| 1940 |
ஊக்கம் |
மேற்கொண்ட எண்ணம் |
| 1941 |
ஊக்கலர் |
முயற்சியுடையவர் |
| 1942 |
ஊக்கி |
ஆட்டுவாயாக |
| 1943 |
ஊக்கு |
ஊக்கம் |
| 1944 |
ஊக்குதல் |
ஆட்டுதல், அசைத்தல், தப்புதல், மேற்கொள்ளுதல், கருதுதல், முயலுதல் |
| 1945 |
ஊக நுண் கோல் |
ஊகம் புல்லின் ஈர்க்கு |
| 1946 |
ஊகம் |
கருங் குரங்கு, ஒரு வகைப் புல் |
| 1947 |
ஊகு |
ஊகம்புல் |
| 1948 |
ஊங்கணோர் |
முன்னுள்ளோர் |
| 1949 |
ஊங்கு |
முன்பு |
| 1950 |
ஊங்குதல் |
ஆடுதல் |
| 1951 |
ஊசல் |
அசைவு, ஊஞ்சல் |
| 1952 |
ஊசற் சீர் |
ஊசல் வரி, மகளிர் ஊஞ்சலாடும் போதும் பாடும் பாடல் |
| 1953 |
ஊசி |
கூர்மை, தைக்கும் கருவி, வடக்கு |
| 1954 |
ஊசுதல் |
சீவுதல் |
| 1955 |
ஊட்டலென் |
ஊட்டேன் |
| 1956 |
ஊட்டி வா |
உண்ணப் பண்ணுவித்து வா |
| 1957 |
ஊட்டுதல் |
உண்ணும்படி உணவைப் பிறர் வாயிலே இடுதல், நிறைத்தல், நுகர்வித்தல் |
| 1958 |
ஊட்டுறு பச்சை |
நிறம் தோய்த்த தோல் |
| 1959 |
ஊடுதல் |
பிணங்குதல் |
| 1960 |
ஊண் |
உணவு |
| 1961 |
ஊணூர் |
தழும்பன் என்னும் உபகாரியின் ஊர் |
| 1962 |
ஊதல், ஊதுதல் |
உண்ணுதல் |
| 1963 |
ஊதியம் |
பயன், பொருள் |
| 1964 |
ஊதுதல் |
நுகர்தல், குழலை ஊதுதல், சத்தித்தல், வண்டு தேனை நுகருதல் |
| 1965 |
ஊதை |
வாடைக் காற்று |
| 1966 |
ஊம் |
ஊமன், ஊமை |
| 1967 |
ஊமைக் குருளை |
வாய் திறவாத குட்டி |
| 1968 |
ஊர் கொண்டன்று |
நிரம்புதலுற்றது |
| 1969 |
ஊர்தரல் |
பரத்தல் |
| 1970 |
ஊர்தருதல் |
வீசுதல் |
| 1971 |
ஊர்தல் |
கழலுதல், ஏறுதல், பரத்தல், செல்லுதல், செலுத்துதல், கழன்று விழுதல், கூடுதல், தழுவுதல், மேலிடுதல், மேலே தோன்றுதல், மேலே வருதல் |
| 1972 |
ஊர்தி |
வாகனம், நடை, கட்டில் |
| 1973 |
ஊர்ந்த |
புணர்ந்த |
| 1974 |
ஊர்ந்தாடல் |
ஏறியாடுதல் |
| 1975 |
ஊர்பவர் |
ஏறுபவர் |
| 1976 |
ஊர்பு |
ஏறி, பரந்து, மேலே தோன்றி |
| 1977 |
ஊர்பு இழிதல் |
ஏறி இறங்குதல் |
| 1978 |
ஊர்மதி |
ஊர்வாயாக |
| 1979 |
ஊர்முகம் |
படைகள் பொரும் இடம் |
| 1980 |
ஊர்வான் |
தள்ளுகின்றவன் |
| 1981 |
ஊர்வு இடை |
பரந்து திரிகின்ற இடம் |
| 1982 |
ஊர |
ஊரனே, பரக்கும்படியாக, பரக்கையினால் |
| 1983 |
ஊரல் |
ஏறாதே |
| 1984 |
ஊரவிர் |
ஊரிலுள்ளீர் |
| 1985 |
ஊரன் |
மருத நிலத் தலைவன் |
| 1986 |
ஊராக் குதிரை |
குதிரை மலை |
| 1987 |
ஊராங்கண் |
ஊரிடத்து |
| 1988 |
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து |
ஊராளுந் தன்மைக்குப் பொருந்தினதொரு கொடுமையை உடையது |
| 1989 |
ஊரின் |
ஏறின் |
| 1990 |
ஊரீர் |
ஊரிலுள்ளீர் |
| 1991 |
ஊழ் |
முறைமை, தடவை, முதிர்பு, மலர்ச்சி, அலர்ச்சி, அலர்தல், முறை |
| 1992 |
ஊழ் கழி பல் மலர் |
மலர்ந்து காம்பி னின்றும் நீங்கின பல பூக்கள் |
| 1993 |
ஊழ் கோடு |
செவ்வியழிந்த கொம்பு |
| 1994 |
ஊழ்த்தல் |
முதிர்தல், பதனழிதல், மலர்தல், உதிர்த்தல், சொரிதல் |
| 1995 |
ஊழ்த்து |
செவ்வி அழிந்து |
| 1996 |
ஊழ் மலர் |
முற்றிய மலர் |
| 1997 |
ஊழி |
வாழ்நாள், விதி, ஊழிக் காலம், முறைமை |
| 1998 |
ஊழுற்று |
முற்றுதலுற்று |
| 1999 |
ஊழுறு கோடல் |
முறைமையுற்ற கோடல் |
| 2000 |
ஊழுறு பூ |
மலர்ந்து கழியும் பழம் பூ |
| 2001 |
ஊற்றம் |
வலி |
| 2002 |
ஊற்றாக |
உறுதியாக |
| 2003 |
ஊற்று |
பற்றுக் கோடு |
| 2004 |
ஊற்றுக் களம் |
பலரும் வந்து சேர்தலையுடைய இடம் |
| 2005 |
ஊறு |
இடையூறு உறுதல், உறுகை காயம், வருத்தம் |
| 2006 |
ஊறுக |
மிகுக |
| 2007 |
ஊறு முலை |
பால் ஊறுகின்ற முலை |
| 2008 |
ஊன் |
இறைச்சி, உடம்பு |
| 2009 |
ஊன் தடி |
தசைத் தடியாகிய மணை |
| 2010 |
ஊன் புழுக்கு |
ஊனுடன் கூடிய சோறு |
| 2011 |
ஊன் வல்சி |
மாமிசம் கலந்த சோறு |
| 2012 |
ஊன்றல் |
தாங்கல் |
| 2013 |
ஊன்றுதல் |
சென்று தங்குதல், நடுதல், அமுக்குதல் |
| 2014 |
ஊனம் |
இறைச்சி கொத்தும் பட்டடை மரம் |