| 1463 |
உ |
சுட்டு |
| 1464 |
உக்க |
சிந்திக் கிடந்த |
| 1465 |
உக்கத்து மேலும் |
தலைக்கு மேலும் |
| 1466 |
உக்கம் |
இடை, தலை |
| 1467 |
உக்கரை |
அக்கரை, வீட்டுலகம் |
| 1468 |
உக்கன்ன |
உதிர்ந்தாற் போன்ற |
| 1469 |
உக்காஅங்கு |
சிந்தினாற் போல |
| 1470 |
உக்காண் |
அவ்விடத்தே பாராய் |
| 1471 |
உக்குவிடும் |
கரைந்துவிடும் |
| 1472 |
உகத்தல் |
உயர்தல் |
| 1473 |
உகல் |
உதிர்தல் |
| 1474 |
உகவை |
உகத்தல் |
| 1475 |
உகளல், உகளுதல் |
துள்ளல், தாவல், தாவுதல், ஓடித் திரிதல் |
| 1476 |
உகளுந்து |
உகளும், துள்ளித் திரியும் |
| 1477 |
உகாஅய் |
ஒரு வகை மரம் |
| 1478 |
உகாய் |
பாலை நிலத்தில் உள்ள ஒரு மரம் |
| 1479 |
உகிர் |
நகம் |
| 1480 |
உகிர் நிமிரல் மாந்தி |
உகிர் போன்ற சோற்றைத் தின்று |
| 1481 |
உகுத்தல் |
சிதறுதல், உதிர்த்தல், பாழ் படுத்துதல், சிந்துதல், தூவுதல் |
| 1482 |
உகுத்தீவாயோ |
பாழே போக்கக் கடவையோ |
| 1483 |
உகுதல் |
உதிர்தல், கரைந்து தேய்தல், சிந்துதல், அழிதல், உதிர்தல், கரைதல், கெடுதல், விழுதல், சொரிதல் |
| 1484 |
உகுவு |
உதிர்தல், சிந்துகை |
| 1485 |
உகைத்தல் |
எழுப்புதல் |
| 1486 |
உச்சி |
தலை |
| 1487 |
உச்சி மிதித்தல் |
தலையிலே மிதித்தல் |
| 1488 |
உசவுதல் |
உசாவுதல், வினாவுதல் |
| 1489 |
உசா |
சூழ்ச்சி, ஆராய்ச்சி |
| 1490 |
உசாஅம் |
உசாவும் |
| 1491 |
உசாதல் |
உசவுதல், வினாவுதல் |
| 1492 |
உசாதிர் |
உசாவாநின்றீர் |
| 1493 |
உசாவாய் |
சூழ்ச்சி சொல்லும் துணையாய் |
| 1494 |
உசாவுகோ |
உசாவுவேனோ |
| 1495 |
உஞற்றுதல் |
தூண்டுதல் |
| 1496 |
உட்கல், உட்குதல் |
அஞ்சுதல் |
| 1497 |
உட்கிற்று |
அஞ்சிற்று |
| 1498 |
உட்கு |
அச்சம் |
| 1499 |
உட் கைச் சிறு குடை |
உள்ளங்கையாகிய சிறிய பாத்திரம் |
| 1500 |
உட்படுதல் |
அகப்படுதல், கட்டி வைத்தல் |
| 1501 |
உடங்கியைதல் |
ஒப்பக் கூடுதல் |
| 1502 |
உடங்கு |
சேர |
| 1503 |
உடம்பட்டு நீப்பார் |
ஒரு காரியக் கூற்றால் உடன்பட்டு மனத்தால் உடன்படாதார் |
| 1504 |
உடம்படுதல் |
உடன்படுதல் |
| 1505 |
உடம்பிடி |
வேல் |
| 1506 |
உடம்பு அடுவி |
உடம்பாக அடுத்தவள் |
| 1507 |
உடல் |
உடம்பு |
| 1508 |
உடல்தல் |
கோபங் கொள்ளுதல், பகைத்தல், மாறுபடுதல் |
| 1509 |
உடலகம் |
உடலிடம், முற்றும் |
| 1510 |
உடலல், உடலுதல் |
மாறுபடல், கோபித்தல், சீறுதல், பகைத்தல், மாறுபடுதல் |
| 1511 |
உடலுநர் |
மாறுபடுவோர், பகைவர் |
| 1512 |
உடற்றல் |
எய்தல், சினத்தல் |
| 1513 |
உடற்றியோர் |
சினப்பித்தவர் |
| 1514 |
உடற்றுதல் |
சினமூட்டுதல் |
| 1515 |
உடற்றுதி |
உடற்றா நின்றாய், கோபிக் கின்றாய் |
| 1516 |
உடன் |
ஒருங்கு, சேர, முழுவதும் |
| 1517 |
உடன் ஆடு ஆயம் |
கூட விளையாடுகின்ற தோழியர் |
| 1518 |
உடன் வயிறு |
உடன் வயிற்றோர், சகோதரர் |
| 1519 |
உடன் வாழ் பகை |
ஒன்றாய் வாழ்கின்ற உட்பகை |
| 1520 |
உடன் வாளாது |
ஒருவர் கூறியது ஒருவர் கூறாதே |
| 1521 |
உடன்றக்கால் |
கோபிக்க, கோபித்த போது |
| 1522 |
உடன்றவர் |
பகைத்தவர் |
| 1523 |
உடன்று |
கோபித்து |
| 1524 |
