1399 ஈகை பொன், வண்மை, கொடை
1400 ஈகை அம் கண்ணி பொன்னாற் செய்த அழகிய கண்ணி
1401 ஈகை அரிய இழை மங்கலிய சூத்திரம்
1402 ஈகை வளம் கொடையின் பெருமை
1403 ஈங்கனம் இவ்வாறு
1404 ஈங்கீத்தை என்னிடத்தே தருவாய்
1405 ஈங்கு இங்கே, இப்பொழுது, இவ்விடம்
1406 ஈங்கு ஊங்கு இங்கும் அங்குமாக
1407 ஈங்கை இண்டஞ் செடி, ஒரு மரம்
1408 ஈட்டி குந்தம்
1409 ஈண்டல் கூடுதல்
1410 ஈண்டு இவ்விடம், இவ்வுலகம், என்னிடம்
1411 ஈண்டுதல் செறிதல், தொகுதல், திரளுதல், மிகுதல்
1412 ஈண்டு நீர் மிகுகின்ற நீர்
1413 ஈத்த தந்த
1414 ஈத்த பயம் கொடுத்ததனாலுள்ள பயன்
1415 ஈத்தல் கொடுத்தல்
1416 ஈத்தவை கொடுத்தவற்றை
1417 ஈத்தார் கொடுத்தார்
1418 ஈத்திலை ஈந்தினது இலை
1419 ஈத்தை தருவாய்
1420 ஈதல் ஒரு துணைவினை, நேர்தல், அளித்தல், கொடுத்தல்
1421 ஈதா இந்தா
1422 ஈமத் தாழி முதுமக்கட் தாழி
1423 ஈமம் பிணஞ் சுடுதற்கு அடுக்கும் விறகு அடுக்கு
1424 ஈயல் ஈசல்
1425 ஈயல் மூதாய் இந்திர கோபம், தம்பலப் பூச்சி
1426 ஈர் ஈரம், பசுமை, நெய்ப்பு, பேன் முட்டை, ஈர்க்கு(ஆர்க்கு), இரண்டு
1427 ஈர் அறை புறவறைக்கு உள்ளாகிய அறை
1428 ஈர் இடை இரண்டு புறம்
1429 ஈர் இதழ் அலரி ஈரமான இதழை யுடைய பூ
1430 ஈர் இதழ் உண்கண் ஈரம் பொருந்திய இமையையுடைய மையுண்ட கண்கள்
1431 ஈர் இலை பெரிய இலை
1432 ஈர் உயிர்ப் பிணவு சூற் கொண்ட பிணவு, கருவுற்றிருக்கும் பெண்புலி
1433 ஈர் ஐம்பதின்மர் நூற்றுவர், துரியோதனாதியர்
1434 ஈர் ஓதி நெய்த்த ஓதி, நெய்ப்பினையுடைய ஓதி, நெடிய கூந்தல்
1435 ஈர்ங் கழை பசுமையான மூங்கில் தண்டு
1436 ஈர்ங் கை ஈரமுள்ள கை, உண்டு பூசியகை
1437 ஈர்த்தல் எழுதுதல், இழுத்தல்
1438 ஈர்தல் இழுக்கப் படுதல், அறுத்தல், பிளத்தல்
1439 ஈர்ந் தண் ஆடையை ஈரத்தினால் தண்ணிதாகிய ஆடையை யுடையை
1440 ஈர்ந் திரி நெய் தோய்ந்த திரி
1441 ஈர்ப்பு இழுத்தல்
1442 ஈர்ம் பிணவு அன்புடைய பெட்டை
1443 ஈர் மட் செய்கை ஈரங் காயாத பசுமட் கலம்
1444 ஈர் மலர் மெல்லிய மலர்
1445 ஈர் வடி பிளந்த மாம்பிஞ்சு
1446 ஈரணி நீராட்டிற்கு உரிய அணி, புனலாடும் போது மகளிர் அணிதற்குரியவை, இரண்டணி, ஆடவர் கோலமும் மகளிர் கோலமும், பெரிய ஒப்பனை
1447 ஈரம் அருள், தயை
1448 ஈரமை சுற்று இரண்டாய் அமைந்த காற்சரி
1449 ஈருள் ஈரல்
1450 ஈவு உதவுதல்
1451 ஈழம் சிங்கள தேசம்
1452 ஈற்றுற்றென பிள்ளை பெறுதலைப் பொருந்தினாளாக
1453 ஈன் இவ் உலகம்
1454 ஈன்மர் பெறுவார்
1455 ஈன்றணிக் காரான் ஈன்றணிமையையுடைய பெண் எருமை
1456 ஈன்று ஈனாநின்று, உண்டாக்கி
1457 ஈன்று நாள் உலந்த ஈன்றணிமை கழிந்த
1458 ஈனல் எண்கு ஈன்ற கரடி
1459 ஈனில் பொறை உயிர்த்தற்குரிய இடம், பிரசவ அறை
1460 ஈனாத் தாயர் செவிலித் தாயர்
1461 ஈனாப் பாவை தான் பெறாத கோரையாலே செய்து வைத்துத் தன் மகவு என முறைமை பாராட்டும் பாவை
1462 ஈனுதல் முட்டையிடுதல், உண்டாக்குதல், தளிர்த்தல், பூத்தல்
மேல்