2650 வியங்கோள் விகுதி
2651 கங்கன் ஒரு தலைவன்
2652 கங்குல் இரவு
2653 கங்குலான் இரவிலே
2654 கங்கை கங்கை ஆறு
2655 கச்சம் கச்சு
2656 கச்சு முதுகில் இட்ட கலனை நழுவாத படி குதிரையின் வாலுடன் மாட்டிக்கட்டும் வார், மகளிரின் ஆடை வகை, வீரர்கள் அணியும் அரைப் பட்டிகை
2657 கச்சை இடையில் கட்டும் துணி, கச்சைக் கட்டின சேலை
2658 கசடு வடு, அழுக்கு
2659 கசிதல் இரங்குதல்
2660 கசிவு வியர்வை, இரக்கம்
2661 கஞ்சகம் கறிவேம்பு
2662 கஞல நெருங்க
2663 கஞலல் நெருங்கல், மிகுதல்
2664 கஞலிய நெருங்கிய
2665 கஞலுதல் நெருங்குதல்
2666 கஞன்ற நெருங்கின
2667 கட்கண் அங்கங்கே
2668 கட்கு இன் புது மலர் கண்ணுக்கு இனிய புது மலர்
2669 கட்குத்திக் கள்வன் விழித்திருக்கும் போதே ஏமாற்றுபவன்
2670 கட்கும் களைந்தெறியும், களையும்
2671 கட்சி காடு, கூடு, புகலிடம், சேக்கை
2672 கட்டழித்தல் முற்ற ஒழித்தல்
2673 கட்டளை பொன் உரைக்கும் கல், தரம்
2674 கட்டளை வலித்தல் அவரவர் தரத்தை நிச்சயித்தல்
2675 கட்டி பொன், கங்கநாட்டுத் தலைவன், வெல்லக் கட்டி
2676 கட்டிப் புழுக்கு வெல்லத்துடன் கூட்டிய அவரை விதை முதலியவற்றைப் புழுக்கிய உணவு
2677 கட்டில் சிங்காதனம், அடைவு, படைக்கலக் கட்டில், முரசு கட்டில்
2678 கட்டிலெய்துதல் சிங்காதனம் அடைதல்
2679 கட்டு கழங்குக் குறி, செறிவு
2680 கட்டுரை புனைந்துரை
2681 கட்டு வடம் காலணி வகை
2682 கட்டுர் பாசறை, போர்க்களம்
2683 கட் தேறல் கள்ளாகிய தெளிவு
2684 கட் பனி கண்களில் உண்டாகும் துளி
2685 கட்பு களை பறிக்கை
2686 கடக்க வெல்வானாக
2687 கடகம் வளை
2688 கடத்த காட்டிடத்தன
2689 கடத்தல் அளத்தல், நேரே பொருதல், வெல்லுதல், அழித்தல்
2690 கடத்திர் போவீர்
2691 கடந்தடுதல் எதிர் நின்று அடுதல், மாயஞ் செய்து கொல்லாது வென்று கொல்லுதல்
2692 கடப்பாட்டாளன் ஒப்புரவாளன்
2693 கடப்பாடு ஒப்புரவு
2694 கடப்பு மிகுதியானது, மிக்க கொடுமை, வெற்றி
2695 கடம் கடமை, காடு, பாலைநிலம்
2696 கடம்படுதல் நேர்ந்து கொள்ளுதல்
2697 கடம்பன் ஒரு பழைய குடி
2698 கடம்பு செங்கடம்பு, ஒரு மரம்
2699 கடம் பூணல் கடப்பாடுகளை மேற் கொள்ளுதல்
2700 கடம் பூணுதல் கடன்களை (பிரார்த்தனைகளை) மேற் கொள்ளுதல், கடனாக ஏறட்டுக் கொள்ளுதல்
2701 கடமை ஒரு விலங்கு
2702 கடல் ஆழ் கலம் கடலில் ஆழ்கின்ற கப்பல்
2703 கடல் அழுவம் கடற் பரப்பு
2704 கடல்மரம் மரக்கலம், கப்பல்
2705 கடலமிழ்து உப்பு
2706 கடவ செய்தற்குரியன
2707 கடவது செய்யக் கடவது
2708 கடவர் கடன்காரர், படை வீரர்
2709 கடவன் கடமைப்பட்டவன், கடன் கொடுத்தவன்
2710 கடவுட் கடி நகர் தெய்வங்களை யுடையனவாகிய சிறப்புடைய கோயில்கள்
2711 கடவுட் கற்பு அறக் கற்பு
2712 கடவுட் பள்ளி பௌத்த சைத்தியம்
2713 கடவுண்மை தெய்வத் தன்மை
2714 கடவுதல் கேட்டல், செலுத்துதல்
2715 கடவுநர் வினாவுவார்
2716 கடவுபு வினாவி, செலுத்தாநின்று, செலுத்தி
2717 கடவுமதி செலுத்துவாயாக
2718 கடவுள் முனிவன்
2719 கடவுள் ஆக்கிய பாவை தெய்வத் தச்சன் இயற்றிய பாவை
2720 கடற் கோடு கடற் சங்கு
2721 கடறு காடு, மலைச் சாரல், சுரம்
2722 கடன் கடமை, வைதிகக் கிரியை, காடு, முறை, முறைமை
2723 கடன் இறுத்தல் கடமை செய்தல்
2724 கடன் தீர்த்தல் தம் கடமையைச் செய்து தீர்த்தல்
2725 கடன் பூண்ட கடனாக மேற்கொண்ட
2726 கடாஅத்த மதத்தையுடைய
2727 கடாஅம் செலுத்தும், மதம்
2728 கடாஅயார் கூறினவர்கள்
2729 கடாஅ யானை மத யானை
2730 கடா அழித்தல் கடா விடல், பிணையடித்தல்
2731 கடாம் யானையின் மதநீர்
2732 கடாம் படும் மதம் படும்
2733 கடாவு செலுத்துகை
2734 கடி வாசனை, காவல், விளக்கம், விரைவு, பூசை, சிறப்பு, அச்சம், குறுந்தடி, புதுமை, மணம், மிகுதி, வரைவு, பேய்
2735 கடி அரணம் காவலையுடைய மதில்கள்
2736 கடி இடி கடிய இடி
2737 கடிக் காப்பு மிக்க காவல்
2738 கடிகம் வெருட்டுவேம்
2739 கடி கயம் மிகுதியையுடைய குளம்
2740 கடிகல்லாய் கடியமாட்டாய், போக்க மாட்டாய்
2741 கடி கா மிகுதியையுடைய பொழில், காவலையுடைய இளமரக் கா
2742 கடிகொள்ளுதல் காவல் கொள்ளுதல்
2743 கடிகை துண்டு, காம்பு, கட்டுவடம், காப்பு