உடனிலை |
உடன் இருந்த இருவரைப் பாடும் ஒரு புறத் துறை, கூடியிருக்கின்ற நிலை |
| 1525 |
உடீஇ |
உடுத்து, உடுக்கச் செய்து |
| 1526 |
உடு |
நாண்மீன், நாணைக் கொள்ளும் இடம், அம்பின் இறகு, நாணில் பொருந்தும் அம்பின் அடி |
| 1527 |
உடுக்கை |
உடை, ஒரு வாத்தியம் |
| 1528 |
உடுத்தல் |
சூழ்தல் |
| 1529 |
உடும்பு |
ஊர்வனவற்றில் ஒரு வகை |
| 1530 |
உடை |
ஒரு வகை மரம், ஆடை, உடுத்தல், உடைய |
| 1531 |
உடைஇ |
உடைந்து |
| 1532 |
உடைத்தல் |
அழித்தல், இடித்தல் |
| 1533 |
உடைத்து |
உடையச் செய்து, உடையது |
| 1534 |
உடைத்து எழு வெள்ளம் |
அணையை உடைத்துக் கொண்டு எழும் நீத்தம் |
| 1535 |
உடைத்தோ |
உடையதோ |
| 1536 |
உடைதல் |
மனங் குலைதல், தோற்று ஓடுதல், முறிதல், நெஞ்சு அழிதல் |
| 1537 |
உடைந்த பூ |
அலர்ந்த பூ |
| 1538 |
உடைந்தன்று |
உடைந்தது |
| 1539 |
உடைப் பொதி |
தன்னுடைய கட்டி வைத்த பொருள் |
| 1540 |
உடைபு |
அழிந்து |
| 1541 |
உடைமதி |
உடையை ஆகுதி |
| 1542 |
உடைமை |
செல்வம் |
| 1543 |
உடையதை |
மனதில் கருதிய காரியம் |
| 1544 |
உடையூஉ |
உடைந்து |
| 1545 |
உடையோர் |
செல்வர் |
| 1546 |
உண்கண் |
மை உண்ட கண், மை தீட்டிய கண் |
| 1547 |
உண்கு |
நுகர்வேன், உண்பேன் |
| 1548 |
உண்கும் |
உண்பேம் |
| 1549 |
உண்டாங்கு |
உண்டாற் போல |
| 1550 |
உண்டாதல் சாலா |
உண்டென்று கூறுதல் அமையாத |
| 1551 |
உண்டி |
உண்பாய் |
| 1552 |
உண்டிகை |
கூட்டம் |
| 1553 |
உண்டீத்தை |
உண்பாய் |
| 1554 |
உண்டு |
உள்ளது, பட்டு, நுகர்ந்து |
| 1555 |
உண்டேல் |
உண்டாகில் |
| 1556 |
உண்ணா |
உண்டு |
| 1557 |
உண்ணாப் பாவை |
எதுவும் உண்ணாத பதுமை, மண்ணாற் செய்த பாவை |
| 1558 |
உண்ணிய |
உண்டற்கு |
| 1559 |
உண்ணுதல் |
தின்னுதல், குடித்தல், நுகர்தல் |
| 1560 |
உண் துறை |
உண்ணும் நீர் எடுக்கும் துறை |
| 1561 |
உண்துறை அணங்கு |
நீர் உண்ணும் துறையிலுள்ள தெய்வம் |
| 1562 |
உண்ப |
நுகர்வன |
| 1563 |
உண்மார் |
உண்போர், உண்ண வேண்டி |
| 1564 |
உண்மை |
உளதாதல், உளதாம் தன்மை |
| 1565 |
உண்மை நலன் |
இயற்கை நலன் |
| 1566 |
உணக்குதல் |
உலர்த்துதல், புலர்த்துதல் |
| 1567 |
உணங்கல் |
வற்றல், காய்ந்த தசை |
| 1568 |
உணங்குதல் |
உலர்தல், மாய்தல் |
| 1569 |
உணர்கல்லாள் |
அறியாள் |
| 1570 |
உணர்த்தல் |
துயிலெழுப்பல், தீர்த்தல், ஊடலுணர்த்தல் |
| 1571 |
உணர்த்திய |
எழுப்ப, ஊடல் உணர்த்துவதற்கு |
| 1572 |
உணர்த்துதல் |
துயிலெழுப்பல், உணரு மாறு செய்தல் |
| 1573 |
உணர்தல் |
அறிதல், நினைதல், புலவி நீங்குதல் |
| 1574 |
உணர்ந்திசினோர் |
உணர்ந்தோர் |
| 1575 |
உணர்ந்தீயாய் |
அறியாய் |
| 1576 |
உணர்மின் |
உணர்வீராக |
| 1577 |
உணராம் |
உணரோ மாய் |
| 1578 |
உணராவூங்கு |
உணர்வதற்கு முன்னர் |
| 1579 |
உணரிய |
ஊடல் உணர்த்துவதற்கு |
| 1580 |
உணல் |
உண்ணுதல், குடித்தல் |
| 1581 |
உணவின் பிண்டம் |
உணவால் உளதாகிய உடம்பு |
| 1582 |
உணவு |
ஆகாரம் |
| 1583 |
உணா |
ஆகாரம் |
| 1584 |
உணாக்கால் |
உண்ணாதொழியின் |
| 1585 |
உணீஇ |
உண்டு |
| 1586 |
உணீஇய |
உண்ணு தற்கு, உண்ண வேண்டி |
