3361 கா சோலை, காவுமரம், இரண்டு பக்கங்களிலும் பண்டங்களைக் கட்டித் தோளிற் சுமக்கப்படும் மரம்; இது காவடித் தண்டு என்றும் கூறப்படும்
3362 காஅய் சுமந்து
3363 காக்கிற்பான் காக்கின்றவன்
3364 காக்கை காகம்
3365 காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஒரு பெண்பாற் புலவர்
3366 காசு பொற்காசு, மணி
3367 காசு அமை பொலங்காழ் மணிகள் இடையிடை அமைந்த பொன் மணிகளையுடைய வடம்
3368 காஞ்சி ஆற்றுப் பூவரசு, நிலையாமை
3369 காஞ்சித் திணை பகையரசன் போருக்கு வந்திட, ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்
3370 காட்சி அழகு, அறிவு, காணுதல்,
3371 தோற்றம் நூல்
3372 காட்டக நெறி காட்டையுடைய வழி
3373 காட்ட குளவி காட்டு மல்லிகை
3374 காட்டல் காட்டுதல், காட்டி மகிழ்தல்
3375 காட்டி காட்டுவாய், காணப்பண்ணி
3376 காட்டிய காட்டவேண்டி, காட்டுதற்கு
3377 காட்டியோய் உண்டாக்கினாய்
3378 காட்டீமோ காட்டுவாய்
3379 காட்டீயாய் காட்டாய்
3380 காட்டு காண்பி
3381 காட்டுதல் அறிவித்தல்
3382 காட்டு நாடு காட்டினுள்ளாகிய குடி வாழ் பிரதேசம்
3383 காட்டுவர் காட்டித் துன்புறுவர்
3384 காடி கஞ்சி, ஊறுகாய், கழுத்து
3385 காடு வனம், பாலை நிலம்
3386 காடு கொல்லுதல் காட்டை வெட்டி அழித்தல்
3387 காண் அழகு, காட்சி
3388 காண்கம் காண்பேம்
3389 காண்கு காண்பேன்
3390 காண்கும் காண்போம்
3391 காண்கு விழிப்ப காண்பேனாக விழிப்ப
3392 காண்கை அறிவு
3393 காண்டல் கண்டு மகிழ்ந்திருத்தல்
3394 காண்டிகா அருளிப் பாராய்
3395 காண்டை காண்பாய், நெஞ்சாலே கருதுவாய்
3396 காண்டைப்பாய் காண்பாய், (காரியம் என்று நினைத்துப்) பார்ப்பாய்
3397 காண்தொறும் பார்க்குந்தோறும்
3398 காண் தக காட்சி தகும்படி, அழகு பொருந்த
3399 காண்தகு மதி காட்சிதகும் கதிரைச் சொரியும் சந்திரன்
3400 காண் தகை கண்ணாற் பார்க்குந் தன்மை
3401 காண்பது செய்வது, படைப்பது
3402 காண்பல் கண்டிருப்பேன்
3403 காண்பாய் நெஞ்சாலே காண்பாய்
3404 காண்பான் காண்பதாக
3405 காண்பு காட்சி
3406 காண்பு இன் துகிர் காட்சிக்கு இனிய பவளப் பலகை
3407 காண்மார் காண்டற்கு, காணவேண்டி
3408 காண்வர காட்சி வரும்படியாக
3409 காண் வருதல் காட்சி வருதல்
3410 காண காண்கையினால், காணும்படி
3411 காணம் பொற்காசு
3412 காணல் விளங்க அறிதல்
3413 காணலை காண்பாய் அல்லை
3414 காணா கண்டு, காணாதன
3415 காணாது தகாதென்று ஆராயாது, காணாமல், நினையாதே
3416 காணாமை காணாதபடி