2744 கடி சுனை மணத்தையுடைய சுனை
2745 கடித்தல் வடுப்படுத்துதல்
2746 கடிதல் விலக்குதல், தடுத்தல், ஓட்டுதல்
2747 கடிது கொடிது, சீக்கிரம்
2748 கடிதும் போக்கிவிடுவோம்
2749 கடி துறை காவற் பொய்கை
2750 கடிந்தது தவிர்ந்தது
2751 கடிந்தீவார் வெறுப்பவர்
2752 கடி நகர் மணவீடு
2753 கடிப்பகை வெண் கடுகு
2754 கடிப்படுத்துதல் காவலுட்படுத்தல்
2755 கடிப்பு முரசடிக்கும் குறுந்தடி
2756 கடிமரம் அரசர்க்கு உரியதாய்ப் பகைவர் அணுகாத வண்ணம் அவரால் வளர்த்துக் காக்கப்படும் காவல் மரம்
2757 கடி மலர் மணத்தையுடைய மலர்
2758 கடி மனை வரைவினையுடைய இல்லறம்
2759 கடி மிளை காவல் காடு
2760 கடி முதல் காவலையுடைய அடிமரம்
2761 கடி முனை அச்சத்தையுடைய போர்க்களம்
2762 கடிய கடியவாயிருக்கும்
2763 கடியர் கடியராயிருப்பவர்
2764 கடியுடை மார்பு புதுமையையுடைய மார்பு
2765 கடியுமுண்டன கொய்யப்பட்டன
2766 கடி வாலுவன் பேய் மடையன்
2767 கடீஇயர் கடியும் பொருட்டு
2768 கடு கடுக்காய், கடுமரம், நஞ்சு
2769 கடுகுதல் விரைதல் வெம்மையுறுதல்
2770 கடுகுபு கடுகி
2771 கருங்கட் கறவை விரைந்து கன்றைக் காணும் பசு
2772 கடுங்கட் காளை அஞ்சாமை பொருந்திய தலைவன்
2773 கடுங்கண் தறுகண்மை, வன்கண்மை, அஞ்சாமை
2774 கடுங்கதிர் சூரியன்
2775 கடுங் காப்பு கடிய காவல்
2776 கடுங்குரையள் விரைவுடையள்
2777 கடுங்குரையேம் கடுமையையுடையேம்
2778 கடுங்கூளி கடிதாகிய கூளி
2779 கடுஞ்சூல் முதற் கருப்பம், கன்னிச் சூல்
2780 கடுஞ்சூற் சிறுவன் முதற் புதல்வன்
2781 கடுத்த சொல் ஐயுற்றுக் கூறிய சொல்
2782 கடுத்தல் மிகுதல், வெம்மையாதல், விரைந்து ஓடுதல், சந்தேகித்தல், ஒத்தல்
2783 கடுத்தும் ஐயுற்றும்
2784 கடுந் திங்கள் கடுமையாகிய மாதம்
2785 கடுந் தேர் விரைந்த செலவினை யுடைய தேர்
2786 கடுந்தேறு குளவி வகை
2787 கடு நவை கடிய குற்றம்
2788 கடு நவைப் படீஇயர் மிக்க துன்பத்தை அடைக
2789 கடு நொடி கடிய ஒலி
2790 கடுப்பு கடுக்குகை, வெகுளி
2791 கடுப்புடைப் பறவைச் சாதி குளவி
2792 கடும் பகட்டு யானை மிக்க செலவினையுடைய ஆண் யானை
2793 கடும் பகல் விளக்கத்தையுடைய பகல், உச்சியம் பொழுது
2794 கடும் பகை உழத்தல் கடிய பகையினால் வருந்துதல்
2795 கடும் பசி மிக்க பசி
2796 கடும் பனி மிக்க பனி
2797 கடும் பாட்டு ஆங்கண் ஒலி மிக்க அவ்விடத்திலே
2798 கடும்பு சுற்றம்
2799 கடும் புனல் வேகமாயோடும் நீர்
2800 கடுமா சிங்கம் முதலிய கொடிய விலங்குகள்
2801 கடுமான் வேகம் மிக்க குதிரை
2802 கடு மீன் சுறா முதலிய கொடிய மீன்கள்
2803 கடு முடை மிக்க புலால் நாற்றம்
2804 கடுமை மிகுதி, விரைவு, வெப்பம்
2805 கடுவரல் அருவி விரைந்து வருகின்ற அருவி
2806 கடு வளி பெருங்காற்று
2807 கடுவன் ஆண் குரங்கு
2808 கடு விசை மிக்க வேகம்
2809 கடை எல்லை, வாயில், காம்பு, இறந்துபடும் காலம், இறந்து பாடு, உயிர் போகும் பருவம்
2810 கடைஇ செலுத்தி, கடிந்து
2811 கடைஇய செலுத்தின, வீழ்வித்த
2812 கடைக் கூட்டல் முடிவு போக்கல், இறந்து பாட்டைக் கூட்டுதல், இறந்து பாட்டைச் சேர்த்துதல்
2813 கடைக்கூட்டுதல் செய்து முடித்தல், இறுதியடைவித்தல், முடிவு போக்குதல், துணிதல்
2814 கடைக் கொள்ளி முனையில் எரியும் கொள்ளிக் கட்டை
2815 கடைகொளல் முடிவடைதல்
2816 கடைசியர் உழத்தியர்
2817 கடைதல் மிகுதல்
2818 கடைநன் கடைசல் வேலை செய்வோன்
2819 கடைநாள் மரணநாள்
2820 கடை நில்லாதி வாயிலில் நில்லாதே கொள்
2821 கடைநிலை ஒரு புறத் துறை, வாயிலின் கண் நிற்றல்
2822 கடைமுகம் வாயில்
2823 கடையின் செலுத்தின்
2824 கடையூஉ செலுத்தி
2825 கண் உடம்பு, இடம், ஓர், அசை, உபசர்க்கம், மூங்கிற் கணு, கணு, முழவின் கண், வடிவு, அருள், ஞானக்கண், நிறம், விழி
2826 கண் அகல் இடம் அகன்ற
2827 கண் அகன் தூ மணி இடம் அகன்ற தூய மணி
2828 கண் அடைத்தல் தூங்குதல்
2829 கண் அறுத்து இயற்றிய தூம்பு மூங்கிலின் கணுக்களை அறுத்து இயற்றப்பெற்ற பெரு வங்கியம்
2830 கண் கலிழ் உகு பனி கண் கலங்கிய தால் வீழ்கின்ற நீர்த் துளி
2831 கண் கவர்பு கண்கள் விரும்பி
2832 கண் கவர் புள்ளினம் நோக்கினார் கண்ணை வாங்கிக் கொள்ளும் அழகையுடைய பறவைத் திரள்
