939 சுட்டு
940 இஃது சுட்டு
941 இஃது ஒத்தன் இவன் ஒருத்தன்
942 இஃதோ இத்தன்மைத்தோ, இதுவோ
943 இகணை ஒருமரம்
944 இகத்தந்தாய் புறப்படுதலைச் செய்தாய்
945 இகத்தர போம்படி
946 இகத்தல் கடத்தல், கைவிடுதல், நீங்குதல், விட்டு நீங்குதல்
947 இகந்தவை நீங்கின பொருள்கள்
948 இகந்தன்று நீங்கியது
949 இகல் பகை, போர், புலவி, மாறுபாடு
950 இகலாட்டி மாறுபாட்டை யுடையவள்
951 இகலி மாறுபட்டு
952 இகலிடும் மாறுபாடுகளைக் கொடுக்கும்
953 இகலுதல் மாறுபடுதல்
954 இகவாய் கடவாய்
955 இகழ்தல் சோர்ந்திருத்தல்
956 இகழ் பதம் அயர்ந்திருக்கும் காலம்
957 இகழ் பாடுவோர் இழித்துரைப்போர்
958 இகழுநர் பகைவர்
959 இகா தோழி, தாழாத
960 இகு வீழ்ச்சி
961 இகு கரை இடிந்த கரை
962 இகுத்த தாழ்ந்த
963 இகுத்தல் தாழ்த்துதல், சொரிதல், அறைதல், வாத்தியம் வாசித்தல், ஒலித்தல், அடித்தல், தாழ்க்கப் படுதல், இழுத்தல்
964 இகுதருதல் வீழ்தல், சொரிதல்
965 இகுதல் கரைந்து விழுதல், விழுதல், தாழ்தல்
966 இகுப்பம் திரட்சி
967 இகுபு இற்று
968 இகும் ஓர் அசைச் சொல்
969 இகுவன கரைந்து தாழ்வன
970 இகுளை தோழி, இளையோள்
971 இகூஉ அடித்து
972 இங்கல் தங்கல்
973 இங்குலிகம் சாதிலிங்கம்
974 இச்சம் இச்சை
975 இசின் ஓர் இடைச் சொல்
976 இசை ஓசை; பாட்டு, புகழ்
977 இசைஇ இசைத்து
978 இசைத்தல் அறிவித்தல், யாழ் முதலி யன ஒலித்தல், கூறுதல்
979 இசை நிற்ப பாட்டு அடங்க
980 இசைப்ப ஒலிக்கையினால்
981 இசைமை ஒலி
982 இசையின் முழக்கோடே
983 இசைவது பொருந்துவது
984 இஞ்சி கோட்டைமதில், இடம், பூடு வகை
985 இட்டிகை செங்கல், பலி பீடம்
986 இட்டிய சிறிய
987 இட்டு சிறுமை, போகட்டு
988 இட்டு அருஞ் சிலம்பு குறுகிய செல்லுதற்கு அரிய பக்கமலை
989 இடக் கண்ணி அலர்ந்த கண்ணி
990 இடங்கர் முதலை வகை
991 இடத்தல் பிளத்தல்
992 இடந்திட்டு பிளந்து போகட்டு
993 இடம் பொழுது, செவ்வி, காலம்
994 இடம் பட இடம் உண்டாம்படி
995 இடரிய வருத்தத்தைச் செய்த
996 இடல் சொல்லுதல், மொழியிடல்
997 இடன் அகலம், நல்ல காலம், இடப் பக்கத்திலிருப்பவன், இடம், உலகம், காலம், செல்வம்
998 இடா இறை கூடை
999 இடாஅ குத்தி
1000 இடா ஏணி அளவிடப்படாத எல்லை
1001 இடி இடித்தல், பொடி, மா, உரு மேற்றின் இடி
1002 இடிக்கும் கேளிர் இடித்துரைக்கும் நண்பர்
1003 இடித்தல் முழங்குதல், கர்ச்சித்தல்
1004 இடிய இடிந்து போம்படி
1005 இடுக்கண் வருத்தம்
1006 இடுக அணிக