| 1587 |
உணீஇயர் |
உண்ணவேண்டி |
| 1588 |
உணீ இயர் வேண்டும் |
உண்ணுதற்கு விரும்பாநிற்கும் |
| 1589 |
உத்தி |
தெய்வவுத்தி, சீதேவியின் உருவம் பொறித்த தலையணி, பாம்பின் படப்பொறி |
| 1590 |
உத்தி பொறித்தல் |
திருவைப் பொறித்து வைத்தல் |
| 1591 |
உத்துதல் |
கழித்தல் |
| 1592 |
உதவல் |
பயன்படல் |
| 1593 |
உதவிய |
பாதுகாத்த |
| 1594 |
உதள் |
ஆட்டுக் கிடாய் |
| 1595 |
உதியஞ் சேரல் |
பழைய சேரருள் ஒருவன் |
| 1596 |
உதிர்த்தல் |
வீழ்த்துதல் |
| 1597 |
உதிர்ந்து உகல் |
உதிர்ந்து சிந்துதல் |
| 1598 |
உதிர்பு உகல் |
கழன்று விழல் |
| 1599 |
உதிரல் |
உதிர்ந்த பூ |
| 1600 |
உது |
அது |
| 1601 |
உதுக் காண் |
அதனைக் காண், அவ் விடத்தே பாராய், உவ்விடத்தே பாராய் |
| 1602 |
உந்தி |
யாழகத்து ஓர் உறுப்பு, கொப் பூழ், தெறித்து, யாற்றிடைக் குறை, அருவி |
| 1603 |
உந்துதல் |
யாழ் நரம்பு தெறித்தல், யாழ் மீட்டுதல் |
| 1604 |
உந்தூழ் |
பெருமூங்கில் |
| 1605 |
உப்பால் |
உப்பக்கம் |
| 1606 |
உப்பு |
இன்பம், கடலில் விளையும் உப்பு |
| 1607 |
உப்பு ஒய் உமணர் |
உப்புச் சகடத்தைச் செலுத்தும் வாணிகர் |
| 1608 |
உப்பு ஒய் சகடம் |
உப்பு ஏற்றிச் செல்லும் வண்டி |
| 1609 |
உம் |
விரைவுப் பொருளைக் காட்டும் வினையெச்ச விகுதி, அசைநிலை |
| 1610 |
உம்பர் |
அப்பால், தேவர் உலகம் |
| 1611 |
உம்பல் |
வழித்தோன்றல் |
| 1612 |
உம்மை |
மறு பிறப்பு |
| 1613 |
உமக்கு |
நுமக்கு |
| 1614 |
உமட்டியர் |
உமண சாதிப் பெண்மக்கள் |
| 1615 |
உமண் சாத்து |
உப்பு வாணிகர் கூட்டம் |
| 1616 |
உமணன் |
உப்பு வாணிகன் |
| 1617 |
உமை |
உமா தேவி |
| 1618 |
உய்கம் |
உய்ந்து வாழ்வோம், தப்புவோம் |
| 1619 |
உய்த்தல் |
சேர்த்தல், செலுத்துதல், கொண்டு போதல் |
| 1620 |
உய்த்துக் கொடுப்பது |
கொண்டு சென்று கொடுப்பது |
| 1621 |
உய்த்துரைத்தல் |
வெகுட்சி பிறவாமல் செலுத்திக் கூறுதல் |
| 1622 |
உய்தல் |
தப்புதல், நீங்குதல், சீவித்தல், பிழைத்தல் |
| 1623 |
உய்தல்செல்லாது |
உய்யாது |
| 1624 |
உய்தி |
பரிகாரம், நீங்குதல் |
| 1625 |
உய்ம்மோ |
செல்வாயாக |
| 1626 |
உய்யா |
போக்க முடியாத |
| 1627 |
உய்யா அரு நோய் |
பிழையாமைக்குக் காரணமான அரிய காம நோய் |
| 1628 |
உய்யா இடும்பை |
பிழையாமைக்குக் காரணமான துன்பம் |
| 1629 |
உய்யாமை |
உயிரைத் தாங்கி இராமை |
| 1630 |
உய்விடம் |
பிழைக்கும் இடம் |
| 1631 |
உய்வு |
பிழைத்தல் |
| 1632 |
உயக்கம் |
வருத்தம், வாட்டம் |
| 1633 |
உயங்கல் |
வருந்தல் |
| 1634 |
உயங்குதல் |
வருந்துதல், ஓய்தல் |
| 1635 |
உயப் போகுவான் |
பிழைக்கப் போகின்றவன் |
| 1636 |
உயர் |
உயர்ச்சி |
| 1637 |
உயர் உலகு |
சுவர்க்கம் |
| 1638 |
உயர் சிமை |
உயர்ந்த உச்சி |
| 1639 |
உயர் சீர்த்தி |
பரந்த மிக்க புகழ் |
| 1640 |
உயர்தல் |
நீங்குதல், இல்லையாதல், உயரமாதல், போதல், நீக்கத்தின்கண் நிற்றல் |
| 1641 |
உயர்திணை |
மேற்குலம் |
| 1642 |
உயர்ந்த பொருள் |
மிக்க பொருள் |
| 1643 |
உயர்ந்தவன் விழவு |
காமன் விழா |
| 1644 |
உயர்ந்திசினோர் |
உயர்ந்தோர், மேன் மக்கள் |