2833 கண்களோ கண்கள் என்று கூறப் படுமோ
2834 கண்காணாதற்றாக கண் காணாத தன்மைத்தாக
2835 கண்கூடுதல் நெருங்குதல், தலைக் கூடுதல்
2836 கண் சாய்தல் அன்பு குறைதல், அன்பு தேய்தல், கண்கள் பாரா திருத்தல்
2837 கண்ட மனத்தான் ஆராய்ந்து அறுதியிடப்பட்ட
2838 கண்டம் துண்டு, பல வண்ணத் திரை
2839 கண்டல் தாழை
2840 கண்டவிரெல்லாம் என்னைக் கண்ட நீங்களெல்லாம்
2841 கண்டன்று கண்டது
2842 கண்டனெம் பார்த்தேம்
2843 கண்டாங்கே எதிர்ப் பட்ட அப்பொழுதே, கண்ட அவ்விடத்தே
2844 கண்டாய் கண்டு கூடினாய், காண்
2845 கண்டிகும் கண்டேம்
2846 கண்டிகை தோலிலே மூன்று நிரை யாகப் பல நிறத்து மணியை வைத்துத் தைத்துக் கழுத்திற் கட்டும் குதிரை யணி
2847 கண்டிசின் காண்பாயாக
2848 கண்டீ காண்பாய்
2849 கண்டீயாய் காணாய்
2850 கண்டீரக் கோப் பெரு நள்ளி ஓர் உபகாரி
2851 கண்டீரக்கோன் ஒரு தலைவன்
2852 கண்டு கூறப்பட்டு, மனத்தாலே கண்டு
2853 கண்டை கண்டைப் பாய், காண்பாயாக, நெஞ்சால் ஆராய்ந்து பாராய், பாராய், மனத்தாலே கண்டாய், மனத்தான் ஆராய்ந்து பார்
2854 கண்டைகா காணாய்
2855 கண்டைப்பாய் பார், காண்பாய்
2856 கண்டோர் தண்டா நலன் பார்ப் போராலே கெடாத நலன், கண்ணெச்சில் படாமை
2857 கண்ணகி பெகன் மனைவி
2858 கண்ணஞ்சாமை தறுகண்மை
2859 கண்ணஞ்சுதல் பயப்படுதல், கண்ணோட்டத்தால் அஞ்சுதல்
2860 கண்ணடி கண்ணாடி
2861 கண்ணர் கண்ணையுடையார்
2862 கண்ணவர் அமைச்சர்
2863 கண்ணழிவு தடை
2864 கண்ணாள் கண்ணையுடையவள்
2865 கண்ணாரக் காணல் கண் நிறையக் காணுதல்
2866 கண்ணி தலைமேற் சூடப்பட்ட மாலை, பூமாலை, போர்ப் பூ
2867 கண்ணி கட்டல் அரும்பு தோன்றுதல்
2868 கண்ணி கண்ணுதல் சூடிய போர்க் கண்ணிக்கு ஏற்ப வினை செய்யக் கருதுதல்
2869 கண்ணிய ஆண்மை நினைத்த மேற் கோள்
2870 கண்ணியது கருதியது
2871 கண்ணிலி கண்ணோட்டமில்லாதவன்
2872 கண்ணின் உவத்தல் கண்ணின் முன்னர் உவப்பை வெளிப்படுத்தல்
2873 கண்ணின் நீர் அறல் வார கண்ணினுடைய நீர் காமத் தீயால் சுவறி அறுதலையுடைத்தாய் ஒழுக
2874 கண்ணினால் கண்ணால்
2875 கண்ணுடைக் கோலள் கண்களுடையவாகிய கோலையுடையவள்
2876 கண்ணுதல் கருதுதல்
2877 கண்ணும் நீராக நடுங்கினன் கண்ணும் உருக நின்று நடுங்கினான்
2878 கண்ணுள் அரும்புத்தொழில், தொழில்
2879 கண்ணுள் வினைஞர் சித்திரகாரிகள்
2880 கண்ணுளன் கண்ணுளாளன், கூத்தன்
2881 கண்ணுறுதல் இடித்தல், எதிர்ப்படுதல்
2882 கண்ணுறை மேலீடு, மேலே தூவுவது, கறி, மசாலை, கண்ணாற்கண்டஞ்சும் அச்சம்
2883 கண்ணென விரைய
2884 கண்ணை கண்ணை உடையை
2885 கண்ணோடல் இரங்குதல்
2886 கண்ணோடாது நமரென்று கண்ணோட்டம் செய்யாமல்
2887 கண்ணோடுதல் கண்ணோட்டஞ் செய்தல், இரங்குதல்
2888 கண் துயிலுதல் பார்வை மங்குதல்
2889 கண் பசத்தல் கண்ணின் நிறம் மாறுதல்
2890 கண்படாதிருத்தல் கண் துயிலாதிருத்தல்
2891 கண்படீஇயர் கண்படுகின்றனர், உறங்குகின்றனர்
2892 கண் படுத்தல் துயிலுதல்
2893 கண் படுதல் தங்கியிருத்தல்
2894 கண் படை நித்திரை
2895 கண் பயங்கெட பல்லுயிரும் தம் கண்களால் கொள்ளும் பயன் கெடும்படி
2896 கண் பனி கண்ணீர்த் துளி
2897 கண் பாடு இல கண் இமைத்தலை இலவாயிருந்தன, துயிலாமல் இருந்தன
2898 கண் பாயல் கண்ணுறக்கம்
2899 கண்பு ஒரு வகைக் கோரை, சம்பங் கோரை
2900 கண் புலம்பு கொண்டு இனையும் கண் தனிமை கொண்டு வருந்தும்
2901 கண் பூத்தல் நெடு நேரப் பார்வையால் கண்ணொளி குன்றுதல்
2902 கண் பெறின் அல்லால் கண்ணினில் அருள் நோக்கினைப் பெற்றால் அன்றி
2903 கண் பெறுதல் அருள் நோக்கிற்கு இலக்காதல்
2904 கண் பொடிவது கண் தீய்ந்து போவது
2905 கண் பொருதல் கண்ணொளியோடு மாறுபடுதல், ஒருவர் கண் மற்றொருவர் கண்ணொடு மாறுபடுதல்
2906 கண் மறைத்தல் இடத்தை மறைத்தல்
2907 கண் மாறின்று இடம் பெயர்ந்தது
2908 கண் மாறுதல் தோன்றி உடனே மறைதல், நிலை கெடுதல், அருள் மாறுதல், இடம் மாறுதல்
2909 கண் வலை கண்ணாகிய வலை
2910 கண் வாங்குதல் கண்ணைக் கவர்தல்
2911 கண் விடுத்தல் விழித்துப் பார்த்தல்
2912 கண்விடு தூம்பு பெருவங்கியம்
2913 கண் விழித்தல் மலர்தல்
2914 கணக் காலை கூட்டமான கலைமான்
2915 கணக்கு வரவு செலவுக் கணக்குக் குறிப்பு