3417 காணாமை நினைத்தல் கண்ணாற் காணாமல் நெஞ்சால் நினைக்கை
3418 காணாய் மனத்தான் ஆராய்ந்து பாராய்
3419 காணிய காண, காண்டற்கு, காண வேண்டி, மனத்தால் ஆராய்வதற்கு
3420 காணிர் காணீர் என்பது குறுகி நின்றது, காணாதிருக்கின்றீர், காணாதிருந்தீர்
3421 காணுங்கால் காணுமிடத்து
3422 காணுதல் கருதுதல், கூறுதல், நெஞ்சாற் கண்டு வைத்தல், மனத்தால் ஆராய்தல், விளங்க அறிதல், கேட்டல், புறங்காணுதல்
3423 காணுநர் கண்டார், கண்டு மகிழ்வார்
3424 காணும் முன்னிலைப் பன்மையில் வரும் ஓர் அசை
3425 காணுமோர் காண்போர்
3426 காணூஉ கண்டு
3427 காத்தி பரிகரி
3428 காத்து ஓம்புதல் பாதுகாத்தல், பேணிக் காத்தல், பேணிக் காத்து நடத்தல்
3429 காதல் அன்பு, இரப்பார் மேலுள்ள காதல், காதலித்தல், வேட்கை
3430 காதல் நல் நாடு அன்பு பொருந்திய நல்ல நாடு
3431 காதலர் தலைவர், விருப்பமுடையோர்
3432 காதலவர் சுற்றத்தார்
3433 காதலன் தலைவியினிடத்து அன்பையுடையவன்
3434 காதலார் காதலிக்கப்பட்டார்
3435 காதலை காதலித்தலையுடையாய்
3436 காதலோன் தலைவன், மகன்
3437 காதறுதல் கவணில் கல் வைக்கும் இடம் அற்றுப் போதல்
3438 காது செவி, கவணில் கல் வைக்குமிடம்
3439 காந்தள் ஒரு வித மலர்
3440 காப்பனர் காப்பவர்
3441 காப்பாள் காவல் வீரன்
3442 காப்பாளன் காவலாளன்
3443 காப்பியாற்றுக் காப்பியனார் ஒரு புலவர்
3444 காப்பு மதில், காத்தல், அரச முத்திரை, ஊர், குறும்பு
3445 காப்பு மறம் காவல் வீரர்
3446 காப்பு யாத்தல் அரக்கினால் இலச்சினையிடுதல்
3447 காப் பொன் நூறு பலம் நிறையுள்ள பொன்
3448 காபாலம் சிவபெருமான் கூத்துள் ஒன்று, பிரம கபாலத்தைக் கையில் ஏந்திச் சிவபிரான் ஆடும் கூத்து
3449 காம்பு மூங்கில், பூவின் தண்டு
3450 காம்பு கண்டன்ன தூம்பு மூங்கிலைக் கண்டாற் போன்ற உள் துளை
3451 காம்புத் தீ மூங்கில் இழைதலாற் பிறந்த தீ
3452 காம எரி காமமாகிய தீ
3453 காமக் கடவுள் வழிபடு தெய்வம்
3454 காமக் கணிச்சி காமமாகிய கோடரி
3455 காமக் குதிரை விருப்பத்தையுடைய குதிரை
3456 காமம் விருப்பம், காம நோய், மெய்யுறு புணர்ச்சி
3457 காமம் உணர்ந்தும் காம நோயின் வருத்தத்தை உணர்ந்துவைத்தும்
3458 காமர் விருப்பம், அழகு, காமனார்
3459 காமர் கழல் விருப்பத்தையுடைய கழல்
3460 காமரம் சீகாமரம் என்னும் பண்
3461 காமரு விருப்பம் மருவின
3462 காமரு நல் எழில் விருப்பம் மருவி நல்ல எழுச்சி
3463 காமரு நோக்கினை விருப்பம் மருவுகின்ற அழகினையுடையை