| 1645 |
உயர்ந்துழி |
மேட்டு நிலம், குறிஞ்சி நிலம் |
| 1646 |
உயர்ந்தோர் |
தேவர் |
| 1647 |
உயர் நிலை |
மேலான பதவி, தெய்வத் தன்மை, உயர்கின்ற நிலைமை |
| 1648 |
உயர் நிலை உலகம் |
விண்ணுலகம், உயர்ந்தநிலைமையையுடைய சுவர்க்கம் |
| 1649 |
உயர் நிற்றல் |
உச்சமாதல் |
| 1650 |
உயர் நெடு மணல் |
உயர்ந்திருக்கின்ற நீண்ட மணற்குன்று |
| 1651 |
உயர்பு |
உயர்ந்த இடம், உயர்த்து |
| 1652 |
உயரிய |
உயர்த்த |
| 1653 |
உயல் |
பிழைக்கும்படிக்குச் செய்வது |
| 1654 |
உயல்தல், உயலுதல் |
அசைதல் |
| 1655 |
உயவல் |
வருத்தம் |
| 1656 |
உயவல் யானை |
வருத்தத்தை உடைய யானை |
| 1657 |
உயவற் பெண்டிர் |
கைம்மை நோன்பினால் வருந்தும் மகளிர் |
| 1658 |
உயவு |
வருத்தம், உயிர் பிழைக்கச் செய்யும் வழி, உயங்குதல், கவலை |
| 1659 |
உயவுத் துணை |
உசாத் துணை, உற்ற துணை, நெருங்கிய துணை |
| 1660 |
உயவுதல் |
வருந்துதல் |
| 1661 |
உயவுதோறும் |
நரலுந் தோறும், ஒலிக்குந்தோறும் |
| 1662 |
உயவு நோய் |
வருத்தத்தையுடைய காம நோய், வருந்தும் நோய் |
| 1663 |
உயவை |
காக்கணம் |
| 1664 |
உயா |
வருத்தம் |
| 1665 |
உயிர் |
ஓசை, உயிர்ப்பு, பிராணன் |
| 1666 |
உயிர்க்கும் |
நெட்டுயிர்ப்புக் கொள்ளும் |
| 1667 |
உயிர் செகுத்தல் |
உயிரைப் போக்குதல் |
| 1668 |
உயிர்த்தல் |
போக்குதல், உயிர்ப்பு, மூச்சு விடுதல், நெட்டுயிர்ப்புக் கொள்ளுதல், வெடித்தல் |
| 1669 |
உயிர்த் துப்பு |
உயிர்ப் பொருளாகிய உணவு |
| 1670 |
உயிர் திறம் பெயர்ப்பான் |
உயிரை உடம்பிடத்தே நின்றும் பேர்க்கும் கூற்றுவன் |
| 1671 |
உயிர்ப்ப |
இளைப்பாற |
| 1672 |
உயிர்ப்பின் |
உயிர்த்தலால் |
| 1673 |
உயிர்ப்பு |
இளைப்பாறுகை, வருத்தம் தீருதல் |
| 1674 |
உயிர் பெய்த பாவை |
உயிர்ப்புக் கொடுத்த பாவை |
| 1675 |
உயிர் பொதி அவிழ்க்கும் காலை |
உயிரினைப் பொதிந்து நின்ற உடலினின்றும் அதனைப்போக்குங் காலம் |
| 1676 |
உயிரொடு |
உயிரைப் பொருந்துந் தன்மையோடு |
| 1677 |
உரம் |
திடம், அறிவு, வலிமை |
| 1678 |
உரல் |
இடிக்கும் உரல் |
| 1679 |
உரல்முகம் காட்டிய |
உரலிற் பெய்து தீட்டிய |
| 1680 |
உரவன் |
அறிஞன் |
| 1681 |
உரவு |
உலாவுதல், வன்மை, வலிமை, மிகுகை, பரவுதல் |
| 1682 |
உரவுக் கடல் |
பரக்கின்ற கடல் |
| 1683 |
உரவுக் கணை |
வலிய கணை |
| 1684 |
உரவுக் கதிர் தெறும் |
வலியினை உடைய ஞாயிறு சுடும் |
| 1685 |
உரவுத் தகை |
வலியின் தகைமை |
| 1686 |
உரவுதல் |
உலாவுதல் |
| 1687 |
உரவு நீர் |
பரக்கும் கடல், வலியினையுடைய கடல் |
| 1688 |
உரவோன் |
வலியோன், அறிவுடையோன், பெரியோன் |
| 1689 |
உரற்று |
முழங்குதல், முழக்கம் |
| 1690 |
உரறல், உரறுதல் |
முழங்கல், இடித்தல் |
| 1691 |
உரன் |
அறிவு, பற்றுக்கோடு, வலிமை |
| 1692 |
உரனுடை உள்ளத்தை |
வலி உடைத்தாகிய மனத்தை உடையை |
| 1693 |
உராஅ |
வலியுற்று |
| 1694 |
உராஅய் |
உலாவி |
| 1695 |
உராய் |
பரந்து |
| 1696 |
உரால் |
ஓடுகை |
| 1697 |
உராவுதல் |
பரத்தல், செல்லுதல் |
| 1698 |
உரி |
தோல் |
| 1699 |
உரிஞ்சுதல் |
தேய்த்தல் |
| 1700 |
உரிஞுதல் |
உரிஞ்சுதல் |
