| 3620 |
கு |
ஒரு சாரியை, ஓர் உருபு |
| 3621 |
குக்கூவெனல் |
ஓர் ஒலிக் குறிப்பு |
| 3622 |
குச்சு |
குச்சுப்புல் |
| 3623 |
குஞ்சரக் குரல குருகு |
யானையங்குருகு என்னும் பறவை |
| 3624 |
குஞ்சரம் |
யானை |
| 3625 |
குஞ்சர ஒழுகை |
யானை கட்டிய சகடம் |
| 3626 |
குஞ்சி |
தலைமயிர் |
| 3627 |
குட்டம் |
ஆழம், மடு, பரப்புள்ள இடம் |
| 3628 |
குட்டுவன் |
குட்ட நாட்டிலுள்ளவன், சேரன் |
| 3629 |
குட |
வளைவை உணர்த்துவதோர் உரிச்சொல் |
| 3630 |
குடக்கு |
மேற்கு |
| 3631 |
குடக்கு ஏர்பு |
மேலைத் திசைக்கண் எழுந்து சென்று |
| 3632 |
குடக்கு வாங்கு |
மேலோங்கி வளைந்த |
| 3633 |
குடக்கோ |
சேரன், குடநாட்டில் உள்ளார்க்குத் தலைவன் |
| 3634 |
குட கடல் |
மேல் கடல் |
| 3635 |
குடசம் |
குடசப் பாலை, வெட் பாலை |
| 3636 |
குடஞ் சுட்டவர் |
பசு நிரை மேய்க்கும் இடையர், இப் பசு இன்னதனைக் குடம்பால் போதும் என்று சுட்டுதலையுடைய பசுவிடையர் |
| 3637 |
குடஞ் சுட்டு |
பசு, குடம்பால் கறக்கும் என்று கருதப்படும் பசு |
| 3638 |
குடதிசை |
மேற்கு |
| 3639 |
குடந்தம் |
கை கூப்பி மெய் வளைத்துச் செய்யும் வழிபாடு, நால் விரல் முடக்கிப் பெரு விரல் நிறுத்தி நெஞ்சிடை வைக்கை |
| 3640 |
குடந்தம்படுதல் |
வழிபடுதல் |
| 3641 |
குடந்தை |
வளைவு, குடம், ஓர் ஊர் |
| 3642 |
குடபுலம் |
மேல்நாடு |
| 3643 |
குடம்பை |
கூடு |
| 3644 |
குடர் |
குடல் |
| 3645 |
குடவர் |
மேற்கிலுள்ள குட நாட்டினர் |
| 3646 |
குடவாய் |
குடம் போலத் திரண்ட இடம் |
| 3647 |
குடா |
வளைவு |
| 3648 |
குடா அடி |
குட முழவு போன்ற அடி, வளைந்த பாதம் |
| 3649 |
குடாது |
மேற்கிலுள்ளது |
| 3650 |
குடாரி |
கோடரி, மழுப் படை |
| 3651 |
குடி |
குடியானவன், குடும்பம், ஊர், வங்கிசம், குடிமக்கள் |
| 3652 |
குடிஞை |
கோட்டான், பேராந்தை |
| 3653 |
குடி திருத்துதல் |
ஆட்சிக்கு உட்பட்ட குடிகளை நன்னிலையில் நிறுத்துதல் |
| 3654 |
குடி நிலை உரைத்தல் |
பழமையிலும் வீரத்திலும் புகழ் பெற்ற குடியின் வரலாற்றைச் சொல்லுதல் |
| 3655 |
குடிப் பாடு |
குலத்திற்குப் பொருந்திய வழக்கம் |
| 3656 |
குடி புறந்தருதல் |
தம் கீழ்க்குடிமக்களைப் பாதுகாத்தல் |
| 3657 |
குடிபுறந்தருநர் |
வேளாளர் |
| 3658 |
குடிமை |
ஒழுக்கம் |
| 3659 |
குடி விழுத் திணை |
குடிகளையுடைய சிறந்த குடும்பம் |
| 3660 |
குடுமி |
உச்சிக் கொண்டை, நுனி, முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் முடிபு |
| 3661 |
குடுமிக் கட்டிய படப்பை |
தலை குவிந்த கட்டிகளை உடைய தோட்டம் |
| 3662 |
குடுமி களைதல் |