1007 இடுதல் இட்டு வைத்தல், போகடுதல், கொடுத்தல், உதிர்த்தல், குத்துதல்
1008 இடும்பை துன்பம், காமநோய், துயரம், மனவருத்தம், மிடி, வருத்தம்
1009 இடும்பை நோய் இடும்பையைத் தரும் (காம) நோய்
1010 இடை இடம், வழி, சமயம், தடுக்கை, காலம், வேறுபாடு, நடுவு நிலை, இடுப்பு, இடையீடு, உள், தடுத்தல், நடு
1011 இடைக்காடனார் இடைக்காடர் என்னும் ஒரு புலவர்
1012 இடைப் படுத்தல் இடையிடுதல்
1013 இடைப் படுதல் இடையீடுபடுதல்
1014 இடைபட நடுவே நிற்கும்படி
1015 இடை மடுத்தல் இடையே செருகுதல்
1016 இடைமுலை முலையிடை
1017 இடையறுத்தல் படை முதலியவற்றை ஊடறுத்துச் சென்று பிரித்தல்
1018 இடையிட்ட இடையே இட்டு வைத்த,
1019 இடையிட்ட இடையிலே இட்டு முடித்த
1020 இடையிடுபு இடையிட்டு
1021 இடையும் வருந்தும்
1022 இடை வழங்குதல் ஊடுபோதல், நடுவே செல்லுதல்
1023 இணர் பூங்கொத்து, பூ, பூவிதழ், ஒழுங்கு, கொத்து
1024 இணைத்தல் கட்டுதல்
1025 இணைதல் கூடுதல்
1026 இணைபு கூடி
1027 இதக்கை பனங்காயின் தலையிலுள்ள தோடு
1028 இதணம் இதண், பரண்
1029 இதல் ஒருவகைப் பறவை, சிவல்
1030 இதழ் கண்ணிமை, மாலை, பூ, பூவின் இதழ், உதடு
1031 இதழ் நீலம் நீலப் பூ
1032 இதற்படுதல் நிகழாநிற்றல்
1033 இதை கப்பற்பாய், புதுப் புனம்
1034 இந்திரர் தேவர்
1035 இந்திர விழவு மருத நிலத்துத் தெய்வமாகிய இந்திரனைக் குறித்துச் செய்யப்படும் திருவிழா
1036 இப்பி சிப்பி
1037 இம்பர் இவ் உலகம்
1038 இம்மென இமிர்தல் இம்மென்னும் ஓசைபட ஒலித்தல்
1039 இம்மை இப்பிறப்பு
1040 இமயம் ஒரு குலமலை, மேரு, இமயமலை
1041 இமிர்தர ஒலித்தலை உண்டாக்க
1042 இமிர்தல் ஒலித்தல், ஊதுதல், சிறிது ஒலித்தல், பாடுதல்
1043 இமிர்ந்தார்த்தல் ஆளாபஞ் செய்து பாடுதல், சிறிதே ஒலித்து மிக ஆரவாரித்தல்
1044 இமிர்பு ஊதுதல் ஆரவாரித்துச் சென்று ஊதுதல், ஒலித்துத் தாதை ஊதுதல்
1045 இமில் காளையின் முதுகின் மேலுள்ள புடைப்பு, திமில்
1046 இமிழ் ஒலி, ஆரவாரம்
1047 இமிழ் இசை முழங்குகின்ற ஓசை, இயமரம்
1048 இமிழ் இசை மண்டை உறி பால் பற்றறச் சீவுதலைச் செய்த (நன்கு துலக்கிய) கறவைக் கலங்கள் வைத்த உறி
1049 இமிழ் கானல் ஒலிக்கின்ற கடற்கரை
1050 இமிழ்தல் ஒலித்தல், தழைத்தல், முழங்குதல்
1051 இமைத்தல் ஒளி விடுதல், தூங்குதல், விளங்குதல்
1052 இமைத்தோர் இமைகொட்டுவோர்
1053 இமைப்பு விளக்கம்
1054 இமைப்பு வரை கண்ணிமைத்தொழில் நிகழுங் காலத்தின் எல்லை
1055 இமை பிறத்தல் இமைத்தல்
1056 இமையத்து உம்பரும் இமயத்துக்கு வட திசையிலேயும்