| 1701 |
உரித்தன்ன |
உரித்தாற் போன்ற |
| 1702 |
உரிது |
உரித்து |
| 1703 |
உரிமை |
மனைவி |
| 1704 |
உரிமை செப்புதல் |
மணம் பேசுதல் |
| 1705 |
உரிமை மாக்கள் |
மடையர், சமையற்காரர் |
| 1706 |
உரிமை மாந்தர் |
கணவர் |
| 1707 |
உரிவை |
தோல் |
| 1708 |
உரீஇ |
தீற்றி, வழித்து, வாரி, உருவி |
| 1709 |
உரீஇய |
உருவிய, உரிஞ்சிய |
| 1710 |
உரு |
நிறம், அச்சம், அழகு, சாயல், வடிவம் |
| 1711 |
உருக்கிய நன் பொன் |
உருக்கி ஓட வைத்த நல்ல பொன் |
| 1712 |
உருக்கு |
நெய் |
| 1713 |
உரு கெழு தெய்வம் |
அச்சத்தை விளைவிக்கும் தெய்வம் அவையாவன; பேய், பூதம், நிரைய பாலர், பிணம் தின் பெண்டிர் முதலாயின |
| 1714 |
உருங்குதல் |
உண்ணுதல் |
| 1715 |
உருட்டுதல் |
செலுத்துதல் |
| 1716 |
உருத்தல் |
தோன்றுதல், பெருஞ் சினங்கொள்ளுதல், கோபித்தல், வெவ்விதாதல், அழலுதல், ஒத்தல் |
| 1717 |
உருத்து |
உருப்பெற்று, வெகுண்டு |
| 1718 |
உருத்து எழுதல் |
நெஞ்சு அழன்று எழுதல், வெவ்விதாய் எழுதல் |
| 1719 |
உருப்ப |
சூடு பிறக்க, வெய்யதாக |
| 1720 |
உருப்பு |
வெப்பம், சினத் தீ, கொடுமை, அச்சம் |
| 1721 |
உருபு |
நிறம் |
| 1722 |
உரும் |
இடி |
| 1723 |
உரும்பு |
கொடுமை, கொதிப்பு |
| 1724 |
உருமின் |
இடியோசை போல |
| 1725 |
உருமு |
இடி |
| 1726 |
உருமுப் படு கனல் |
இடியிற் பட்ட தீ, இடியிலிருந்து தோன்றும் தீ |
| 1727 |
உருவக் குத்துதல் |
உருவும்படி குத்துதல் |
| 1728 |
உருவம் |
நிறம், கவறு, அழகு, வடிவு |
| 1729 |
உருவு |
அழகு |
| 1730 |
உருள் கலன் |
உருண்ட சுட்டி |
| 1731 |
உருள் துடி |
கடிப்பு உருள்கின்ற இழுகுபறை |
| 1732 |
உருளி |
உருளை, சக்கரம் |
| 1733 |
உருளிழாய் |
தலையிற் கிடந்தசையும் தலைப்பாளையை உடையவளே |
| 1734 |
உரை |
புகழ், புனைந்துரை, உரைத்தல்,வார்த்தை, முழக்கம், சொல் |
| 1735 |
உரைஇ |
உலாவி, தேய்க்க, பரந்து, பரவி |
| 1736 |
உரை செல உயர்ந்து |
புகழ் உயர்ந்து நடக்கும்படியாக, புகழ் எங்கும் பரவ |
| 1737 |
உரைத்தல் |
தேய்த்தல், தடவல் |
| 1738 |
உரைத்தாங்கு |
உரைத்தாற் போல |
| 1739 |
உரைத்தீயின் |
உரைப்பையாயின் |
| 1740 |
உரைத்தீவார் |
கூறுவார் |
| 1741 |
உரைத்து |
உரைத்தேன் |
| 1742 |
உரைத்தைக்காண் |
கூறிக்காண், சொல்லுவாய் |
| 1743 |
உரைப்பனை |
உரைக்குமளவும் |
| 1744 |
உரையல் |
சொல்லுகை, கூறாதே |
| 1745 |
உரையாக்கால் |
உரையாத பொழுது |
| 1746 |
உரையாதி |
உரையாதேகொள் |
| 1747 |
உரையாமல் பெறுகற்பின் |
சொல்லாமையை யான் பெறின் |
| 1748 |
உல்கு செய்தல் |
கங்கங் கொள்ளுதல் |
| 1749 |
உலக்கை |
தானியம் முதலியன குற்றும் கருவி |
| 1750 |
உலகம் |
உயிர், உயிர்க் கிழவன், ஒழுக்கம், சீவான்மாக்கள், நன்மாக்கள், நிலம் |
| 1751 |
உலகு |
உலகத்தார், உலகம், உயர்ந்தோர் |
| 1752 |
உலந்தமை |
அழிந்தமை |
| 1753 |
உலந்தன்று |
அழிந்தது |
| 1754 |
உலந்துழி |
இறந்த இடத்து |
| 1755 |
உலப்பு |
உதவுதல் |
| 1756 |
உலம்பல் |
முழங்கல் |
| 1757 |
உலம்புதல் |
ஒலித்தல் |
| 1758 |
உலம் வருதல் |
நெஞ்சு உழலுதல் |
| 1759 |
உலம்வரும் |
நெஞ்சு சுழலும் |