3464 காமன் மன்மதன்
3465 காமுற்ற விரும்பின
3466 காமுற வேண்டிக் கோடல்
3467 காமுறுதல் வேண்டிக் கொள்ளுதல், விருப்பமுறுதல், விரும்புதல்
3468 காமுறுநன் காமுறுவான்
3469 காய் வஞ்சனை
3470 காய் கட மருங்கு காய்ந்த கற் காட்டின் பக்கம்
3471 காய்குவள் கோபிப்பாள்
3472 காய்கை கோபித்தல்
3473 காய் ஞாயிறு காய்கின்ற சூரியன்
3474 காய்த்தல் மரம் செடி முதலியன காய்களைக் கொள்ளுதல்
3475 காய்த் துணர் காய்க் கொத்து
3476 காய்தல் விடாய்த்தல், கெடுத்தல், கோபித்தல், சுடுதல்
3477 காய்ந்த நோய் மெய் வெதும்புதற்குக் காரணமான காம நோய்
3478 காய் நெல் விளைந்த நெல்
3479 காய சுமந்து கொண்டு வந்த
3480 காயம் உறைப்பு, குழம்பில் வெந்த கறித் துண்டு, காழ்ப்பு
3481 காயல் உப்பளம்
3482 காயா காசா மரம், காயாம் பூ
3483 காயாங் குன்றம் காயா மரங்களையுடைய மலை
3484 காயாதி வருந்தாதே
3485 காயாந் தண் பொழில் காயாம் பூவையுடைய குளிர்ச்சி பொருந்திய சோலை
3486 காயாமை கோபியாதிருத்தல்
3487 காயும் தவறிலேன் காய்கைக்குக் காரணமாவதோர் தவறுடையேனல்லேன்
3488 கார் கருங்குட்ட நோய், இருள், கருமை, பசுமை, மழை, மேகம், கார் காலம்
3489 கார்க் கரும்பு பசிய கரும்பு
3490 கார்கோள் கடல்
3491 கார் நாள் உரும் மழைக் காலத்து இடி
3492 கார் நாற்றம் தலைப்பெயல் மழையால் மண்ணில் தோன்றும் ஆவியின் மணம்
3493 கார்ப் பெயல் கார் காலத்து மழை
3494 கார் முற்றி கார் காலம் முதிர்ந்து
3495 காரக் குறைந்து கருங்குட்டத்தாலே காலும் கையும் குறைந்து
3496 காரான் பெண் எருமை, காரா
3497 காரி நஞ்சு, கரிய எருது, வாசுதேவன், கடைவள்ளல்களுள் ஒருவன், அவனது குதிரை
3498 காரிகை அழகு
3499 காரிகை நல்லார் அழகினையுடைய மகளிர்
3500 காரி யாறு ஓர் ஆறு
3501 காரென் புல்லென்ற
3502 காரெனல் ஒளி மழுங்குதற் குறிப்பு
3503 காரேறு எருமைக் கடா, கரிய கடா
3504 காரை காட்டுச் செடி, வகை
3505 காரோடன் சாணைக்கல் செய்வோன்
3506 கால் அடிப்பாகம், இடம், காற்று, காம்பு, கால்வாய், அடி, பொழுது, பஞ்ச பூதத்துள் ஒன்று, கிரணம், சட்டம், தண்டு, நீர்க்கால், ஓடுகால், உருளை, பாதம், தடவை
3507 கால் வழி கட்டில் பாடை
3508 கால் கிளர்தல் ஓடுதல், காற்றைப் போல இயங்குதல், படையெடுத்துச் செல்லுதல்
3509 கால்கோள் அடிக்கொள்ளுதல்
3510 கால்சீத்தல் அடியோடு போக்குதல்
3511 கால் புல்லிக் கொண்டு காலைக் கட்டிக் கொண்டு
3512 கால்பொரல் காற்றடித்தல்
3513 கால்போழ்தல் குறுக்கே செல்லுதல்