1057 இமையம் இமயமலை
1058 இமையாமை துயிலாமை
1059 இமையெடுத்தல் இமையை விழித்தல்
1060 இயக்கம் நடை
1061 இயக்கல் ஒலிக்கச் செய்தல், வாசித்தல்
1062 இயக்கன் ஓர் உபகாரி, இயக்குபவன்
1063 இயக்கி செலுத்தி
1064 இயக்கு போக்கு, அலைவு
1065 இயக்குதல் இயங்குவித்தல், ஒலிப்பித்தல், அசைத்தல், கொட்டுதல்
1066 இயக்கும் செலுத்தும்
1067 இயங்கா போகாத
1068 இயங்கா வையம் பூமி
1069 இயங்கு எயில் திரிபுரம்
1070 இயங்குதல் செல்லுதல், ஓடுதல், திரிதல்
1071 இயங்குநர் வழிப்போவார்
1072 இயம் யாழ், வாச்சியம்
1073 இயம் புணர் தூம்பு நெடு வங்கியம் என்னும் வாத்தியம்
1074 இயம்புதல் ஒலித்தல்
1075 இயர் வியங்கோள் விகுதி
1076 இயல் தன்மை, இயல்பு, உழுவலன்பு, சாயல்
1077 இயல்பு ஒழுக்கம், இலக்கணம்
1078 இயலல் நடத்தல்
1079 இயலி நடந்து, அணுகி
1080 இயலியாள் திரிதரும் நிலைமையள் ஆயினாள்
1081 இயலுதல் அசைதல், நடத்தல், செய் தல், உலாவுதல், அணுகுதல், சித்திரம் முதலியன எழுதுதல்
1082 இயலும் திரியும், நடக்கும், போகும்
1083 இயலுவாய் நடக்கின்றவளே
1084 இயவர் வாத்தியக்காரர்
1085 இயவர் தீம் குழல் ஆம்பல் வாச்சியக்காரரின் இனிமையான குழலின் ஆம்பற் பண்
1086 இயவன் தோற்கருவியாளன், வாச்சியக்காரன்
1087 இயவு வழி
1088 இயவுள் தலைமை, எப்பொருட்கும் இறைவன், வழி
1089 இயற்கை இயல்பு
1090 இயற்றல் செய்தல்
1091 இயற்றி செலுத்தி
1092 இயற்றியது பண்ணினது
1093 இயற்றியாள் பண்ணப்பட்டாள்
1094 இயற்றுதல் படைத்தல்
1095 இயன் இயம், வாச்சியம்
1096 இயன்ற செய்த, சென்ற, பண்ணின
1097 இயன்ற போல் செய்தவை போல
1098 இயை தந்தார் கூடுதலைத் தந்தார்
1099 இயைதல் சேர்தல், பொருந்துதல்
1100 இயைந்ததை பொருந்தினது
1101 இயைவது பொருந்துவது, கூடும் நிலைமை
1102 இர இரவு, இரவமரம்
1103 இரக்குவேன் வந்தனென் இரந்து கொள்வேனாக வந்தேன்
1104 இரங்கல், இரங்குதல் கூறுதல், ஒலித்தல், வருந்துதல், இடித்தல், இரக்கங் கொள்ளுதல்
1105 இரங் காழ் இரமரத்தினது விதை
1106 இரங்குரல் இரங்கு குரல், ஒலிக்கின்ற முழக்கம்
1107 இரட்டுதல் மாறி ஒலித்தல், ஒலித்தல்
1108 இரத்தல் யாசித்தல், கெஞ்சுதல்
1109 இரத்தி இத்தி மரம், இலந்தை மரம்
1110 இரப்பது யாசித்து நிற்பது
1111 இரலை கலைமான்
1112 இரவம் இரமரம், இருள்மரம்
1113 இரவல் இரத்தல்
1114 இரவலன் யாசகன்
1115 இரவன் மாக்கள் இரவலர்
1116 இரவு இராத்திரி, இரத்தல்
1117 இரற்றுதல் சத்தமிடுதல்