2916 கண நிரை மிக்க கூட்டம்
2917 கணம் திரட்சி, கூட்டம், தொகுதி
2918 கணம் மலி சுற்றம் திரட்சி மிக்க சுற்றம்
2919 கண மணி திரட்சியுடைய மணி
2920 கணவன் தலைவன்
2921 கணவிரம், கணவீரம் செவ்வலரி
2922 கணி சோதிடம்
2923 கணிகாரம் கோங்கு
2924 கணிச்சி மழு, குந்தாலிப்படை
2925 கணிச்சியோன் மழுவேந்தியாகிய சிவன், சிவபெருமான்
2926 கணை திரட்சி, அம்பு
2927 கணைக் கால் திரண்ட நாளம்
2928 கணைக் கால மலர் திரண்ட தண்டுகளையுடையவாகிய தாமரை மலர்
2929 கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆர்இடை பெருக்குங் கல்லின் நெருக்கத்தால் எய்த அம்பு ஓடாத அரிய வழி
2930 கணைத் தொடை அம்பு தொடுத்தல்
2931 கணையம் கணையமரம்
2932 கதநாய் கோபத்தையுடைய நாய்
2933 கதம் கோபம், விரைவு
2934 கதவ கோபத்தினையுடையன
2935 கதவம் கதவு
2936 கதவு கபாடம், கோபம், மறை
2937 கதழ்தல் விரைதல், ஓடுதல்
2938 கதழ் பரி விரைவையுடைய குதிரை
2939 கதழ் பெயல் விரைவையுடைய மழை, விரைந்து வருகின்ற மழை
2940 கதழ் விடை விரைந்த செலவினையுடைய ஏறு
2941 கதழ்வு விரைவு
2942 கதழ்வுறுதல் அச்சத்தாற் கலங்கிக் கூச்சலிடுதல்
2943 கதழ்வை விரைந்து செல்குவை
2944 கதன் கோபம்
2945 கதி இயல்பு, நடை
2946 கதித்தல் கோபித்தல், விளையாடுதல்
2947 கதியாதி கோபியாதே
2948 கதிர் தானியக் கதிர், கிரணம், சுடர், சூரியன், ஒளி
2949 கதிர்த்த சென்னி பெரிய தலை, ஒளி விடும் தலை
2950 கதிர் தெறு வைப்பு சூரியன் சுடுகின்ற இடம்
2951 கதிர் முத்து ஆணி முத்து
2952 கதிர் விடு முக் காழ் மின்னும் ஒளி விடுகின்ற மூன்று வடம்
2953 கது வடு
2954 கதுப்பு கன்னம், தலைமயிர், கூந்தல்
2955 கதுமென கடுக, கடுகி, விரைய
2956 கதுமெனல் விரைவுக் குறிப்பு
2957 கதுவல் கௌவிக் கடித்தல்
2958 கதுவாய் வடு
2959 கதுவாய்க் குரம்பை சிதைவுற்ற குடில்
2960 கதுவுதல் கவர்தல்
2961 கதூஉம் கவரும்
2962 கந்தம் தூண்
2963 கந்தன் ஒரு தலைவன்
2964 கந்தாரம் மது
2965 கந்து ஆ தீண்டு குற்றி, தெய்வம் உறையும் தறி, பற்றுக்கோடு
2966 கபில நெடு நகர் ஒரு நகர்
2967 கபிலர் உருத்திரர்
2968 கபிலன் குறிஞ்சிப் பாட்டும், தொகை நூல்களில் பல பாடல்களும் பாடியவர்
2969 கபிலை குராற் பசு
2970 கம் நறுமணக் குறிப்பு, விரைவுக் குறிப்பு
2971 கம்பம் தூண், நடுக்கம்
2972 கம்பல் ஆடை
2973 கம்பலை ஓசை, ஒலி, ஆரவாரம்
2974 கம்புள் நீர்வாழ் பறவையுள் ஒரு சாதி, சம்பங் கோழி
2975 கம்மியன் கருமகாரன், நெய்பவன், பொற்கொல்லன்
2976 கம்மென விரைய
2977 கம்மெனல் ஓசையடங்கற் குறிப்பு, மணங் கமழ்தற் குறிப்பு, விரைவுக் குறிப்பு
2978 கம நிறைவு
2979 கமஞ் சூல் நிறைந்த கருப்பம், மேகம்
2980 கமஞ் சூல் மட நாகு மிக்க கருப்பத்தை உடைய மடப்பம் மிக்க பெண்
2981 கமண்டலம் கரகம்
2982 கமலம் ஒரு பேரெண்
2983 கமழ் குரல் கமழ்கின்ற கொத்தாகிய மயிர்
2984 கமழ்தல் தோன்றுதல், பரத்தல், மணத்தல்
2985 கமழ் நறும் பூங்கோதை மிகவும் நாறுகின்ற பூமாலை
2986 கமழ்பு கமழ்ந்து, மணம் வீசப்பெற்று
2987 கமழும் நின் சாந்தினால் குறி கொண்டாள் கமழ்கின்ற நின்னுடைய சந்தனத்தாலே பிறர் முயக்கத்தைத் தான் கருதுதலை மனத்தால் கொண்டவள், தலைவன் மேனியிலுள்ள சந்தனத்தைக் கொண்டு அவன் பரத்தையைக் கூடி வந்தமையை உணர்ந்தவள்
2988 கமுகு பாக்கு மரம்
2989 கய பெருமை, நன்மை, மென்மை
2990 கயந்தலை மெல்லிய தலை, மென்மையையுடைய தலை, யானைக் கன்று
2991 கயம் நீர் நிறைந்த பள்ளம், ஆழம், குளம், நீர்நிலை, மென்மை, துவட்சி
2992 கயமலர் கயத்தின் மலர்
2993 கயமுனி யானைக் கன்று
2994 கயல் கெண்டை மீன்
2995 கயல் ஏர் கண் கயலை ஒத்த கண்
2996 கயவாய் நதியின் சங்க முகம், பெரிய வாய், ஆழ்ந்த வாய்
2997 கயன் குளம்
2998 கயில் கோக்குவாய், மூட்டுவாய்
2999 கயிறு நீர் இறைத்தல், பொருள்களைக் கட்டுதல் முதலியவற்றிற்கு உபயோகிக்கும் கயிறு
3000 கயிறு குறு முகவை தன்னால் நீர் தாங்குதல் பெரிதன்றித் தன் கயிற்றையே நின்று வாங்கப்படும் முகவை, நீர் சிறுக உள்ளமையால் நீரை முகவாது இட்ட கயிற்றையே முகக்கும் பாத்திரம், நீண்ட கயிறு கட்டி இறைக்கும் சிறிய பாத்திரம்
3001 கரக்கல் மறைத்தல்