சௌளச் சடங்கில் தலைமயிர் நீக்குதல் |
| 3663 |
குடுமிச் சேவல் |
செஞ் சூட்டுச் சேவல் |
| 3664 |
குடை |
உட்குழிந்த பாத்திரம், நீர் முதலியன உண்ணும் ஓலைப்பட்டை, கவிகை, குடையோலை |
| 3665 |
குடைச்சூல் |
சிலம்பு |
| 3666 |
குடைதல் |
கடைதல் |
| 3667 |
குடைவுழி |
குடைந்து விளையாடுகின்ற இடத்து |
| 3668 |
குண்டு |
ஆழம், குழி |
| 3669 |
குண்டு கரை |
ஆழ்ந்த கரை |
| 3670 |
குண்டை |
குறுமை |
| 3671 |
குண்டைக் கோடு |
குறிய கிளைகள் |
| 3672 |
குணக்கு |
கிழக்கு |
| 3673 |
குணகடல் |
கீழ் கடல் |
| 3674 |
குண திசை |
கீழ்த் திசை |
| 3675 |
குணபுலம் காவலர் மருமான் |
சோழன் |
| 3676 |
குணாது |
கிழக்கிலுள்ளது |
| 3677 |
குணில் |
குறுந்.தடி, பறை அடிக்கும் கடிப்பு |
| 3678 |
குத்தி |
ஊன்றி |
| 3679 |
குத்துதல் |
தின்னுதல், ஊன்றுதல் |
| 3680 |
குத்துறுத்தல் |
தைத்தல் |
| 3681 |
குதட்டல் |
மெல்லுதல் |
| 3682 |
குதிர் |
ஒரு வகை மரம், தானியம் வைக்கும் கூடு |
| 3683 |
குதிரை |
அதியமானுக்கு உரிய குதிரை மலை |
| 3684 |
குதிரையோவீறியது |
குதிரையோகீறியது |
| 3685 |
குதிரை வழங்கி வருவல் |
குதிரையேறி வருவேன் |
| 3686 |
குதுகுதுத்தல் |
ஆசைப்படுதல் |
| 3687 |
குந்தம் |
குத்துக்கோல் |
| 3688 |
குப்பை |
தானியக் குவியல், திரட்சி, குவியல், தொகுதி |
| 3689 |
கும்பு |
கூட்டம் |
| 3690 |
குமட்டூர்க் கண்ணனார் |
ஒரு புலவர் |
| 3691 |
குமணன் |
முதிரமலைக்குரிய பெரு வள்ளல் |
| 3692 |
குமரி |
இளமை, கன்னியாகுமரி, கன்னியாறு |
| 3693 |
குமரிப் படை |
அழியாச் சேனை |
| 3694 |
குமரி மகளிர் |
கன்னியர் |
| 3695 |
குமிழ் |
குமிழம் பழம் |
| 3696 |
குமுறுதல் |
முழங்குதல் |
| 3697 |
குய் |
தாளிப்பு |
| 3698 |
குயம் |
அரிவாள், முலை |
| 3699 |
குயில் எழுத்து |
குயிற்றிய எழுத்து |
| 3700 |
குயில்தல் |
இயற்றல், செய்தல், துளைத்தல் |
| 3701 |
குயிறல் |
பொறித்தல் |
| 3702 |
குயினர் |
இரத்தினம் துளையிடுவோர் |
| 3703 |
குரங்கு |
வானரம் |
| 3704 |
குரங்குதல் |
வளைதல் |
| 3705 |
குரம் |
குளம்பு |
| 3706 |
குரம்பை |
சிறு குடில், சிறிய மனை |
| 3707 |
குரல் |
ஒலி, ஓசை, கதிர், பூங்கொத்து, ஒன்றோடொன்றற்குள்ள சேர்க்கை, தினை வாழை முதலியவற்றின் தோகை, பெண்டிர் தலைமயிர், ஐம்பால் வகையினுள் ஒன்று, கொத்தாகிய மயிர், பற்றம், மொழி, மிடறு, இசை |
| 3708 |
குரல் அமை ஒரு காழ் |
பற்று அமைந்த ஒரு மாலை |
| 3709 |
குரல் பயிற்றும் |
குரலாலே பலகாலும் சொல்லும் |
| 3710 |
குரல் வாங்குதல் |
கதிர் பறிதல் |
| 3711 |
குரவம் |
குரா மரம் |