1118 இரா இரவு
1119 இரா நாள் இராப்பொழுது
1120 இரிக்குதல் நீங்கச் செய்தல்
1121 இரிக்கும் ஓட்டும்
1122 இரிந்தான் தோற்று ஓடியவன்
1123 இரிபு கெட்டு
1124 இரியல் கெட்டு ஓடுதல்
1125 இரியல் போக்குதல் சாய்த்துக் கொடுத்தல்
1126 இரியல்போதல் கெடுதல்
1127 இரியுந்து இரியும்
1128 இரிவுறல் கெடுதலுறல்
1129 இரீஇ இருத்தி, இருந்து, வைத்து
1130 இரீஇய இருத்திய
1131 இரீஇயுந்து கெட்டு ஓடும்
1132 இருக்குமது இருப்பது
1133 இருக்குவேன் இருப்பேன்
1134 இருக்கை உட்கார்ந்திருக்கை, குடியிருப்பு, கோள்கள் இருக்கும் இராசி
1135 இருக்கோ இருக்கவோ
1136 இருங் கடல் கரிய கடல்
1137 இருங் கல் பெரிய மலை
1138 இருங் கலி மிக்க ஆரவாரம்
1139 இருங் கழி கரிய கழி
1140 இருங் காப்பு பெரிய குறும்பு
1141 இருங் குடி ஆயர் பெரிய குடியில் பிறந்த ஆயர்
1142 இருங் குயில் கரிய குயில்
1143 இருங்குன்றம் பெரியமலை, திருமாலிருஞ் சோலைமலை
1144 இருங் கூந்தல் கரிய கூந்தல்
1145 இருங்கோவேள் வேளிர் தலைவருள் ஒருவன்
1146 இரு சீர்ப் பாணி இரட்டைத் தாளம்
1147 இரு சுடர் சூரிய சந்திரர்
1148 இருஞ் சிலம்பு கரிய மலை
1149 இருஞ் சிறை வண்டு பெரிய சிறகுகளை உடைய வண்டு, கரிய சிறகுகளை உடைய வண்டு
1150 இருஞ் சினம் பெருங் கோபம்
1151 இருஞ் சோலை பெரிய சோலை
1152 இருத்தல் தங்கியிருத்தல், அமர்ந்து இருத்தல்
1153 இருத்தி கிடத்தி
1154 இருத்துமோ இருப்பேமோ
1155 இருந்தீமோ இரு
1156 இருந் தும்பி கரிய தும்பி
1157 இருந்தையூர் மதுரையிலுள்ள விஷ்ணு ஸ்தலம்
1158 இருந் தோடு பெரிய தொகுதி
1159 இருப்பு இருக்கத் தக்க இடம்
1160 இருப்பை ஓர் ஊர், ஒருவகை மரம்
1161 இரு பிறப்பாளர் உபநயனத்திற்கு முன்பு ஒரு பிறப்பும், அதன் பின்பு ஒரு பிறப்பும் ஆகிய இரு பிறப்பினை உடையவர், அந்தணர்
1162 இரும் இருமல்
1163 இரும் பனம் பசுங் குடை பெரிய பசிய பனங் குடை
1164 இரும் பிணர்த் துறுகல் கரிய சருச் சரையை யுடைய குண்டுக்கல்
1165 இரும்பு ஓர் உலோகம், படைக்கலம், யானைத் தந்தப் பூண்
1166 இரும் புதல் பெரிய புதர்
1167 இரும் புலிக் கோள் வல் ஏறு கொல்லுதல் வல்ல பெரிய ஆண்புலி
1168 இரும்புள் மகன்றில்
1169 இரும் புறம் பெரிய முதுகு
1170 இரும் புனம் பெரிய கொல்லை
1171 இரும் பெண்ணை கரிய பனை
1172 இரும்பொறை சேரர் பட்டப் பெயர்களுள் ஒன்று, பெரிய மலை
1173 இரு மருங்கினம் இரு உடலை உடையேம்
1174 இரு மருந்து சோறும் தண்ணீரும்
1175 இருமு இருமல்