3002 கரக்கிற்பென் மறைப்பேன்
3003 கரகம் குண்டிகை, கமண்டலம், சிரகம்
3004 கரண்டை குண்டிகை
3005 கரத்தல் மறைத்தல்
3006 கரந்ததூஉம் கரந்த களவொழுக்கமும்
3007 கரந்தாங்கே மறைத்தாற் போலே, மறைந்த பொழுதே
3008 கரந்தாள் மறைத்தவள்
3009 கரந்திருக்கற்பாலன்கொல் மறைந் திருக்கக்கடவனோ
3010 கரந்து அடக்கி, ஒளித்து, மறைத்து
3011 கரந்தை கொட்டைக் கரந்தை
3012 கரப்பவன் மறைகின்றவன்
3013 கரப்பாடுதல் மறைத்துக் காத்தல்
3014 கரப்பென் மறைப்பேன்
3015 கரம்பை வறண்ட களிமண் தரிசு நிலம்,
3016 கரவு மறைத்தல், வஞ்சனை
3017 கராம் முதலையுள் ஒரு சாதி
3018 கரி கரிந்துள்ள பகுதி. சான்று
3019 கரிக் குறடு கரியை எடுக்கின்ற குறடு
3020 கரி காய்ந்த கவலை வெந்த கரியினையுடைய பல வழி
3021 கரிகால் கரிகாலன்
3022 கரிகால் வளவன் கரிகாலன்
3023 கரிகாலன் சோழருட் பிரபலம் பெற்ற ஒருவன்
3024 கரி கூறுதல் சான்றாய்க் கூறுதல்
3025 கரிதல் கரியாதல்
3026 கரி வறல் கரியினையுடைய வறந்த நிலம்
3027 கரு கருப்பம், முட்டைக் கரு, பரமாணு
3028 கருக்கு பனையின் கருக்கு
3029 கருங் கண் கரிய கண்
3030 கருங் கல் மலைக்கல்
3031 கருங் கலன் மண்ணாற் செய்த பாண்டம்
3032 கருங் கால் கரிய அடிமரம்
3033 கருங் காழ் உலக்கை கரிய வைரம் பொருந்திய உலக்கை
3034 கருங் கூத்து தண்ணிய நாடகம், இழிவான நாடகம்
3035 கருங் கை வலிய கை
3036 கருங் கோடு கரிய முருட்டுக் கட்டை, கரிய கிளை
3037 கருங் கோல் கரிய கொம்பு
3038 கருந் தொழில் வலிய தொழில்
3039 கருந் தொழில் வினைஞர் தச்சர்
3040 கருந் தோல் விளங்கும் தோல்
3041 கரு நனை பெரிய அரும்பு
3042 கருப்பை எலி
3043 கரும்பனூரன் கரும்பனூர் கிழான்
3044 கரும்பின் எந்திரம் கரும்பு ஆலை
3045 கரும்பின் கழை கருப்பங் கோல்
3046 கரும்பு இனிய சாற்றைக் கொண்ட செடி வகை
3047 கரும்பு அணி பெண்பாலாரின் தோள்களிலும் மார்பிலும் சந்தனக் குழம்பு முதலியவற்றால் கரும்பின் வடிவமாக எழுதப்படுங் கோலம், எழுதிய கரும்பினது அழகு
3048 கரும்பு அமன்ற தோள் எழுது கரும்பு நெருங்கின தோள்
3049 கருமம் காரியம்
3050 கருமை கரிய நிறம், பசுமை, வலிமை, பெருமை, கொடுமை
3051 கருவி தொகுதி, ஆயுதம்
3052 கருவிளை காக்கணம்
3053 கருவினை பாவ வினை
3054 கருவூர் சேரரது பழைய தலைநகர்
3055 கருவை வரகு வைக்கோல்
3056 கருவொடு பெயரிய இல் கருப்பக் கிரகம்
3057 கருனை பொரிக் கறி
3058 கரை சீலை விளிம்பு, ஆடையின் கரை, எல்லை, கடல் ஆறு குளம் முதலிய நீர் நிலைகளின் கரை
3059 கரைதல் அழைத்தல், ஒலித்தல்
3060 கல் பாறை, மலை, அத்தகிரி
3061 கல்அடார் விலங்குகளை அகப்படுத்தும் பொறி
3062 கல் அளை மலைக் குகை
3063 கல் கால் கவணை கற்களைச் சொரிவது போல இடையறாமல் விடும் கவண்
3064 கல் சேர்தல் அத்தகிரியைச் சேர்தல்
3065 கல் முகை மலைக் குகை
3066 கல் முடுக்கர் கல்லின் முடங்கு
3067 கல்ல மணி முதலிய குறிஞ்சி நிலத்துப் பொருள்கள், கல்லிடத்தன
3068 கல்லகாரம் நீர்க்குளிர், குளிரி
3069 கல்லாக் குறள (மகளிரைக் கூடும் முறையைக்) கல்லாத குறளனே
3070 கல்லாக் கோவலர் பிறதொழிலைக் கல்லாத ஆயர்
3071 கல்லாடனார் கடைச் சங்கப் புலவருள் ஒருவர்
3072 கல்லாப் பொதுவனை சாதித் தன்மை கல்லாதபடி இயல்பாக அமைந்த இடையனாந் தன்மையையுடையை
3073 கல்லாமை காட்டியவள் கல்லாத தன்மையனாகக் காட்டியவள்
3074 கல்லா வல் வில் கற்க வேண்டாத வலிய விற் படை
3075 கல்லா வாய்ப் பாணன் வாயிலாய்த் திரிகின்றது ஒழியப் பாட்டைத் திருந்தக் கல்லாத வாயினையுடைய பாணன்
3076 கல்லுறுத்தல் கல்லுதல், தோண்டுதல்
3077 கல்லென்றல் முழக்கமுண்டாதல்
3078 கல் விளை உப்பு கல்லாக விளைந்த உப்பு
3079 கலக்கம் மனம் கலங்குதல்
3080 கலக்கிய கலக்க வேண்டி
3081 கலக்கு கலக்கம்
3082 கலக்குதல் கலங்குவித்தல்
3083 கலக்குற்றன்று கலக்கமுற்றது
3084 கலக்குற கலக்கமுறும்படி
3085 கலக்குறுந்து கலக்கும்
3086 கலக்குறு நோய் மனக் கலக்கம் உறுகின்ற காமநோய்
3087 கலக்குறூஉம் கலக்கமுறாநின்றது
3088 கலங்கல் கலங்கிய கள். சரிதல்
3089 கலங்கன்மின் கலங்காதே கொள்ளும்
3090 கலங்கிய கலங்கின
3091 கலங்கியாள் கலங்கினவள்
3092 கலங்கு அஞர் மனம் கலங்குகின்ற வருத்தம்