| 3712 |
குரவர் |
இரு முது குரவர் |
| 3713 |
குரவு |
குரா மரம் |
| 3714 |
குரவை |
குரவைக் கூத்து, கைகோத்தாடுங் கூத்து |
| 3715 |
குரவை தழீஇ ஆடல் |
குரவை கை கோத்து ஆடுதல் |
| 3716 |
குரவை தூங்கல் |
குரவைக் கூத்தாடுதல் |
| 3717 |
குரற் கூந்தல் |
பற்றத்தினை உடைத்தாகிய மயிர், கற்றையாய் நெருங்கி வளர்ந்துள்ள மயிர் |
| 3718 |
குரற் கூந்தால் |
கொத்தான கூந்தலை உடையாய் |
| 3719 |
குரால் |
பெண் கூகை, கோட்டான், ஒருவகை நிறம் |
| 3720 |
குரிசில் |
தலைவன் |
| 3721 |
குரீஇ |
குருவி |
| 3722 |
குரீஇப் பூளை |
சிறு பூளை |
| 3723 |
குரு |
கனம், நிறம் |
| 3724 |
குருகின் தோடு |
நாரையின் கூட்டம் |
| 3725 |
குருகு |
குருத்து, ஒரு வகைப் பறவை, நாரை, வக்கா, உலைத் துருத்தி, வளையல் |
| 3726 |
குருசில் |
குரிசில் |
| 3727 |
குருதி |
சிவப்பு, இரத்தம் |
| 3728 |
குருதிய |
குருதியையுடைய |
| 3729 |
குருந்தங் கண்ணி |
குருந்த மலராலான மாலை |
| 3730 |
குருந்து |
ஒரு மரம் |
| 3731 |
குரும்பி |
புற்றாஞ் சோறு |
| 3732 |
குரும்பை |
தெங்கு பனைகளின் இளங்காய் |
| 3733 |
குரும்பை மணிப் பூண் |
அரையிற் கட்டும் கிண்கிணி |
| 3734 |
குருமயிர்க் கடுவன் |
நிறம் பொருந்திய மயிரையுடைய ஆண் குரங்கு |
| 3735 |
குருளை |
குஞ்சு, குட்டி |
| 3736 |
குருளைப் பன்றி |
பன்றிக் குட்டி |
| 3737 |
குரூஉ |
கனம், திரட்சி, நிறம் |
| 3738 |
குரூஉக் கண் |
குரால் நிறத்தவாகிய கண், நிறத்தையுடைய கண் |
| 3739 |
குரூஉக் கதிர் |
நல்ல நிறத்தையுடைய கதிர் |
| 3740 |
குரூஉச் செகில் |
நிறத்தையுடைய சிவந்த ஏறு |
| 3741 |
குரை |
ஒலி, ஆரவாரம், ஓர் அசை |
| 3742 |
குரைத்தல் |
ஆரவாரித்தல் |
| 3743 |
குல்லை |
கஞ்சங்குல்லை, துழாய் |
| 3744 |
குலமுதல் |
குலதெய்வம் |
| 3745 |
குலவு |
வளைவு |
| 3746 |
குலவுக் குரல் |
வளைந்த கதிர் |
| 3747 |
குலவுதல் |
வளைதல், குவிதல் |
| 3748 |
குலாஅ |
வளைந்த |
| 3749 |
குலை |
கொத்து, வாழைத் தாறு, வில்லின் நாணி |
| 3750 |
குலை அலங் காந்தள் |
கொத்துக்கள் அசையுங் காந்தள் |
| 3751 |
குலைஇ |
வளைத்து |
| 3752 |
குலை இழிபு அறியாச் சாபம் |
இன்ன பொழுது போர் உண்டாகும் என்று அறியாதே எப்பொழுதும் நாணி ஏற்றியே கிடக்கும் வில், நாணியை வளைத்தலினின்றும் இறக்குதலை அறியாத வில் |
| 3753 |
குலைப்பது |
ஆட்டுவது |
| 3754 |
குலைவன |
அசைவன |
| 3755 |
குவடு |
குன்று |
| 3756 |
குவவு |
திரட்சி, கூட்டம், ஒன்றோடு ஒன்று பிணைகை |
| 3757 |
குவவுத் திரை |
வளைந்த அலைகள் |
| 3758 |
குவளை |
கருங்குவளை, நீலமலர், ஒரு பேரெண் |