1176 இருமை கருமை, பெருமை
1177 இருவாம் நாம் இருவரும்
1178 இருவி தாள், தினை அரிந்த தாள்
1179 இரு வெதிர் பெரிய மூங்கில்
1180 இருள் கறுப்பு, மயக்கம், துன்பம், இருட்டு, இரவு, மாலைக் காலம்
1181 இருள் மதி கிருஷ்ண பட்சத்துச் சந்திரன், அமாவாசை
1182 இருளிய இருண்ட
1183 இரை உணவு
1184 இல் இல்லை, வீடு, குடிப் பிறப்பு, சிற்றில்
1185 இல்லத்துக் காழ் தேற்றாவினுடையவிதை
1186 இல்லம் தேற்றா மரம், வீடு
1187 இல்லர் இல்லிடத்தார்
1188 இல்லவர் பொருளில்லாதவர், வீட்டில் உள்ளவர்
1189 இல்லவன் தரித்திரன்
1190 இல்லா இல்லாத
1191 இல்லாகியர் இல்லையாகுக
1192 இல்லாயின் இல்லையாயின், உளரல்லராயின்
1193 இல்லானும் இல்லையாயினும்
1194 இல்லி துளை
1195 இல்லிரே இல்லில் உறைகின்றவர்களே
1196 இல்லேல் இல்லையாயிருக்குமாயின்
1197 இல்லோர் வறியோர்
1198 இல்வழி இல்லாத இடத்து, இல்லாத காலத்து
1199 இல ஏடீ என்னும் பொருளுள்ள விளிப் பெயர்
1200 இலக்கம் குறி, குறி பார்த்து எய்யப்படும் பொருள்
1201 இலங்கடை இல்லாத இடத்து
1202 இலங்கல் விளங்கல்
1203 இலங்கு கதிர் முத்தம் விளங்குகின்ற ஒளி விடுகின்ற முத்துக்கள்
1204 இலங்கு கோல் அவிர் தொடி விளங்குகின்ற கோற்றொழில் விளங்குந் தொடி
1205 இலங்குதல் விளங்குதல்
1206 இலங்கு நிலவின் இளம்பிறை விளங்குகின்ற நிலவைத்தரும் பிறைச்சந்திரன்
1207 இலங்கை தொண்டைநாட்டில் ஓர் ஊர், மாவிலங்கை
1208 இலஞ்சி வாவி, குளம், மடு, மகிழமரம்
1209 இலம் இல்லாமை, வறுமை, உடையே மல்லேம்
1210 இலம் படுதல் வறுமையடைதல்
1211 இலம்படு புலவர் வறுமையுற்ற யாழ்ப் புலவர்
1212 இலம்பாடு வறுமை
1213 இலமலர் இலவ மலர்
1214 இலிற்றுதல் சுரத்தல், துளித்தல்
1215 இலேன் உடையேனல்லேன், வேறு உடையேனல்லேன்
1216 இலை படலை மாலை, இல்லாய்
1217 இலை ஒலித்தல் இலை தழைத்தல்
1218 இலைக் குரம்பை இலையால் வேய்ந்த குடில்
1219 இலை கூம்புதல் இலை குவிதல்
1220 இலை நெடு வேல் இலை போன்ற தோற்றத்தை உடைய நீண்ட வேல்
1221 இவ் இவை
1222 இவ்வே இவையே
1223 இவண் இங்கே, இவ்விடம், இவ் உலகம்
1224 இவணர் இவ்வுலகத்தார்
1225 இவணை இவ்விடத்திலுள்ளாய்
1226 இவர் கொடிப் பீரம் படர்கின்ற கொடியை உடைய பீர்க்கு
1227 இவர் தரல் பரந்து பாராதேகொள், வாராதே
1228 இவர்தல் உலாவுதல், படர்தல், பரத் தல், ஏறுதல், பாய்தல், விரும்புதல், பரந்து வருதல், வந்து தோன்றுதல்
1229 இவர்ந்தாங்கு பாய்ந்தாற்போல
1230 இவற்கு இவனுக்கு
1231 இவறுதல் உலாவுதல்
