10349 வீ மலர், பூ
10350 வீஇ மலர்
10351 வீங்கக் கட்டுதல் இறுகக் கட்டுதல்
10352 வீங்கு செறிந்த
10353 வீங்கு இழை மாதர் இறுகின பூணினையுடைய மாதர்
10354 வீங்குதல் மிகுதல், செறிதல், இறுகுதல், விறைப்பாய் நிற்றல், சிறத்தல், விம்முதல்
10355 வீங்கு நீர் பெருகுகின்ற நீர்
10356 வீசுதல் இரட்டுதல், வரையாது கொடுத்தல், சிந்துதல், சிதறுதல், பரத்தல், பெய்தல்
10357 வீ சேர்தல் பூ அணிதல்
10358 வீடு விடுதல்
10359 வீடு கொள்ளுதல் வரி முதலியன நீங்கப் பெறுதல்
10360 வீடுதல் ஒழிதல்
10361 வீடு பெற்றாய் கை விடுதலைப் பெற்றாய்
10362 வீதல் அழிதல், மாறுதல், இறத்தல், இன்றாதல், கெடுதல்
10363 வீயகம் பூ
10364 வீயாது நீங்காது, மாறாது, கெடாமல்
10365 வீயும் மாயும்
10366 வீவு கெடுகை, கேடு
10367 வீழ் விழுது, ஆலம் விழுது, விருப்பம், தாலி நாண்
10368 வீழ் ஆலி வீழ்கின்ற ஆலங்கட்டி
10369 வீழ் இல் தாழை தென்னை
10370 வீழ்க்கை விரும்புதல்
10371 வீழ் குடி தளர்ந்த குடி
10372 வீழ்த்தல் தாழ இருத்தல், கொல்லுதல், கொன்று வீழ்த்தல்
10373 வீழ்தல் விழுதல், விரும்புதல், தாழ்தல்
10374 வீழ் துணை அன்புள்ள பெடை
10375 வீழ்தும் விரும்புவேம்
10376 வீழ்ந்தன்று மடிந்தது, விழுந்தது
10377 வீழ்ந்தார் விரும்பினவர்
10378 வீழ்ந்தோர் பட்டோர்
10379 வீழ்பவன் விரும்பப்பட்டவன்
10380 வீழ் பிடி விரும்பின பிடி
10381 வீழ் பெடை விரும்பின பேடுகள்
10382 வீழ்வார் விரும்புவார், விரும்பும் மகளிர்
10383 வீழுநர் விரும்பினவர், விரும்புவார்
10384 வீளை அம்பின் ஒலி, சீழ்க்கை, சிள்ளென்ற ஓசை
10385 வீற்றிருத்தல் கவலையின்றி இருத்தல்
10386 வீற்று வளம் பிற நாட்டுக்கு இல்லாத செல்வம்
10387 வீறு வெற்றி, பொலிவு, சிறப்பு, வேறு ஒன்றற்கு இல்லாத அழகு
10388 வீறுதல் கீறுதல்
10389 வீறு வீறு வேறு வேறு
மேல்