3093 கலங்குபு கலங்காநின்று
3094 கலத்தல் கூடுதல்
3095 கலந்தன்று கலந்தது
3096 கலந்தியலுதல் கூடித் திரிதல்
3097 கலந்து கூடி
3098 கலப்பேன் கூறுவேன்
3099 கலப்பை முட்டுக்கள், வாத்தியம் முதலியன வைக்கும் பை
3100 கலப் பையிர் வாத்திய முட்டுக்களையுடைய பையை உடையிர்
3101 கலம் கப்பல், பாத்திரம், குப்பி, ஆபரணம், அணிகலத்தின் வடு, உண் கலம், ஆயுதம், வாத்தியம், கறவைக் கலம்
3102 கலம் செய் கோ வேட்கோ, குயவன்
3103 கலவம் மயில் தோகை
3104 கலவு உடலின் மூட்டுவாய்
3105 கலன் கப்பல், யாழ், மிடா
3106 கலனை சேணம்
3107 கலாத் தானை போர் செய்யும் படை
3108 கலாபம் மயில் தோகை
3109 கலாம் போர்
3110 கலாவம் கலாபம்
3111 கலாவல் கலத்தல்
3112 கலாவுதல் கலத்தல், கலக்கமடைதல்
3113 கலி ஓசை, செருக்கு, தழைக்கை, துளக்கம், கலிப்பு
3114 கலி கெழு கூடல் ஆரவாரம் பொருந்தின மதுரை
3115 கலி கெழு பாக்கம் ஒலி மிகுந்த பாக்கம்
3116 கலி கெழு மறுகு ஓசை மிக்க தெரு
3117 கலி கேழ் ஊர் செருக்குப் பொருந்தின ஊர்
3118 கலிங்கம் ஆடை, உத்தரீயம், துகில், புடைவை
3119 கலிச் சும்மை மிக்க ஆரவாரம்
3120 கலித்த கருங் கால் தழைத்த கரிய அடி
3121 கலித்தல் அழைத்தல், தழைத்தல்
3122 கலி மயில் செருக்கிய மயில்
3123 கலிமா குதிரை
3124 கலிமான் மனச் செருக்கினையுடைய குதிரை
3125 கலிழ் கலிழி நீர், கலங்கல் நீர்
3126 கலிழ்தல் அழுதல், ஒழுகுதல், கலங்குதல், புடைபெயர்தல்
3127 கலிழிநீர் கலங்கல் நீர்
3128 கலுழ் நீர்க் கலக்கம், கலங்கல், வெள்ளம், கலக்கம்
3129 கலுழ் கண் கலங்கின கண்
3130 கலுழ்கண் ஊறல் கலங்கிய ஊறல் நீர்
3131 கலுழ் தரல் கலக்கத்தைத் தரல்
3132 கலுழ்தல் அழுதல், ஒழுகுதல், கலங்குதல்
3133 கலுழ்தி கலங்குவை
3134 கலுழ்ப சொரிவன, கலங்குவன
3135 கலுழ்பு அழுதல், அழுது, கலங்குதலாலே
3136 கலும்பு ஏங்கினள் கலங்கி அழுதாள்
3137 கலுழாக்கால் விழாதகாலத்து
3138 கலுழி நீர்ப் பெருக்கு
3139 கலுழும் நோய் கலங்குதற்கு ஏதுவாகிய காம நோய்
3140 கலை முசுக்கலை, ஆண்மான், ஆண்குரங்கு, எண்கோவையாகிய மேகலை
3141 கலைஇய கலைந்து போகிய, கலந்த
3142 கலைஇயநோய் மனத்தைக் கலக்கின காம நோய்
3143 கவ்விக் கடன் கழித்தல் தின்னல் என்னும் கடனைத் தீர்த்துக் கொள்ளுதல்
3144 கவ்வு தின்கை
3145 கவ்வை எள்ளிளங்காய், காற்றால் ஒலித்தல், அலர், ஆரவாரம்
3146 கவசம் மெய்புகு கருவி
3147 கவடு பகுப்பு, கிளை
3148 கவடுபடுதல் யாழ்ப் பத்தர் போல இருபுறமும் தாழ்ந்து நடு உயர்தல்
3149 கவண் கல்லெறியுங் கருவி
3150 கவணை கவண்
3151 கவர்கணை ஒருவரை யொருவர் முயங்குதற்குக் காரணமான கணை
3152 கவர்த்தல் கப்பு விடுதல்
3153 கவர்தல் அகப்படுத்துதல், முயங்குதல், அழைத்தல், பல காலாகப் பிரிதல், தனதாக்கிக் கொள்ளுதல் தின்னுதல், விரும்புதல்
3154 கவர்பு வாசிக்கப்பட்டு
3155 கவர்பூட்டல் கொள்ளையூட்டல், பல காலாய் ஓடி ஊட்டுதல்
3156 கவரி கவரிமான்
3157 கவல் கவற்சி
3158 கவல்பு கவல்
3159 கவலை கவர்த்த வழி, பல பழி, பல தெருக் கூடும் இடம், துருத்தி, பல நினைவு, மனக் கவலை
3160 கவலை கவற்றுதல் வருத்தஞ் செய்தல்
3161 கவலை கொள் நெஞ்சு பல நினைவு கொண்ட நெஞ்சு
3162 கவலைத்து பலவழியினை யுடையது
3163 கவலையால் மனக்கவலை செய்தலோடு
3164 கவவல் அணைத்தல்
3165 கவவி முயங்கி
3166 கவவியார் தழுவியவர்
3167 கவவு உள்ளீடு, முயக்கம்
3168 கவவுக் கை அகத்திடுதலையுடைய கை
3169 கவவுதல் கையால் தழுவுதல், முயங்குதல்
3170 கவழம் கவளம். வாய் நிரம்பிய உணவு
3171 கவளம் யானைக்குக் கொடுக்கும் உணவு, வாயளவுகொண்ட உணவு
3172 கவாஅன் பக்கமலை, மலையடிவாரம்
3173 கவான் மலைப் பக்கம்
3174 கவி கண் நோக்கு புருவத்திற்கு அருகாகக் கையைக் கவித்துக் கொண்டு பார்க்கும் பார்வை
3175 கவி குளம்பு கவிந்த குளம்பு
3176 கவி கை இடுதற்குக் கவிந்த கை
3177 கவி கைப் புலையன் (யாழ் வாசித்தலால்) கவிந்த கையினையுடைய பாணன்
3178 கவிதல் இடிதல், ஒன்றோடொன்று சேர்தல்
3179 கவிர் முள்ளுமுருங்கை மலர்
3180 கவிழ்தல் மறிதல்
3181 கவின் அழகு
3182 கவின் நலம் அழகின் மிகுதி
3183 கவினுதல் அழகுபெறுதல்
3184 கவினிய அழகு பெற்று வளர்ந்த