| 1760 |
உலமந்தார் |
அலமந்தார் |
| 1761 |
உலமந்து |
உலாவி |
| 1762 |
உலமரல் |
உழத்தல், வருந்துதல், சுழற்சி |
| 1763 |
உலமருதல் |
உலம்வருதல் |
| 1764 |
உலமருவோர் |
சுழலுவோர் |
| 1765 |
உலர்தல் |
உலருதல், வாடுதல் |
| 1766 |
உலரி |
வாடி |
| 1767 |
உலவை |
மரக் கொம்பு, காய்ந்த கிளை, காற்று |
| 1768 |
உலறல் |
வற்றல் |
| 1769 |
உலறுதல் |
வற்றுதல், பொலிவழிதல், காய்தல் |
| 1770 |
உலறு தலைப் பருந்து |
காய்ந்த தலையினை உடைய பருந்து |
| 1771 |
உலை |
கொதிக்கின்ற நீர், சமையலுக் குரிய உலை, கொல்லனது உலை |
| 1772 |
உலைக்கல் |
அடைகல், கொல்லனது உலைக் களத்துள்ள பட்டடைக் கல் |
| 1773 |
உலைதல் |
கலைந்து போதல், வருந்துதல், துன்புறுதல், தோல்வியுறல், அசைதல் |
| 1774 |
உலையாமை |
நெஞ்சு வருந்தாமை |
| 1775 |
உலைவு |
தோல்வி, வறுமை |
| 1776 |
உவ் |
உவை |
| 1777 |
உவக் காண் |
உங்கே பார், உவ்விடத்தே பார் |
| 1778 |
உவக்கும் நாள் |
விரும்பின நாள் |
| 1779 |
உவணம் |
கருடன் |
| 1780 |
உவத்தல் |
காதலித்தல், மகிழ்தல், விரும்புதல் |
| 1781 |
உவந்து |
மகிழ்ந்து |
| 1782 |
உவர் |
இனிமை, வெறுப்பு |
| 1783 |
உவர் நிலம் |
களர் நிலம் |
| 1784 |
உவர்ப் படு |
உவரையுடைய கிணறு, உவரையுடைய சிறு குளம் |
| 1785 |
உவரி |
வெறுத்து |
| 1786 |
உவரா ஈகை |
வெறுப்பில்லாத கொடை |
| 1787 |
உவல் |
தழை, சருகு |
| 1788 |
உவலை |
தழை, சருகு, இழிவு |
| 1789 |
உவவு |
உவா, உவாநாள் |
| 1790 |
உவவு மதி |
பூரண சந்திரன் |
| 1791 |
உவள் |
முன் நிற்பவள் |
| 1792 |
உவற்றி |
ஊற்றி |
| 1793 |
உவற்றுதல் |
சுரக்கச் செய்தல் |
| 1794 |
உவறுதல் |
ஊறுதல் |
| 1795 |
உவன் |
முன் நிற்பவன் |
| 1796 |
உவா |
யானை, இளைய மகளிர் |
| 1797 |
உவித்தல் |
அவித்தல் |
| 1798 |
உவியல் |
அவியல், சமைத்த கறி |
| 1799 |
உழக்கல் |
கலக்குதல் |
| 1800 |
உழக்கி |
மிதித்து |
| 1801 |
உழக்கியாங்கு |
பொருதாற் போல |
| 1802 |
உழக்கு |
மூங்கிலாற் செய்த ஓர் அளவுகருவி |
| 1803 |
உழக்குதல் |
மிதித்தல், கொன்று திரிதல், விளையாடுதல், கலக்குதல், துகைத்தல், பொருதல் |
| 1804 |
உழக்கும் |
கலக்கும் |
| 1805 |
உழத்தல் |
ஏற்றல். வருத்துதல், நடத்தல், பொருதல், அழுந்துதல், தங்குதல் |
| 1806 |
உழந்த |
வருந்திய |
| 1807 |
உழப்ப |
அழுந்த |
| 1808 |
உழலை |
குறுக்கு மரம் |
| 1809 |
உழலை மரம் |
குறுக்கு மரங்கள் கோக்கப் பட்டு மாட்டுத் தொழுவங்களில் வாயிலாக அமைத்த மரம் |
| 1810 |
உழவர் |
உழவுத் தொழிலுடையோர் |
| 1811 |
உழவு |
சரீரத்தினால் உழைக்கை |
| 1812 |
உழறல் |
சுழலல் |
| 1813 |
உழாஅ நாஞ்சில் |
நாஞ்சில் மலை |
| 1814 |
உழி |
இடம் |
| 1815 |
உழிஞ்சில் |
வாகை |
| 1816 |
உழிஞை |
ஒருவகை மரம்; இதனை முடக்கொற்றான் எனக் குட நாட்டார் வழங்குவர் |
| 1817 |
உழிதரல் |
திரிதல் |
| 1818 |
உழிதருதல் |
சுற்றுதல் |
| 1819 |
உழத்ததர் |
உழுந்தின் சக்கை |
| 1820 |
உழுந்து |
தானிய வகை |
| 1821 |
உழு படை |
கலப்பை |
| 1822 |
உழுவை |
புலி |
| 1823 |
உழை |
பக்கம், இடம், கலைமான், ஆண் மான் |
| 1824 |
உழையோர் |
பக்கத்தே வருவோர் |
