, நாள் வெயிற் காலை
10125 விடியல் வைகறை பொழுது விடிதற்கு முன்னர்த்தாகிய வைகறை
10126 விடிவு துன்பம் நீங்கி இன்பம் வருகை
10127 விடு கைவிடு, போகவிடு
10128 விடுத்தக்கால் விடுக்க
10129 விடுத்தந்த வரவிட்ட
10130 விடுத்தல் மயக்கம் தீரக் கூறல், விடைகொள்ளல், மறுமொழி கூறுதல், விடுவித்தல்
10131 விடுதல் பிரயோகித்தல், சொரிதல், காட்டித் தருதல், வெளிப்படுத்துதல், கட்டு அவிழ்தல், மிகுதல், கைவிடுதல், போதல்
10132 விடுத்தேன் விடை கொண்டேன்
10133 விடுத்தோன் தீர்த்தோன்
10134 விடுதல் செலுத்தல்
10135 விடுநை விடுவாய்
10136 விடு மலர் மலர்ந்த பூ
10137 விடுவழி விட
10138 விடுவாய் நிலப் பிளப்பு
10139 விடை மரையின் ஆண், ஏறு, ஆட்டுக்கிடாய்
10140 விடை கோள் விடை தழுவுதல், ஏறு தழுவுதல்
10141 விண் ஆகாசம்
10142 விண்டு மலை
10143 வித்தகம் திருத்தம்
10144 வித்தம் சூதிற் சிறு தாயம்
10145 வித்தல் விதைத்தல்
10146 வித்தாயம் வித்தம், சிறுதாயம்
10147 வித்துதல் விதைத்தல், பிறர் மனத்துப் பதியவைத்தல்
10148 விதலை நடுக்கம்
10149 விதவை சோறு, கூழ்
10150 விதி அமைக்கும் முறை, காசிபன்
10151 விதிர்த்தல் நடுங்குதல், சிதறுதல், உதறுதல், பலவாகப் போகவிடுதல், பிதிர்த்தல்
10152 விதிர்ப்பு நடுக்கம்
10153 விதுப்பு நடுக்கம், வருத்தம், விரைவு
10154 விதுப்புறுதல் விரைதல்
10155 விதை வித்து
10156 விம்மி பொருமி
10157 விம்முதல் பொருமுதல்
10158 விம்மென ஒலிப்ப
10159 வியங்கொண்மோ ஏவுவாயாக
10160 வியங்கொள்தல் செலுத்துதல்
10161 வியங்கொளக் கூறுதல் காரியம் என்று நினைக்கும்படி கூறுதல்
10162 வியத்தல் நன்கு மதித்தல்
10163 வியத்தொறும் வியக்குந்தோறும்
10164 வியப்பு அதிசயம், மேம்பாடு
10165 வியம் வழி, ஏவல்
10166 வியமம் பாராட்டத்தக்கது
10167 வியமமே வியப்பே
10168 வியர் இளைப்பு
10169 வியர்த்தல் உடலின் மேற்புறத்து நீர்த் துளி தோன்றுதல்
10170 வியர்ப்பு வியர்வை
10171 வியல் பெருமை, அகலம், பரப்பு, அகற்சி
10172 வியல் அறை அகற்சியையுடைய பாறை
10173 வியல் ஞாலம் அகற்சியையுடைய உலகம்
10174 வியலகம் வியலிடம்
10175 வியலுள் அகன்ற இடம்
10176 வியன் குறிப்பு அகற்சியையுடைய கருத்து
10177 வியன் சுரன் பெரிய பாலை நிலம்
10178 வியன் புலம் அகற்சியையுடைய நிலம்
10179 வியன் மார்பு பரந்த மார்பு, அகலத்தையுடைய மார்பு, அகற்சியை உடைய மார்பு, அகன்ற மார்பு
10180 வியன் தானை அகற்சியையுடைய படை
10181 வியன் தெரு அகற்சியையுடைய தெரு
10182 விரகறியாளன் அறிவுடையோன்
10183 விரகு உபாயம், அறிவு, பண்ணியாரம்
10184 விரல் கை கால்களின் இறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு, கை
10185 விரவு விரவுதல்
10186 விரவுதல் கலத்தல்
10187 விரவுப் பெயல் எங்கும் கலந்த பெயல்
10188 விராஅய் கலந்து
10189 விராஅன் ஓர் உபகாரி
10190 விராய கலந்த
10191 விரி விரித்தது, விரிந்த ஆடை
10192 விரி கதிர் மண்டிலம் மேல் விரியும் கதிரையுடைய இள ஞாயிறு
10193 விரிச்சி நற்சொல்
10194 விரிச்சி ஓர்த்தல் விரிச்சி நிற்றல், நற்சொல் கேட்க விரும்பி நிற்றல்
10195 விரிச்சி நிற்றல் நற் சொல் கேட்க விரும்பி நிற்றல்
10196 விரித்தல் பரப்புதல்
10197 விரிதல் வெடித்தல், அலர்தல், பரத்தல்
