| 10523 |
வேகம் |
கோபம் |
| 10524 |
வேங்கடம் |
திருவேங்கடமலை |
| 10525 |
வேங்கை |
ஒரு மலை, ஒரு மரம், புலி |
| 10526 |
வேங்கைப் பொன் மருள் நறு வீ |
வேங்கை மரத்தினது பொன் ஒத்த நறிய மலர்கள் |
| 10527 |
வேங்கை மார்பன் |
ஒரு வீரன் |
| 10528 |
வேசரி |
கோவேறு கழுதை |
| 10529 |
வேசனை நாற்றம் |
சூரிய வெப்பத்தாற் குளம் முதலியவற்றின் நீரினின்று எழும் நாற்றம் |
| 10530 |
வேட்கை |
விருப்பம், ஆசை |
| 10531 |
வேட்கோ |
குயவன் |
| 10532 |
வேட்டக்குடி |
வேட்டுவர் வீடு |
| 10533 |
வேட்டம் |
வேட்டை, விருப்பம், விரும்பிய பொருள், விரும்பினது |
| 10534 |
வேட்டல் |
யாகம் பண்ணுகை, விரும்புதல் |
| 10535 |
வேட்டார் |
விரும்பினார் |
| 10536 |
வேட்டுவன் |
வேட்டைக்குச் செல்வோன் |
| 10537 |
வேட்டெழுதல் |
விரும்பிப் போதல் |
| 10538 |
வேட்டை |
வேட்டையாடுதல் |
| 10539 |
வேட்டோர் |
விரும்பியோர் |
| 10540 |
வேட்பின் |
விரும்பினால் |
| 10541 |
வேட்பு |
விருப்பம் |
| 10542 |
வேடு |
வேடர் தொழில் |
| 10543 |
வேண்டல் |
விரும்பல் |
| 10544 |
வேண்டாதார் |
விரும்பாதார், பகைவர் |
| 10545 |
வேண்டாது |
வேண்டாததொரு காரியம் |
| 10546 |
வேண்டார் |
பகைவர் |
| 10547 |
வேண்டார் இல் |
வேண்டாத வீடு |
| 10548 |
வேண்டிய வேண்டியாங்கு எய்தல் |
நுகர விரும்பியவற்றை விரும்பியபடியே பெறுதல் |
| 10549 |
வேண்டியார் |
விரும்பினவர், பரத்தையர் |
| 10550 |
வேண்டுதல் |
விரும்புதல், விரும்பிக் கேட்டல், இரத்தல் |
| 10551 |
வேண்டுதி |
விரும்பா நின்றாய் |
| 10552 |
வேண்டுதியாயின் |
விரும்புவாயானால் |
| 10553 |
வேண்டுதும் |
விரும்புகின்றோம் |
| 10554 |
வேண்டுநர் |
விரும்புவோர் |
| 10555 |
வேண்டுவல் |
இரப்பேன், விரும்பா நின்றேன், விரும்புவேன், வேண்டுவேன் |
| 10556 |
வேண்டேன் |
விரும்பேன் |
| 10557 |
வேண்மாள் |
வேளிர் குலப் பெண், வேளிர் குலத்து மகள் |
| 10558 |
வேத்தவை |
இராச சபை |
| 10559 |
வேத முதல்வன் |
கடவுள் |
| 10560 |
வேதல் |
சுடுதல், சினமுறுதல் |
| 10561 |
வேதினம் |
கருக்கரிவாள் |
| 10562 |
வேது |
சூடான ஒற்றடம் |
| 10563 |
வேது கொள்தல் |
வேது பிடித்தல், ஆவிபுகை முதலியவற்றால் உடலை வெம்மை செய்தல், ஒற்றடம் கொடுத்தல் |
| 10564 |
வேந்தன் |
அரசன் |
| 10565 |
வேந்து |
அரசு |
| 10566 |
வேந்தூட்டு அரவம் |
வேந்தன் இனி திருந்து வாழ்வதற்காகத் தெய்வத்திற்கு மடை கொடுக்கும் ஆரவாரம் |
| 10567 |
வேம்பு |
மர வகை |
| 10568 |
வேய் |
மூங்கில், வேயின் தன்மை |
| 10569 |
வேய்த்திறம் |
ஏறட்டுக் கொள்ளும் கூறு சேர்த்துக் கொள்ளும் வகை |
| 10570 |