1232 இவறு திரை உலாவுகின்ற அலை
1233 இவுளி குதிரை
1234 இழக்குவென் இழப்பேன்
1235 இழந்ததை இழந்தது
1236 இழப்பது அழிவது, போக்குவது
1237 இழப்பதை அருளுவார் இழப்பதற்கு அருளுவதைச் செய்வார்
1238 இழவாக்கால் இழவாத காலத்து
1239 இழிசினன் புலைமகன்
1240 இழிதருதல் குதித்தல், வீழ்தல்
1241 இழிதல் இறங்குதல், குதித்தல், தாழ்தல்
1242 இழிந்த மீன் எக்சுரிலே கிடந்த மீன்
1243 இழிந்தன்று இழிந்தது இழி பிறப்பாளன், இழி பிறப்பினோன் இழிசினன், புலையன்
1244 இழிபு இழிந்து, குன்றுதல்
1245 இழி புனல் வடிந்த நீர்
1246 இழுக்கியான் தப்பியவன்
1247 இழுக்கு வழுக்கு நிலம்
1248 இழுக்குதல் துன்புறுதல், இழத்தல்
1249 இழுது நெய், நிணம்
1250 இழுமென இழுமென்னும் ஓசை உடைத்தாய்
1251 இழுமெனல் ஒலிக் குறிப்பு
1252 இழை துகில், அணி, அணிகலன், கலம், பூண், மலராற் பூண்வடிவாகக் கட்டினது, தேர்க்குரிய படை, நூல், மணிக்கோவை
1253 இழைஇயர் அமைக்கும் பொருட்டு
1254 இழைசூழ் வட்டம் ஒரு பண்ணியாரம்
1255 இழைத்தல் செய்தல், நுண் பொடி யாக்குதல், எழுதுதல், சமைத்தல்
1256 இழை நெகிழ் செல்லல் ஆபரணம் கழலும் வகையில் ஏற்படும் துன்பம்
1257 இளக்கும் அசைக்கும்
1258 இளங் கள் புதிய கள்
1259 இளங் களிறு இளமையுடைய களிறு
1260 இள நாள் இளவேனில்
1261 இளம் பார்ப்பு சிறிய குட்டி
1262 இளம் பாலாசிரியன் இளம் பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன்
1263 இளமணல் குருத்து மணல்
1264 இள மழை சிறு பெயலுள்ள மேகம்
1265 இள மாங்காய் இளைய மாவடு
1266 இளமை இளமைப் பருவம், யௌவனம்
1267 இளவேனில் ஒரு பருவம்
1268 இளி இளி என்னும் யாழ் நரம்பு, ஒருவகைச் சுரம்
1269 இளிப்படுதல் அகப்படுதல்
1270 இளிவு இழிவுடையது
1271 இளை காவற்காடு
1272 இளைப்படல் காவற் படல்
1273 இளையர் இளைஞர், ஏவல் செய்வார், வீரர்
1274 இளையன் தம்பி
1275 இளையார் இளைய பிள்ளைகள்
1276 இற் கடை வீட்டு வாயில்
1277 இற்றவை முறிந்தவை
1278 இற்றா இத்தன்மைத்தாக
1279 இற்றி இத்தி
1280 இற்று இத்தன்மைத்தாய் இராநின்றது
1281 இற்றை, இற்றை நாள் இன்று
1282 இறங்கு இணர்ப்படு கிளை தாழ்ந்த பூஞ் சினை
1283 இறங்குதல் வளைதல்
1284 இறங்கு பொறை வளைந்த கதிர்
1285 இறடி தினை
1286 இறத்தல் கடத்தல், நீங்குதல், மிகுதல், கைவிடுதல், பொருள்வயிற் பிரிதல், கடந்து போதல், நீர் வற்றுதல்
1287 இறத்திரால் இறப்பீராயின்
1288 இறந்தீவாய் கழிந்து போகின்றவளே
1289 இறந்தென போக