10198 விரி திரை கடல்
10199 விரிந்த பூ பிணி நெகிழ்ந்த பூ
10200 விரிநீர் திரை விரிகின்ற கடல்
10201 விரிநூல் ஆகமங்கள்
10202 விரிவிடம் அலர்கின்ற காலம்
10203 விருந்தயர்தல் விருந்தோம்பல்
10204 விருந்தாற்றுதல் விருந்து செய்தல்
10205 விருந்து அதிதி, புதுமை, விருந்தினர்
10206 விருந்து நாடு புதுநாடு
10207 விருப்பு விருப்பம்
10208 விரும்புதி விரும்புகின்றாய்
10209 விரை வாசனை, சந்தனம் முதலியன
10210 விரைஇ கலந்து
10211 விரைஇய தொடுத்த, பிசைந்த
10212 விரை நடை வேகமான நடை
10213 விரைபு விரைந்து
10214 விரை மரம் வாசனையுள்ள மரம், அகில், சந்தனம்
10215 விரையல் விரையாதே
10216 விரையாதீமே விரையாதே
10217 விரையுபு விரையும்படி
10218 விரைவனன் விரைவான்
10219 வில் வானவில், விற் பொறி
10220 வில் அரணம் விற்படையாலாகிய காவல்
10221 வில் யாழ் வில் வடிவான யாழ் வகை
10222 வில்லக விரல் விற் பிடிப்பில் இணைந்து செறிந்த விரல்
10223 வில் உழுதல் விற் போர் செய்து வாழ்தல்
10224 வில் ஏர் உழவு விற் போர் செய்து வாழ்கை
10225 வில்லவன் மன்மதன், காமன்
10226 வில்லன் வில்லி
10227 வில்லாப் பூ விலைப்படுத்தற்காகாத பயனற்ற பூ
10228 வில்லியாதன் திண்டிவனத்தருகிலுள்ள மாவிலங்கை என்ற நசுரத்தில் வாழ்ந்த ஒரு தலைவன்
10229 வில்லோர் வில்லாளர்
10230 விலக்கிய விலக்குதற்கு
10231 விலக்கினை போகாமல் தடுத்தாய்
10232 விலக்குதல் கூடாதென்று தடுத்தல்
10233 விலங்கல் மலை
10234 விலங்காக விலங்குதலுண்டாக
10235 விலங்கிட்ட விலங்க இட்டு வைத்த
10236 விலங்கின்று விலக்கிற்று
10237 விலங்கினை தப்பினாய்
10238 விலங்கு குறுக்கு, குறுக்கானது, மான், வேறுபாடு
10239 விலங்கு எயிறு வளைந்த எயிறு
10240 விலங்கு ஓரார் வேறாக ஓரார்
10241 விலங்கு கண் ஒருக்கணித்து நோக்கும் கண்
10242 விலங்கு சினம் பொங்கி எழும் சினம்
10243 விலங்குதல் குறுக்கிடுதல், விலகுதல், அழித்தல், குறுக்கிட்டுக் கிடத்தல், தப்புதல், தடுத்தல்
10244 விலங்கு வளி சூறாவளி
10245 விலங்குவோள் குறுக்கிட்டுக் கிடப்போள்
10246 விலா வயிற்றுப் பக்கம்
10247 விலைக் கணிகை வேசை
10248 விலை நலப் பெண்டிர் பரத்தையர்
10249 விலையாகச் செய்வது விற்கப் படுவதொன்றாக முடைந்தது
10250 விலைவன் கூலியின் பொருட்டாக ஒன்றைச் செய்பவன்
10251 விலோதம் கொடி
10252 விழவணி சுபகாலங்களில் அணியும் அலங்காரம்
10253 விழவு விழா, திருநாள், சிறுசோற்று விழவு
10254 விழவு ஆற்றுப்படுத்தல் உற்சவத்தை முடிவு செய்தல்
10255 விழவுக் களம் உற்சவம் நடைபெறும் இடம்
10256 விழா உற்சவம்
10257 விழாக் கால்கோள் திருநாளுக்கு அடிக் கொள்கின்ற நாள்
10258 விழிக்குங்கால் விழிக்க
10259 விழித்தல் கண் திறத்தல்
10260 விழிப்ப விழிக்க
10261 விழு சிறந்த, துன்பமான
10262 விழுக் கலன் மேம்பட்ட அணிகலம்
10263 விழுக் கழஞ்சு சிறந்த கழஞ்சு
10264 விழுக்கு ஊன் விசேடம், மென்று தின்னாமல் ஒரு சேர உட்கொள்ளுகை
10265 விழுக் கூழ் சிறந்த பொருள்
10266 விழுக்கு நிணம் விழுங்குதற்குரிய நிணம், விழுக்காகிய நிணம்
10267 விழுத் தகை பிறர்க்கு இல்லாத சிறப்பு
10268 விழுத் தண்டு பெரிய ஊன்று கோல்
10269 விழுத் திணை உயர் குலம்
10270 விழுத் தூது சிறந்த தூது