3185 கவினினை அழகுடையை ஆனாய்
3186 கவினை ஒளியையுடையை
3187 கவுணியன் கவுண்டினிய கோத்திரத்தான்
3188 கவுரியர் பாண்டியர்
3189 கவுள் கன்னம், யானையின் உள்வாய்
3190 கவை கவர், கவைக்கோல்
3191 கவை ஆரம் கலத்தை அகத்திட்டுக் கிடக்கின்ற ஆரம்
3192 கவைஇ அணைத்து, சூழ்ந்து
3193 கவைஇய அகத்திட்ட, சூழ்ந்த, வளைந்த
3194 கவைக்கொடு கவர்த்த கொம்பு
3195 கவைத்தல் கவடுபடுதல், அகத்திடுதல், அணைத்தல்
3196 கவைத் தலை கிளைத்த கொம்பையுடைய தலை
3197 கவைத் தாம்பு தாமணியையுடைய தாம்பு, மாடுகளைக் கட்ட உதவும் மணி கட்டிய கவையுள்ள தாம்புக் கயிறு, மாடுகளின் கழுத்தில் கட்டியிருக்கும் தும்பு
3198 கவைத் தாள் பிளவு பட்ட கால்
3199 கடை முட் கருவி யானையை அடக்கும் கருவிகளுள் ஒன்று
3200 கவையினள் தழுவினாள்
3201 கழகம் சூதாட்டிடம்
3202 கழங்கு கழற்சிக்காய், கழற்சிக் காயைக் கொண்டு வெறியாட்டில் வேலன் சொல்லும் குறி
3203 கழங்கு படுத்தல் கழங்கு கொண்டு குறியறிதல்
3204 கழங்கு மெய்ப் படுத்தல் பயிர்களை விலங்குகள் அழிக்காதபடி புலிபோற் செய்து வைக்கும் உருவுக்குக் கழற்சிக்காயைக் கண்ணாக அமைத்தல், கழற்காய் மூலம் குறியறிதல்
3205 கழஞ்சு ஓர் எடுத்தலளவை
3206 கழல் ஒரு கொடி, வீரகண்டை, கால்மோதிரம், கழற்சி
3207 கழல் தொடி கழலும் வீரவளை, கழலும் தொடி
3208 கழலுதல் ஓடுதல், பிதுங்குதல், நழுவுதல்
3209 கழறிய கோபித்தற்கு
3210 கழறுதல் இடித்தல், கோபித்தல், இடித்துரைத்தல்
3211 கழறுவல் கழறுவேன்
3212 கழனி வயல், பழனம்
3213 கழாஅத்தலை கழாத்தலையார் என்னும் புலவர்
3214 கழாஅத்தலையார் கழுவாத தலையையுடையவர்
3215 கழாஅது கழுவாமல், துவையாமல்
3216 கழாஅர் ஓர் ஊர்
3217 கழாஅல் கழுவுகை
3218 கழாஅல கழற்ற
3219 கழால் களைகை, கழுவுதல்
3220 கழி கடலையடுத்த உப்பு நீர்ப் பரப்பு, உப்பங்கழி, ஆயுதக் காம்பு, கோல், மிகுதி
3221 கழி கல மகடூஉ கைம்பெண்
3222 கழி கல மகளிர் விதவைகள்
3223 கழி சேர் மருங்கு உப்பங் கழி சேர்ந்த இடம்
3224 கழித்தல் உருவுதல்
3225 கழித்திடுதல் கை விடுதல்
3226 கழிதல் கடத்தல், செல்லுதல், இறந்து படுதல், விடுதல்
3227 கழிந்தன்று நீங்குதலாயிற்று
3228 கழிந்தோர் வலி மிக்கோர்
3229 கழிப்பி கழியா நின்றாய்
3230 கழிப் பிணிக் கறைத் தோல் கழியால் பிணிக்கப்பட்ட பரிசை
3231 கழிப்பு கழித்தல்
3232 கழிப்புதல் போக்குதல், செய்து முடித்தல்
3233 கழி படர் மிக்க துன்பம்
3234 கழிபு விட்டுச் சென்று
3235 கழீஇ கழித்து
3236 கழீஇய நீங்கும்படி, மிக்க
3237 கழு கறவாத பசுவைக் கறப்பதற்கு அதன் கழுத்தில் இரண்டு தலையும் சீவி மாலைபோற் கட்டியிடுங் கழி
3238 கழுகு ஒரு பறவை, பிணந் தின்னிக் கழுகு
3239 கழுது பேயில் ஒரு சாதி, கட்டுப் பரண், காவற் பரண்
3240 கழுதை ஒரு விலங்கு
3241 கழுந்து உலக்கை முதலியவற்றின் திரண்ட நுனி, மர வைரம்
3242 கழுநீர் தீவினையைக் கழுவுதற்குக் காரணமான தீர்த்த நீர், செங்கழுநீர்
3243 கழுநீர் மேய்ந்த செங்கழுநீர்ப் பூவைத் தின்ற
3244 கழும மயங்கும்படி
3245 கழுமல் கலத்தல்
3246 கழுமலம் சேரநாட்டிலுள்ள ஓர் ஊர்
3247 கழுமிய கலந்த
3248 கழுவாய் போக்கும் வழி, பிராயச் சித்தம்
3249 கழுவுதல் துவைத்தல், நீராட்டுதல்
3250 கழுவுள் இடையர் தலைவன்
3251 கழுஉ கழுவி
3252 கழை மூங்கிற் குழாய், ஓடக் கோல், தண்டு, கோல், மூங்கில்
3253 கள் தேன், மது
3254 கள்வன் திருடன், வஞ்சகன்
3255 கள்வி கள்ளத் தன்மையை உடையாள்
3256 கள்ளி செடி வகை
3257 கள்ளில் ஒரு சிவஸ்தலம், கள், கள் விற்கும் கடை
3258 கள களவொழுக்கம்
3259 களங்கனி களாப் பழம்
3260 களங் காய்க் கண்ணி நார் முடிச்சேரல் ஒரு சேர அரசன்
3261 களம் இடம், யாகசாலை, போர்க்களம்
3262 களம் வேட்டல் கள வேள்வி செய்தல், போரிற் பகைப் படையைக் கொன்று பேய்கட்கு விருந்தூட்டுதல்
3263 களமர் வீரர், உழவர்
3264 களர் உவர் நிலம்
3265 களரி களம் நிலம், போர்க்களம்
3266 களரி அம் பறந்தலை புறங்காடு
3267 களவன் நண்டு, கரி கூறுவோன்
3268 களவிற் கூட்டம் களவுப் புணர்ச்சி
3269 களவு களவு ஒழுக்கம்
3270 களவுப் புளி களாப் பழத்தின் புளிப்பு
3271 களன் தொழுவம், போர்க்களம்