3514 கால்யாத்தல் நெருங்குதல், மறைத்தல்
3515 கால் வல் தேர் உருளை ஓடுதல், வல்லதேர், வலிமையான சக்கரமுள்ள தேர்
3516 கால் வழி காற்சுவடு
3517 காலம் முடிவு, காலன், பொழுது
3518 காலம் பார்த்தல் ஒருவனது இறுதிக் காலத்தைக் கணக்கிடுதல்
3519 காலன் யமன், கூற்றுவனது ஏவலாளன்
3520 காலுதல் நீங்குதல், குதித்தல் தோற்றுவித்தல்
3521 காலை வாணாள், சூரியன், சமயம், பள்ளியெழுச்சி, முரசம், காலம், நாட்காலை
3522 காலை அந்தி காலையை அடுத்த அந்திப் பொழுது
3523 காலைநாள் நாட்காலை
3524 காலையது பண்பு சூரியனது வெம்மை
3525 காலொற்றுதல் காற்று வீசுதல்
3526 காலோர் காலாட்கள்
3527 காவல் காக்கப்படும் நாடு, காத்தல்
3528 காவலர் காவல் செய்பவர்
3529 காவலன் காத்தவன்
3530 காவற்பெண்டு பெண்பாற் புலவருள் ஒருவர்
3531 காவாது காத்துக் கொள்ளாதே
3532 காவி குவளை
3533 காவிக் கொள்ளுதல் தோளால் சுமந்து கொள்ளுதல்
3534 காவிதி மாக்கள் காவிதிப்பட்டம் கட்டின அமைச்சர்
3535 காவிரிப்பூம்பட்டினம் சோழர்க்குரிய தலைநகரமும் பழைய துறைமுகப் பட்டினமுமாகிய புகார் நகரம்
3536 காவினெம் சுமந்தேம்
3537 காவு சோலை
3538 காவுதல் தோளால் காத்தண்டு சுமத்தல்
3539 காவோலை முற்றின ஓலை
3540 காழ் மரத்துண்டு, கட்டுத்தறி, தூண், ஓடம் செலுத்தற்குரிய தண்டு, இரும்புக் கம்பி, யானையைச் செலுத்தும் பரிக்கோல், வைரம், பரல், காம்பு, பூமாலை, நூற்சரடு, கொட்டை, இரு நான்கு கொத்துக் கொண்ட காஞ்சி என்னும் அணி, கண்ணி, தொடை, முத்துவடம், விதை
3541 காழ்வை அகில்
3542 காழகம் கடார நாடு, ஆடை, கைக் கவசம், நீல ஆடை, கைச் சரடு, துகில்
3543 காழியார் வண்ணார்
3544 காழோர் குத்துக் கோலையுடையோர்
3545 காளாம்பி காளான்
3546 காளை வீரன், இளையோன்
3547 காற் புறம் புறங் கால்
3548 கான் வாசனை, காடு
3549 கான் அமர் செல்வி கொற்றவை
3550 கான் உணங்கு கடு நெறி மழை இன்மையால் கானம் தீய்ந்த கடிய வழி
3551 கான் மாறுதல் கழிந்து போதல்
3552 கான் யாறு முல்லை நிலத்துள்ள யாறு, காட்டாறு
3553 கானக்கோழி காட்டுக் கோழி
3554 கானக நாடன் குறிஞ்சி நிலத் தலைவன்
3555 கானங் கிழவோன் காட்டையுடையோன், தலைவன்
3556 கானப்பேர் திருக்கானப்பேர் என்னும் ஊர், காளையார்கோயில்
3557 கானம் பாலை நிலம், முல்லை நிலம், காடு
3558 கானல் கடற்கரை, கடற்கரைச் சோலை
3559 கானவர் குறவர், முல்லை நிலத்து வாழ்வார்
3560 கானவன் குறவன்
3561 கான வாரணம் காட்டுக் கோழி
3562 கான வைப்பு முல்லை நிலம்
மேல்