10390 வெஃகுதல் விரும்பி வாங்கிக் கொள்ளுதல், விரும்புதல்
10391 வெக்கை கடா விடுங் களம்
10392 வெகுள் நோக்கு கோபப் பார்வை
10393 வெகுள்வோள் சினங்கொள்பவள்
10394 வெகுளி கோபம்
10395 வெகுளுதல் கோபித்தல்
10396 வெங் கதிர் காயும் அறை விரும்பிய ஞாயிற்றைக் கெடுக்கும் மாணிக்கப் பாறை
10397 வெங்கதிர்ச் செல்வன் சூரியன்
10398 வெங் காடு பாலை நிலத்துக் கொடிய காடு
10399 வெங் காதல் விருப்பம் பொருந்திய அன்பு
10400 வெங் குரல் விரும்பத்தக்க ஒலி
10401 வெங் கொள்கை கடிய கோட்பாடு
10402 வெங் கோடை வெய்ய கோடைக் காலம்
10403 வெஞ் சினம் கடுங் கோபம்
10404 வெஞ் சுடர் சூரியன்
10405 வெஞ் சோறு சுடு சோறு
10406 வெட்சி செடி வகை, ஒரு மலர்
10407 வெடி ஓசை, கேடு, நிமிர்ந்தெழுகை
10408 வெடிகொள்தல் மேலெழுதல்
10409 வெடி படல், வெடி படுதல் சிதறுதல்
10410 வெண் காழ் முயலை எறியும் தடி வகை, வெள்ளிய விதை
10411 வெண் காற் சேய் வெள்ளிய கால்களையுடைய சிவந்த ஏறு
10412 வெண்கிடை நெட்டி வகை
10413 வெண் குருகு நாரை
10414 வெண் கூதாளம் வெண்டாளி
10415 வெண் கை தொழில் செய்து பழகாத கை, அபிநயஞ் செய்யாது தாளத்திற்கு இசைய விடும் கை, வெள்ளிய கைப்பிடி
10416 வெண் கொடி வெற்றிக் கொடி
10417 வெண்ணி சோணாட்டதோர் ஊர்
10418 வெண்ணிலவு சந்திரிகை
10419 வெண்ணெய் தயிரிலிருந்து கடைந் தெடுக்கப்படும் சத்து
10420 வெண்ணெய்த் தெழி மோரைக் கையால் அலைக்கும் ஓசை
10421 வெண்ணெல் ஒரு வகை மலை நெல்
10422 வெண் திரை கடல்
10423 வெண்தேர் கானல்
10424 வெண் தோடு பனந் தோடு
10425 வெண் நரி நரி வகை
10426 வெண் நெட்டி வெண் கிடை
10427 வெண் பல் மீ உயர் வெள்ளிய பல்லின் மேல் எயிறு
10428 வெண் பொன் சுக்கிரன், வெள்ளிக் கோள்
10429 வெண் போழ் தாழை மடல்
10430 வெண் மண்டை பிச்சைக்காரர் கைக்கொள்ளும் உண்கல வகை
10431 வெண் மழை வெண் முகில், வெண் மேகம்
10432 வெண் மீன் சுக்கிரன்
10433 வெதிர் வெதிரம், மூங்கில்
10434 வெதிர் உழக்கு மூங்கில் உழக்கு
10435 வெதிரம் ஒரு மலை
10436 வெந் திறல் பெரு வலி
10437 வெந்தை நீராவியிலே புழுங்கியது, வெந்த உணவு
10438 வெந் நோய் வெவ்விய காம நோய்
10439 வெப்பர் சூடான உணவு
10440 வெப்பு கொடுமை, வெம்மை
10441 வெப்புள் வெம்மை
10442 வெம்பல் மிகு வெப்பம்
10443 வெம்புதல் மிகச் சூடாதல், வாடுதல், கொதித்தல்
10444 வெம்மை வெப்பம், விருப்பம்
10445 வெய்து வெப்பமுள்ளது, விருப்பம்
10446 வெய்து உயிர்த்தல் வெப்பமாக மூச்சு விடுதல்
10447 வெய்யன் விருப்பமுள்ளோன், விரும்பியிருப்பான், விரும்புவன்
10448 வெய்யார் விரும்புவார்
10449 வெய்யை விரும்பியிருப்பை
10450 வெய்யோய் விரும்புவோய்
10451 வெய்யோள் விரும்பத் தக்கவள்
10452 வெய்யோன் விரும்புவோன்
10453 வெயில் சூரிய வெளிச்சம், வெய்தாகிய பொழுது
10454 வெயில் துகள் வெயிலில் பறக்கும் அணு
10455 வெயில் மறை வெயிலை மறைத்தல்
10456 வெரிந் முதுகு