3272 களன் அறு குப்பை களத்தில் கடா விடுதல் தொழில் பெறாத தூற்றாப் பொலி, களத்தில் சேர்த்துத் தூற்றப் படுதல் இல்லாத நெல்மணிக் குவியல்; வயல்களில் உதிர்ந்து கிடக்கும் நெல் மணிக் குவியல்
3273 களா களா வகை, இனிய புளிப்பான பழத்தையுடையது
3274 களி கள், குழைவு, மா முதலியவற்றால் ஆக்கிய களி, வண்டல், கள்ளின் களிப்பு, களிப்பு, செருக்கு, மதம்
3275 களித் துழவை களியாகத் துழாவிச் சமைத்த கூழ்
3276 களி பட்டான் கள்ளுண்டு களித்தவன்
3277 களி மிதவை குழைதலையுடைய கும்மாயம், உழுந்து கலந்து குழைய வெந்த சோறு
3278 களியும் நீர் வற்றிக் களி மயமாகும்
3279 களி வழாஅ மென் சொல் களிப்பு வழுவாத மென் சொல்
3280 களிற்று ஒருத்தல் ஆண் யானை
3281 களிற்றுயிர் களிற்றினது கை போலும் வடிவுடைய பெரு வங்கியம், களிற்றுயிர்த் தூம்பு
3282 களிறு ஆண் யானை
3283 களிறென ஆர்ப்பவர் களிறு வந்தது என்று ஆரவாரிப்பார்கள்
3284 களை கைவிடு
3285 களைஇய நீக்கும் பொருட்டு
3286 களைஇயர் நீங்கும் பொருட்டு
3287 களைகலம் களையமாட்டோம்
3288 களைகுவை போக்குவை
3289 களைஞர் நீக்குவார், களைவார்
3290 களைஞன் களை பறிப்போன்
3291 களைதக்க களைதல் தக்க
3292 களைதல் தீர்த்தல்
3293 களைதாராப் பொழுது போக்குதலைச் செய்யாத காலம்
3294 களைந்தது போல போக்கினாற் போல
3295 களைந்தனன் போக்கினன்
3296 களைந்தீமின் களைவீராக
3297 களைநர் போக்குவார்
3298 களைமதி போக்குவாய்
3299 களைமே தீர்ப்பாய்
3300 களைமோ களைவாய்
3301 களையுநர் தீர்ப்பார்
3302 களைவார் போக்குவார்
3303 கற் கோள் படிவம் செய்தற்கு உரிய கல்லைத் தெரிந்து எடுத்தல்
3304 கற்பன் கல்வியுள்ளவன்
3305 கற்பித்தான் நூல் முதலிய கற்பித்த ஆசிரியன்
3306 கற்பு கல்வி, கற்பனை
3307 கறக்குந்து கறக்கும்
3308 கறங்கல் ஒலித்தல்
3309 கறங்கு இசை அனுகரண ஒலி
3310 கறங்குதல் ஒலித்தல், ஆரவாரித்தல்
3311 கறவை பசு
3312 கறாஅ, எருமை கறக்கப்படாத காட்டெருமை
3313 கறி மிளகு, மிளகுகொடி, பொரிக்கறி
3314 கறிக்கும் கடிக்கும்
3315 கறித்தல் தின்னல்
3316 கறிய மிளகு கொடிகளையுடைய
3317 கறுக்குந கறுப்பன
3318 கறுத்தல் முற்றுதல், கோபித்தல்
3319 கறுத்தோர் பகைவர்
3320 கறுவு கறுவுதல்
3321 கறுழ் கடிவாளம், குதிரையின் முகக் கருவி, குதிரையின் வாய்க் கருவி
3322 கறை உரல், கறுப்பு, கடப்பாடு
3323 கறை அடி இரத்தத்தாற் சிவந்த அடி, உரல் போலும் அடி
3324 கறை அடி யானை கறை பொருந்திய அடியினை உடைய யானை, உரல் போலும் அடியை உடைய யானை
3325 கறை அணல் கறுப்பை உடைய கழுத்து
3326 கறைத் தோல் கரிய தோலாகிய பரிசை
3327 கறைப்பட்டு கடமைத் துறைப்பட்டு
3328 கறை மிடறு நஞ்சினது கறுப்பையுடைய கழுத்து
3329 கன்னி விடியல் வைகறை, மிக்க இளமையான காலை நேரம்
3330 கன்மார் கற்பார்
3331 கன்றி மனங் கன்றி, மனம் நொந்து
3332 கன்றிடின் முதிருமாயின்
3333 கன்றிய தெவ்வர் மாறுபாட்டிற்பட்ட பகைவர்
3334 கன்று பசுவின் கன்று, யானைக் கன்று
3335 கன்னம் நோய் தணியும் பொருட்டுக் கோயிற்குப் பிரார்த்தனையாகச் செய்து கொடுக்கும் சிறு படிமம்
3336 கன்னல் கரகம், நாழிகை வட்டில்
3337 கனங் குழை பொன்னாற் செய்த காதணி, பொன்னாற் செய்த மகரக் குழையினையுடையாள்
3338 கனம் பொன்
3339 கனலி சூரியன்
3340 கனலுதல் எரிதல், காந்துதல், கொதித்தல்
3341 கனவ வாய் வெருவ
3342 கனவியாங்கு கனாக் கண்டாற் போல
3343 கனவினால் கனவின் கண்
3344 கனவு கனா, பொய், பொய்யான காலம்
3345 கனவுதல் கனாக் காணுதல்
3346 கனற்றி நெஞ்சைக் கனலப் பண்ணி
3347 கனற்றுதல் எரியச் செய்தல்
3348 கனன்று கொதித்து
3349 கனிதல் முதிர்தல்
3350 கனை மிகுதி, செறிவு, திரட்சி
3351 கனைஇ செறிந்து
3352 கனை இருள் வானம் செறிந்த இருளையுடைய மேகம்
3353 கனை கடாம் செறிந்த மதம்
3354 கனை கதிர் செறிந்த கதிர்கள், செறிந்த கிரணங்களையுடைய ஞாயிறு
3355 கனை சுடர் செறிந்த கிரணம் செறிந்த சுடரை யுடைய ஞாயிறு
3356 கனை செலல் ஆரவாரிக்கும் செலவு
3357 கனைத்தல் திரளுதல், செறித்தல்
3358 கனைதல் நெருங்குதல், மிகுதல், ஒலித்தல், செறிதல், முயங்குதல்
3359 கனை துளி செறிந்த துளி
3360 கனை பெயல் செறிந்த மழை, நெருங்கின மழை
மேல்