| 3563 |
கிடக்கை |
பரப்பு, கடல், உலகம் |
| 3564 |
கிடங்கில் |
நல்லியக் கோடனது ஊர் |
| 3565 |
கிடத்தல் |
படுத்தல் |
| 3566 |
கிடப்பி |
கிடத்தி |
| 3567 |
கிடப்புதல் |
கிடத்துதல் |
| 3568 |
கிடாரம் |
ஒரு வகைப் பாத்திரம் |
| 3569 |
கிடுகு |
கேடகம், சட்டம் |
| 3570 |
கிடை |
நெட்டி |
| 3571 |
கிண்கிணி |
கிங்கிணி, சதங்கை |
| 3572 |
கிண்கிணி மணித் தார் |
சதங்கை தண்டை, சிறு மணிகள் கோத்த தார் |
| 3573 |
கிண்டுதல் |
கிளறுதல் |
| 3574 |
கிணை |
உடுக்கை, போர்ப் பறை |
| 3575 |
கிணைமகள் |
விறலி |
| 3576 |
கிணைமகன் |
கிணைப்பறை வாசிப்பவன் |
| 3577 |
கிணைவன் |
கிணைமகன் |
| 3578 |
கிம்புரி |
நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப் பெற்ற தூம்பு, மகரவாய் |
| 3579 |
கில்லா |
கூடா |
| 3580 |
கிலுகிலி |
பிள்ளைகள் ஆட்டும் கிலு கிலுப்பை |
| 3581 |
கிழக்கு |
கீழிடம் |
| 3582 |
கிழக்கு அகல் நெடுங் குழி |
கிழங்கு எடுத்தற்காகத் தோண்டப்பட்ட பெரிய குழி |
| 3583 |
கிழமை |
நாலு தாக்குடைய தாள வகை, உரிமை |
| 3584 |
கிழமையோன் |
உறவினோன் |
| 3585 |
கிழவன் |
உரிமையுடையோன் |
| 3586 |
கிழவோய் |
உடையோய், உரியோய் |
| 3587 |
கிழவோன் |
உரியவன் |
| 3588 |
கிழார் |
நீர் இறைக்கும் பூட்டைப் பொறி |
| 3589 |
கிழித்தல் |
பிளத்தல், தின்னுதல் |
| 3590 |
கிழிப்பு |
குகை |
| 3591 |
கிள்ளி |
நலங்கிள்ளி |
| 3592 |
கிள்ளிவளவன் |
ஒரு சோழன் |
| 3593 |
கிளக்குவல் |
சொல்லுவேன் |
| 3594 |
கிளத்தல் |
சொல்லுதல் |
| 3595 |
கிளர்தல் |
எழுதல், தோன்றுதல், மிகுதல், உயர்தல், விளங்குதல் |
| 3596 |
கிளர்ப்ப |
விளங்க |
| 3597 |
கிளவி |
பேச்சு, மொழி, வார்த்தை |
| 3598 |
கிளி |
பறவை வகை |
| 3599 |
கிளை |
பூங்கொத்து, இனம், சுற்றம், ஓர்இசை, மரக் கொம்பு |
| 3600 |
கிளை இதழ் |
புறவிதழ் |
| 3601 |
கிளைஇய |
கிளைத்த |
| 3602 |
கிளை கட்டுதல் |
இனமாகக் கட்டுதல் |
| 3603 |
கிளைத்தல் |
மரம் கப்பு விடுதல், கிளறுதல், கீறுதல் |
| 3604 |
கிளப்பின் |
கிளறின் |
| 3605 |
கிளை மலர் |
கொத்தில் எழுந்த பூ |
| 3606 |
கிற்றல் |
சம்மதித்தல் |
| 3607 |
கின்னரம் |
இசை எழுப்பும் பறவை வகை |