10457 வெரீஇ அஞ்சி, வெருவி
10458 வெரீஇய அஞ்சிய
10459 வெரு அச்சம்
10460 வெருக்கு விடை காட்டுப் பூனையின் ஆண்
10461 வெருகு காட்டுப் பூனை
10462 வெருவந்த அச்சம் வந்த, வெருவுதல் வந்த
10463 வெரு வருதல் அச்சந் தருதல்
10464 வெரு வரு தூமம் எடுத்தல் வெருவுதல் வருவதற்குக் காரணமான மருந்தினால் புகைத்தல்
10465 வெருவுதல் அஞ்சுதல்
10466 வெருவுற உய்த்தல் எல்லோரும் வெருவுதலுறும்படி தனக்குள்ள நாளைப் பயன் படாமற் செலுத்துதல்
10467 வெருள்பு வெருண்டு
10468 வெரூஉ வெருவு
10469 வெரூஉதல் மருண்டு அஞ்சுகை
10470 வெரூஉதும் வெருவுவேம்
10471 வெரூஉப் பிணை வெருவுதலையுடைய பிணை
10472 வெரூஉம் அஞ்சும்
10473 வெல்தல் செயித்தல், ஒத்தல்
10474 வெலீஇயோன் வெல்வித்தோன்
10475 வெவ்வர் வெம்மை
10476 வெவ் வெஞ் செல்வன் வெம்மையுடையதும் விரும்பப்படுவதுமாகிய இள ஞாயிறு
10477 வெள் வெண்மையான, ஒளி பொருந்திய
10478 வெள் அகட்டு யாமை வெளுத்த வயிற்றினையுடைய ஆமை
10479 வெள் அறுவை வெள்ளை ஆடை
10480 வெள் ஆம்பல் நீர்க்கொடி வகை
10481 வெள் இதழ் வெள்ளிய இதழ்
10482 வெள் இழுது வெண்ணெய்
10483 வெள் எலி எலி வகை
10484 வெள் எள் வெள்ளை நிறமான எள் வகை
10485 வெள் வரகு வரகு வகை
10486 வெள் வேல் வெள்ளிய வேல்
10487 வெள்ளம் பெருக்கு
10488 வெள்ளாங்குருகு வெண் நாரை வகை
10489 வெள்ளி வெண்மை, சுக்கிரன், என்னும் கோள்
10490 வெள்ளில் விளா மரம், விளாம் பழம், பாடை
10491 வெள்ளிய வள்ளம் வெள்ளி வள்ளம், வெள்ளிக் கிண்ணம்
10492 வெள்ளெனல் தெளிவாதற் குறிப்பு
10493 வெள்ளை வெண்மை, வெள்ளை மாடு, வெள்ளிய ஏறு, வெள்ளாடு
10494 வெள்ளை வரகு வரகு வகை, கவடி
10495 வெள்ளை வள்ளி வெள்ளியாலாகிய தோள் வளை
10496 வெள்ளென்றல் வெண்மையைச் செய்தல்
10497 வெள்ளென தெளிவாக, யாவர்க்கும் தெரிய
10498 வெள்ளோத்திரம் வெள்ளிலோத்திரம் என்னும் பாலை நில மரம்
10499 வெளிது வெள்ளிய ஆடை
10500 வெளிமான் சங்க காலத்துத் தலைவருள் ஒருவன்
10501 வெளில் யானைத் தறி, தயிர் கடைதற்கு நட்ட தூண், அணில், கம்பம்
10502 வெளிற்றுப் பனை வயிரமற்ற பனை
10503 வெளிறு இளமை, வயிரமின்மை
10504 வெளிறுபோதல் ஒளி கெடுதல்
10505 வெற்பு மலை, பக்க மலை
10506 வெற்றம் வெற்றி
10507 வெறி ஒழுங்கு, வாசனை, வெறியாட்டு, வெறிப்பாட்டு, அச்சம், மணம்
10508 வெறி அயர்தல் வெறியாட்டு ஆடுதல்
10509 வெறித்தல் மதங் கொள்ளுதல், வெருவுதல், மதத்தால் மயங்குதல்
10510 வெறிது பயன் இன்மை
10511 வெறி நிரை ஒழுங்குபட்ட திரள்
10512 வெறி மனை வெறிக்களம்
10513 வெறியா வெருவி
10514 வெறியாள் வெறியாட்டாளன்
10515 வெறுக்கை அருவருப்பு, செல்வம், வாழ்வின் ஆதாரமாயுள்ளது
10516 வெறுத்த மிக்க
10517 வெறுத்தல் செறிதல், நெருங்குதல், மிகுதல், செறித்தல்
10518 வெறு நரையோர் முழு நரையுள்ள முதியவர்
10519 வெறுப்ப மிக
10520 வென் வெற்றி
10521 வென்றியர் வெற்றியை உடையர்
10522 வென் வேல் வெல்கின்ற வேல்
மேல்