1290 இறந்தோர் பிரிந்தோர்
1291 இறப்பின் அல்லால் போவதின்றி
1292 இறப்பு அருங் குன்றம் கடத்தற்கு அரிய மலை
1293 இறல் கேடு
1294 இறவு இறாமீன்
1295 இறா இறாமீன்
1296 இறால் தேன் கூடு, தேனடை
1297 இறாவுதல் வாட்டி மயிர் போக வழித்தல்
1298 இறீஇயர் முறிவனவாக, கெடுவதாக
1299 இறுக்கல் கொடுத்தல்
1300 இறுகுதல் நெருங்குதல்
1301 இறுகு புல் காய்ந்த புல்
1302 இறுத்தது தங்கினது
1303 இறுத்தந்த வந்துவிட்ட
1304 இறுத்தரல் தங்குதலைச் செய்தல், வந்து விடுதல்
1305 இறுத்தருதல் வருதல்
1306 இறுத்தல் அம்பு முதலியன தைத்தல், சென்று விடுதல், தங்குதல், நிறுத்துதல், பெய்தொழித்தல், நிறுத்துதல், படுதல், கொடுத்தல், பண்ணுதல், வீழ்தல்
1307 இறுத்தன்று தங்கியது
1308 இறுதல் அழிதல், முறிதல்
1309 இறுதி கேடு, முடிவு காலம்
1310 இறுபு இற்று, ஒடிந்து
1311 இறும்பு இளமரக்காடு, குறுங்காடு, சிறுகாடு
1312 இறும்பூது வியப்பு, அதிசயம்
1313 இறுமார் இறுத்தற்கு
1314 இறுவரை பக்கமலை, அடிவாரம், பெரிய மலை, முறிந்த மலை
1315 இறை உயரம், தமையன் இறந்து படும் செய்கை இறைவன், திரட்சி வீட்டிறப்பு, முன்கை, சந்து, தங்குதல், அரசன், கப்பம், தலைவன்
1316 இறை இறை சந்துதொறும் சந்துதொறும்
1317 இறை கிழவன் அரசனாதல் தன்மையையுடையவன்
1318 இறை கூடுதல் அரசாளுதல்
1319 இறைகூர்தல் தங்குதல்
1320 இறை கொள்ளுதல் இறுத்தலைச் செய்தல், தங்குதல், கொள்ளுதல்
1321 இறைச்சி பிரியமானது, நேயம்
1322 இறைஞ்ச கவிழ, தாழ்ந்து தொங்க
1323 இறைஞ்சுதல் தாழ்தல், வளைதல், கவிழ்தல், வணங்குதல், வீழ்ந்து கிடத்தல்
1324 இறைப் பணைத் தோள் சந்தினையுடைய பருத்த தோள்
1325 இறை யமன் சனி
1326 இறையனார் கடைச் சங்க காலத்துப் புலவருள் ஒருவர்
1327 இறைவன் தலைவன்
1328 இன் இனிமை, அசை நிலை, சாரியை
1329 இன் உயிர் அன்னான் கணவன்
1330 இன் கடுங் கள் இனிய கடுமை யுடைய கள்
1331 இன்கண் கண்ணோட்டம்
1332 இன் கிளவி கேட்ட பின்பு இனிய கிளவி
1333 இன் குளகு அதிமதுரத் தழை
1334 இன் சாயற்று இனிய மென்மையை யுடையது
1335 இன் தீம் கிளவி கேட்ட காலத்தும் பின்பு காரியத்தும் இனிய கிளவி
1336 இன் துணை இனிய துணை
1337 இன் துணைப் பிரிந்தார் முன்பு இனிய துணையாயிருந்து பின்பு பிரிந்தார்
1338 இன் துயில் இனிய உறக்கம்
1339 இன் நகை எய்தினள் இழந்த தன் நலனே இழந்த நலத்தை இனிய அக மகிழ்ச்சியோடு எய்தினள்
1340 இன் நகை முறுவல் இனிய நகையுடன் கூடிய பற்கள்