| 1825 |
உள் |
ஊக்கம், உள்வாய், நெஞ்சம், மனம் |
| 1826 |
உள் நோய் |
நெஞ்சின் நோய் |
| 1827 |
உள்படுதல் |
அறிதல் |
| 1828 |
உள்வழி |
இருக்கின்ற இடம் |
| 1829 |
உள்வாய் |
வாயின் உட்புறம், உள்ளிடம் |
| 1830 |
உள்ளகம் |
நெஞ்சு |
| 1831 |
உள்ளத்துக் கிளைகள் |
உளத்திற்குப் பொருந்தின சுற்றம் |
| 1832 |
உள்ளது உவர்த்தல் |
தலைவன் செய்கின்ற தலையளியை வெறுத்தல் |
| 1833 |
உள்ளது சிதைப்போர் |
உள்ள செல்வத்தைச் செலவழிப்போர் |
| 1834 |
உள்ளம் |
சூழ்ச்சி, நினைவு, மேற்கொள், ஊக்கம் |
| 1835 |
உள்ளல் |
நினைத்தல் |
| 1836 |
உள்ளலும் உள்ளுபவோ |
நினைத்தலையுஞ் செய்வாரோ |
| 1837 |
உள்ளா |
நினையாத |
| 1838 |
உள்ளாங்கு |
உள்ளபடி |
| 1839 |
உள்ளாற்றுக் கவலை |
ஆற்றிடைக் குறை |
| 1840 |
உள்ளாற்றுக் குறை |
ஆற்றிடைக் குறை |
| 1841 |
உள்ளான் |
இருந்தான் |
| 1842 |
உள்ளிடப் படுதல் |
கூட்டிக் கொள்ளப்படுதல் |
| 1843 |
உள்ளி விழவு |
பண்டைக் காலத்தில் கருவூரில் நிகழ்ந்த ஒரு திருவிழா |
| 1844 |
உள்ளுதல் |
நினைதல், நினைத்தல் |
| 1845 |
உள்ளுதொறு |
நினைக்கும் பொழுதெல்லாம் |
| 1846 |
உள்ளேன் |
நினையேன் |
| 1847 |
உளப்படல் |
அகப்படல் |
| 1848 |
உளம் |
உள்ளம் |
| 1849 |
உளம்பல் |
அலைத்து ஓட்டல் |
| 1850 |
உளம்புதல் |
அலைத்தல், சத்தமிடுதல் |
| 1851 |
உளம்புநர் |
அலைப்பார் |
| 1852 |
உளர்தல் |
கோதுதல், தலைமயிரை ஆற்றுதல், கூந்தலை வகிர்தல், அசைத்தல், தடவுதல், யாழ் முதலியன வாசித்தல், அசைதல், விரித்தல், உலர்த்தல் |
| 1853 |
உளர்தீ |
தடவாநின்றாய் |
| 1854 |
உளர்ப்பு |
அலைக்கை |
| 1855 |
உளர்வு |
யாழ் வாசிக்கை |
| 1856 |
உளரல் |
கோதுதல் |
| 1857 |
உளன் |
இருந்தான் |
| 1858 |
உளனா என் உயிரை உண்டு |
யான் சிறிது உயிருடனே இருக்கும்படி என் உயிரை வாங்கிக்கொண்டு |
| 1859 |
உளி |
ஓர் ஏழனுருபு, தச்சுக் கருவிகளுள் ஒன்று |
| 1860 |
உளியம் |
கரடி |
| 1861 |
உளிவாய்ப்பேடை |
உளி போன்ற வாயையுடைய பெண் பறவை |
| 1862 |
உளை |
குதிரையின் தலையில் அணியப்படும் சாமரை, குதிரை சிங்கம் முதலியவற்றின் பிடரி மயிர், குதிரையின் தலையாட்டம் என்னும் அணி, கழுத்தின் மயிர் |
| 1863 |
உளைக் குரல் |
துய்யையுடைய சிறு கதிர் |
| 1864 |
உளைதல் |
சிதறிப் போதல், உடம்படா மை, நெஞ்சு உளைதல் |
| 1865 |
உளைந்தீயாய் |
வருந்தாய் |
| 1866 |
உளைப் பூ |
விரிந்த பூ, உள்ளே துய் உள்ள பூ |
| 1867 |
உளைமான் |
சிங்கம் |
| 1868 |
உளைய |
வெறுப்ப |
| 1869 |
உளைவு |
வருத்தம் |
| 1870 |
உற்க |
வீழ |
| 1871 |
உற்கம் |
எரிகொள்ளி |
| 1872 |
உற்குதல் |
விண்ணினின்றும் எரி கொள்ளி விழுதல் |
| 1873 |
உற்றது |
உற்ற வருத்தம் |
| 1874 |
உற்றன்று |
உற்ற அன்று |
| 1875 |
உற்றனிர் |
உற்றீர், பெற்றீர் |
| 1876 |
உற்றனை |
உற்றாய் |
| 1877 |
உற்றார் |
சேர்ந்தவர் |
| 1878 |
உற்றீயாள் |
உறாள் |
| 1879 |
உற்று |
சேர்கையினாலே |
| 1880 |
உறந்தை |
உறையூர் |
| 1881 |
உறல் |
உறுதல், பொருந்தல், தங்கல், அணைதல், முயக்கம் |
| 1882 |
உறவி |
எறும்பு |
| 1883 |
உறழ் குறித்தல் |
வாது செய்யக் கருதுதல் |