வேய்தல் |
சூடுதல், பொருந்துதல், சூட்டுதல் |
| 10571 |
வேய் நலம் இழந்த தோள் |
மூங்கில் தன் நலன் இழத்தற்குக் காரணமான தோள் |
| 10572 |
வேய்வை |
யாழ் நரம்பின் குற்ற வகை |
| 10573 |
வேர் |
தாவரங்களின் வேர், வேர்வை |
| 10574 |
வேரல் |
சிறு மூங்கில் |
| 10575 |
வேரி |
மது |
| 10576 |
வேல் |
நுனிக் கூர்மையுடைய ஆயுத வகை |
| 10577 |
வேல் நுதி |
வேலின் முனை |
| 10578 |
வேல் நுதியுற நோக்கல் |
வேல் நுதி செய்யுங் கொடுமையுறும்படி நோக்குதல் |
| 10579 |
வேல் வல்லான் |
முருகன், வேலை ஏந்திய முருகன் |
| 10580 |
வேலன் |
முருக பூசனை செய்பவன் |
| 10581 |
வேலாழி |
கரையையுடைய கடல் |
| 10582 |
வேலி |
முள், கழி முதலியவற்றாலான அரண், மருத வைப்பு, எல்லை |
| 10583 |
வேலூர் |
உப்பு வேலூர் |
| 10584 |
வேலை |
கானல் |
| 10585 |
வேவை |
வெந்தது |
| 10586 |
வேழம் |
வேழக் கரும்பு, கொறுக்கை, பேய்க் கரும்பு, யானை, பரணி நட்சத்திரம், மேட ராசி |
| 10587 |
வேழ முகவை |
யானையாகிய பரிசு |
| 10588 |
வேள் |
முருகக் கடவுள், வேளிர் குலத்தான் |
| 10589 |
வேள் நீர் |
தாகம் அடங்க உண்ணும் நீர் |
| 10590 |
வேள்வி |
ஐவகை வேள்வி, பூசனை, களவேள்வி, யாகம் |
| 10591 |
வேள்வித் தூணம் |
யாக பலிக்குரிய பிராணியைக் கட்டி வைக்கும் தம்பம் |
| 10592 |
வேள்வி முதல்வன் |
வேள்வி நாயகன், யாகத் தலைவன் |
| 10593 |
வேளா |
மணஞ் செய்யப்படாத, வேள்வி செய்யாத |
| 10594 |
வேளாண்மை |
உபகாரம் |
| 10595 |
வேளாண் வாயில் |
யாசிக்கை, உபசரித்தற்குரிய வழி |
| 10596 |
வேளாப் பார்ப்பான் |
யாகம் பண்ணாத ஊர்ப் பார்ப்பான், இலௌகிகப் பிராமணன் |
| 10597 |
வேளா முயக்கம் |
விரும்பாத முயக்கம் |
| 10598 |
வேளார் |
விரும்பார் |
| 10599 |
வேளிர் |
தமிழ் நாடாண்ட ஒரு சார் அரசர் குலத்தார் |
| 10600 |
வேளை |
தைவேளை, ஒரு கீரை |
| 10601 |
வேற்றான் |
வேற்றவன், பகைவன் |
| 10602 |
வேற்றுப் புலம் |
பகையிடம் |
| 10603 |
வேற்று முனை |
பகைப் படை |
| 10604 |
வேற்றுமை |
விரோதம், ஏற்றத் தாழ்வு, மெய் வேறுபாடு, வேறுபாடு |
| 10605 |
வேறல் |
வெல்லுதல் |
| 10606 |
வேறாக |
நீங்கலாக, வெவ்வேறாம்படி, வேறுபடும்படியாக |
| 10607 |
வேறாதல், வேறாகுதல் |
முன்னைய தன்மை குலைதல், ஒதுக்காதல், கெட்டிருத்தல், பழைய தன்மை குலைதல், வேறாயிருத்தல் |
| 10608 |
வேறு |
தீங்கு, புதிது |
| 10609 |
வேறுணர்தல் |
மாறுபடக் கருதுதல் |
| 10610 |
வேறுபடுதல் |
மாறுபடுதல் |
| 10611 |
வேறு புலம் |
வேறாகிய நிலம் |
| 10612 |
வேனல் |
வேனில் |
| 10613 |
வேனில் |
வேனிற் காலம், வெப்பம் |
| 10614 |
வேனிலான் |
இளவேனிலில் |