1341 இன் நீர்ப் பசுங்காய் பச்சைப் பாக்கு
1342 இன்பம் இனிமை
1343 இன் பாயல் இனிய தூக்கம்
1344 இன்புறுத்தன்று இன்பத்தைக் கொடுத்தது
1345 இன்மை வறுமை
1346 இன்றி இன்றாக, இன்றாய், இன்றியிருக்க
1347 இன்று இந்நாள், இன்றாக, இன்றாகவும், இன்றாய், இன்றி
1348 இன்று தலையாக இன்று முதலாக
1349 இன்றையளவை இன்றையாகியபோது
1350 இன்ன இத்தன்மைத்தாகிய, இன்றி யமையாத
1351 இன்னகை இனிய நகையினை யுடையாள்
1352 இன்னல் துன்பம்
1353 இன்னன் இத்தன்மையை யுடையவன்
1354 இன்னா பொல்லாங்கு, தீமை
1355 இன்னா அருஞ் சுரம் இனிய அல்லாத செல்லுதற்கு அரிய சுரம்
1356 இன்னா அரும் படர் இனிய அல்லாத அரிய நோய்
1357 இன்னா இடும்பை இன்னாதாகிய வருத்தம்
1358 இன்னா இன் உரை இன்னாமையும் இனிமையும் உடைய உரை
1359 இன்னாங்கு வருத்தம். துன்பம்
1360 இன்னா நோய் பொறுத்தற்கு அரிய நோய்
1361 இன்னான் துன்பஞ் செய்பவன்
1362 இன்னியம் வாச்சியம்
1363 இன்னினி இப்பொழுதே
1364 இன்னீர் இத்தன்மையுடையீர்
1365 இன்னும் இன்னமும்
1366 இன்னும் இன்னும் மேன்மேலும்
1367 இன்னே இப்பொழுதே
1368 இன்னேம் இத்தன்மையேம்
1369 இன்னை இத்தன்மையை யுடையை
1370 இன்னையாகுதல் இத்தன்மையுடையையாயிருத்தல்
1371 இன்னோர் இத்தன்மையோர்
1372 இனங்காப்பார் கோவலர்
1373 இன நிரை இனமாகிய பசுக்கள், பசுக்கூட்டம்
1374 இனம் திரட்சி, நிரை, சுற்றத்தார், திரள், பசுத் திரள்
1375 இனம் தீர் பருந்து இனத்தினின்றும் பிரிந்து வந்த பருந்து
1376 இனன் இனம், கூட்டம்
1377 இனன் இரிந்து கூட்டத்தினின்று பின் வாங்கி
1378 இனி இப்பொழுது, இக்காலத்தே, மேல்
1379 இனிது இனிதாயிருக்கும், நன்றாக
1380 இனி மணல் இனிய மணல்
1381 இனிய படுதல் இனியவை தோன்றுதல்,'இன்னே வருவர்' என்னும் வாய்ச்சொல் உண்டாதல்
1382 இனை வருத்தம்
1383 இனை இருள் வருந்துதற்கு ஏதுவாகிய இருள்
1384 இனைகுவள் அழுது இரங்குவாள்
1385 இனைத்தல் வருத்துதல், கெடுத்தல்
1386 இனைத்து இவ்வளவினது
1387 இனைதல் அஞ்சுதல், இரங்குதல், கெடுதல், வருந்துதல்
1388 இனைதி வருந்துகின்றாய்
1389 இனை நலம் வருந்துதற்குக் காரணமான நன்மைகள்
1390 இனைபவள் அழுகின்றவள், வருந்துமவள்
1391 இனைபு கலங்கி, கெட்டு, வருந்தி
1392 இனைபுகு நெஞ்சம் வருந்திக் கெடுகின்ற நெஞ்சு
1393 இனையல் வருந்தற்க, வருந்தாதே
1394 இனையவள் இத்தன்மையளானவள்
1395 இனையன இத்தன்மையன
1396 இனையும் வருந்தாநிற்கும்
1397 இனையை இத்தன்மையை
1398 இனைவித்தல் வருத்துவித்தல்
மேல்