10271 விழுத் தொடை தப்பாத தொடை, குறி தவறாது செல்லும் அம்பு
10272 விழுதல் கீழ் நோக்கி இழிதல்
10273 விழு நீர் மிக்க நீர்
10274 விழுப் பகை சீரிய பகை
10275 விழுப் புகழ் சீரிய புகழ்
10276 விழுப் புண் சீரிய புண், முகத்திலும் மார்பிலும் பட்ட புண்
10277 விழுப் பொருள் சீரிய பொருள்
10278 விழுமம் இடும்பை, துன்பம், வருத்தம், விழுதல்
10279 விழுமாத்தல் சிறப்படைதல்
10280 விழுமிய சிறந்த
10281 விழுமியம் சிறப்புடையேம்
10282 விழுமியோர் பெரியோர்
10283 விழுமுறின் துன்பமுற்றால்
10284 விழுமுறுதல் துன்புறுதல்
10285 விழுஉம் சிந்தும்
10286 விழைதல் விரும்புதல்
10287 விளக்கம் ஒளி, மோதிரம், மிக்க ஒளி, தீ, விளக்கு
10288 விளக்கு ஒளி பெறச் செய்கை
10289 விளக்குதல் தெளிவாக்குதல்
10290 விளக்குறுத்தல் ஒளிபெறச் செய்தல்
10291 விளங்கில் ஓர் ஊர்
10292 விளங்குதல் பிரகாசித்தல்
10293 விளங்கு பொன் உலோகத்தாற் செய்த கண்ணாடி
10294 விளர் வெண்மை, மென்மை
10295 விளர் ஊன் கொழுப்பினையுடைய ஊன்
10296 விளர்க் காய் வெள்ளைக் காய்
10297 விளரி நெய்தற்கு உரிய இரங்கற் பண்
10298 விளாவல் கலத்தல்
10299 விளி ஓசை, பாட்டு, அழைப்பு
10300 விளித்தல் பாடுதல், அழைத்தல் அழைத்துவிடல், கூவுதல்
10301 விளிதல் அழிதல், குறைதல், கெடுதல், ஓய்தல்
10302 விளிந்தோர் மாய்ந்தோர்
10303 விளிப்ப அழைப்பன
10304 விளிப்பது இசைக்கும் பாட்டு
10305 விளியா நீங்காத
10306 விளியாது அன்பு கெடாமல், மாறாமல்
10307 விளியா நோய் கெடாத காம நோய், கெடாத நோய்
10308 விளிவிடம் முடிவிடம், தங்குமிடம்
10309 விளிவு சாவு, கேடு, உறக்கம், இடையறவு
10310 விளைதல் முதிர்தல்
10311 விளைந்ததை விளைந்தது
10312 விளைந்து விளைந்தேன்
10313 விளையல் முதிரீதல்
10314 விளையாடல் விளையாடுதல்
10315 விளையுட்டு விளைவையுடையது
10316 விளையுள் முதிர்கை
10317 விற் பொறி சேர அரசரது வில் ஆகிய இலாஞ்சனை
10318 விறகு சமிதை
10319 விறத்தல் செறிதல், மிகுதல், அஞ்சுதல்
10320 விறந்த செறிந்த
10321 விறந்து அஞ்சி
10322 விறல் விசேடம், வெற்றி, சிறப்பு, பெருமை
10323 விறல் திறன் விறலாகிய திறம்
10324 விறல் நலம் வெற்றியினையுடைய நலம்
10325 விறல் வென்றி போர் வீரத்தால் உண்டாகிய வெற்றி
10326 விறலி விறல்படப் பாடியாடும் மகள்
10327 விறலியர் விறல்படப் ஆடும் மகளிர்
10328 வினவல் கேட்டல், வினவாதே
10329 வினவன்மின் கேளன்மின்
10330 வினவின் வினவுவையாயின், கேட்டால்
10331 வினவு உசாவுதல், செவியேற்றல்
10332 வினாவுதல் விசாரித்தல்
10333 வினாய் கேட்டு
10334 வினாய வினாவின
10335 வினை தொழில், ஏவல், போர், காரியம், தீவினை
10336 வினைஇ வினாவி
10337 வினைக்கெட்டு தொழில் நீங்கி
10338 வினைக் கொண்டு தொழிலாக ஏறட்டுக் கொண்டு
10339 வினைஞர் உழவர்
10340 வினைநர் வினைஞர்
10341 வினைவர் சந்து செய்விப்பவர், அமைச்சர்
10342 வினை வல் அதிகன் ஏவலிலே வல்ல அதிகன்
10343 வினை வலம் படுத்தல் எடுத்துக் கொண்ட செயலை வெற்றிபெறச் செய்தல்
10344 வினைவன் கம்மியன்
10345 வினை வாங்குதல் காரியத்தைப் புலப்படுத்தல்
10346 வினை வாய்த்து தாம் போன காரியம் வாய்த்து வந்து
10347 வினைவெஃகுதல் பொருள் தேடுதலை விரும்புதல்
10348 வினை வேட்டல் வினைமேற் சேறலை விரும்புதல்
மேல்