| 1884 |
உறழ்கொளல் |
மாறுபடல் |
| 1885 |
உறழ்தல் |
வீணையில் ஒரு நரம்பை விட்டு ஒரு நரம்பைத் தெறித்தல், மாறுபடுதல் ஒத்தல் |
| 1886 |
உறழல் |
ஒத்தல் |
| 1887 |
உறாஅ அரைச |
நடுவு நிலைமை செய்தலன்றி ஒரு பாலுறாத கூற்றமே |
| 1888 |
உறாஅ நோக்கம் |
பொருந்தாப் பார்வை, கடைக் கண்ணால் நோக்கும் நோக்கம் |
| 1889 |
உறாஅலின் |
அழுந்துகையினால் |
| 1890 |
உறா நிற்கவும் |
மிகவும் |
| 1891 |
உறால் |
உறுதல் |
| 1892 |
உறாற்க |
உறாதொழியல் வேண்டும் |
| 1893 |
உறி |
பண்டம் வைக்கும் பொருட்டுத் தொங்கவிடும் உறி |
| 1894 |
உறிக் கா |
இரு பக்கத்திலும் உறி தொங்கிய காவடி |
| 1895 |
உறினும் |
போர் செய்தாலும் |
| 1896 |
உறீஇ |
அடைவித்து, உறுவித்து, அழுத்தி, உற்றதனால், உறுத்தி |
| 1897 |
உறீஇய |
பொருந்திய, உறுத்தின |
| 1898 |
உறீஇயாங்கு |
அடையச் செய்தாற் போல |
| 1899 |
உறீஇயாள் |
உறுத்தியவள் |
| 1900 |
உறீஇயான் |
உறுத்தினவன் |
| 1901 |
உறீஇயினான் |
உறுத்தினவன் |
| 1902 |
உறு |
மிக்க |
| 1903 |
உறுகண் |
வருத்தம், துன்பம் |
| 1904 |
உறு கால் |
மிக்க காற்று |
| 1905 |
உறுத்தருதல் |
நெருக்குதல் |
| 1906 |
உறுத்தல் |
செலுத்துதல், உண்பித்தல் |
| 1907 |
உறுதரல் |
தீண்டல் |
| 1908 |
உறுதல் |
அடைதல், அழுந்துதல், அளைதல், அன்புறுதல், உறுதியாகச் சொல்லுதல், கிடத்தல், செல்லுதல், சேர்தல், தீண்டுதல், மிகுதல், மோதுதல், வருத்த முறுதல் |
| 1909 |
உறுதி |
காரியம், அறுதி |
| 1910 |
உறு துணை |
மேவப்பட்ட துணை |
| 1911 |
உறு துயர் |
மிக்க துயர் |
| 1912 |
உறு துயர் அவலம் |
பொருந்திய துயரத்தையுடைய துன்பம் |
| 1913 |
உறுநன் |
சேர்ந்தவன் |
| 1914 |
உறுப்பு |
வடிவு, அவயவம் |
| 1915 |
உறுப்பு இல் பிண்டம் |
கருவில் வடிவுறு முன் சிதைந்த தசைப் பிண்டம் |
| 1916 |
உறுபு |
பெய்தல், உறுதல் |
| 1917 |
உறுவர் |
எதிர்ந்தவர், பெரியோர் |
| 1918 |
உறு வளி |
மிக்க காற்று |
| 1919 |
உறுவன் |
அடைந்தோன் |
| 1920 |
உறுவிய |
உறுவித்த |
| 1921 |
உறுவோய் |
வருத்தமுறுகின்றவளே |
| 1922 |
உறூஉம் |
உறுத்தும் |
| 1923 |
உறூஉம் துறைவன் |
முழங்குந் துறைவன் |
| 1924 |
உறை |
உறை மோர், காணிக்கைப் பொருள், தேன் துளி, மழை, நீர்த் துளி, ஆயுதங்களுக்குப் போடும் உறை, ஓர் அளவு, பிரை, இடை விடாமல் பெய்யுந் துளி, உறைதல், தங்குதல் |
| 1925 |
உறைக் கிணறு |
சுடு மண்ணுறையிட்ட கிணறு |
| 1926 |
உறைத்தருதல் |
உதிர்தலைச் செய்தல், துளித்தலைச் செய்தல் |
| 1927 |
உறைத்தல் |
துளித்தல், உதிர்தல், மிகுதல், ஒத்தல் |
| 1928 |
உறைதல் |
தங்குதல், ஒத்தல் |
| 1929 |
உறைநர் |
தங்குவோர் |
| 1930 |
உறைப்பவும் |
துளியாக விழவும் |
| 1931 |
உறைப்புழி |
மழை பெய்யும் இடத்து |
| 1932 |
உறைபவர் |
உறைகின்றவர் |
| 1933 |
உறைபோதல் |
உரையிட முடியா தொழிதல் |
| 1934 |
உறையுள் |
உறைதல், ஊர் |
| 1935 |
உறைவி |
உறைபவள் |
| 1936 |
உறை வீழ் ஆலி |
மழைத் துளியுடன் வீழ்கின்ற ஆலங்கட்டி |
| 1937 |
உறைவு |
உறைதல், வாழ்தல் |
| 1938 |
உன்னம் |
உன்னமரம், கருத்து |
| 1939 |
உன்னுதல் |
நினைத்தல் |