| 3759 |
குவிதல் |
கூம்புதல் |
| 3760 |
குவி முல்லை |
குவிந்த முல்லை |
| 3761 |
குவை |
கூட்டம், குவிதல் |
| 3762 |
குவைஇ |
குவித்து, பரப்பி |
| 3763 |
குவைஇய |
திரண்ட |
| 3764 |
குழ |
இளமை |
| 3765 |
குழக்கு |
குழவிப் பருவத்துக்கு |
| 3766 |
குழல் |
குழலோசை, கூந்தல் வகையுள் ஒன்று, மீன் வகை, புல்லாங்குழல், வங்கியம் |
| 3767 |
குழவி |
அம்மி கல்லுரல்களின் அரைக்கும் கல், குழந்தை |
| 3768 |
குழவி கொள்பவர் |
குழந்தையை வளர்ப்பவர் |
| 3769 |
குழவித் தீம் நீர் |
இளநீர் |
| 3770 |
குழவி வேனில் |
இளவேனில் |
| 3771 |
குழற்பழம் |
குழல் போன்ற பழம் |
| 3772 |
குழறுதல் |
கூவுதல் |
| 3773 |
குழாஅல் |
கூடுகை |
| 3774 |
குழிசி |
பானை |
| 3775 |
குழிதல் |
குழியாதல் |
| 3776 |
குழீஇ |
திரண்டு கூடி, திரளப்பட்டு |
| 3777 |
குழீஇய |
கூடியுள்ள |
| 3778 |
குழீஇயவை |
திரண்டவை |
| 3779 |
குழு |
திரள் |
| 3780 |
குழம்பு |
குழி, திரள் |
| 3781 |
குழுமல் |
முழங்கல் |
| 3782 |
குழு மலை |
கிளையை உடைய மலை |
| 3783 |
குழுமுதல் |
கூடி முழங்குதல், குமுறுதல் |
| 3784 |
குழுவுதல் |
கூடுதல் |
| 3785 |
குழூஉ |
திரட்சி |
| 3786 |
குழூஉநிலை |
கோபுரம் முதலிய கட்டடத்தின் தளநிலைகள் |
| 3787 |
குழை |
தளிர், தழை, காதணி |
| 3788 |
குழைச்செயலை |
அசோகந் தளிர் |
| 3789 |
குழைத்த |
குழைவித்த, வருத்தின |
| 3790 |
குழைத்தல் |
தழையச் செய்தல் |
| 3791 |
குழைதல் |
வருந்துதல், செவ்வி குலைதல் |
| 3792 |
குழைந்த |
தழைத்த |
| 3793 |
குழையுங் குழைவு |
நுடங்கும் நுடக்கம் |
| 3794 |
குளகு |
விலங்கின் இலையுணவு, இலையுண்ணும் விலங்கின் உணவு |
| 3795 |
குளம் |
ஏரி, மார்கழி மாதம் |
| 3796 |
குளம்பு |
குரம், ஒரு சார் விலங்குகளின் பாதம் |
| 3797 |
குளமீன் |
ஒரு நட்சத்திரம் |
| 3798 |
குளவி |
காட்டு மல்லிகை, மலை மல்லிகை, தாளி என்னும் பூடு |
| 3799 |
குளித்தல் |
நீராடுதல், வலிய உட்புகுதல், மறைதல் |
| 3800 |
குளித்தாங்கே |
குளித்த அவ்விடத்தே |
| 3801 |
குளித்தொழுகுதல் |
மறைந்து நடத்தல் |
| 3802 |
குளிர் |
கிளி கடி கருவி, அரிவாள் |
| 3803 |
குளிரி |
குளிர் |
| 3804 |
குளிறு |
நண்டு |
| 3805 |
குற்ற |
பறித்த |
| 3806 |
குற்றி |
கட்டை |
| 3807 |
குற்றில் |
கொட்டில் |
| 3808 |
குறங்கு |
துடை |
| 3809 |
குறடு |
தேர் முதலியவற்றின் அச்சுக் கோக்கும் இடம், கரி முதலிய பொருள்களை எடுக்கும் கருவி |
| 3810 |
குறவன் |
குறிஞ்சி நிலமகன் |
| 3811 |
குறழ்தல் |
குனிதல் |
| 3812 |
குறழா |
குனிந்து |
| 3813 |
குறள் |
சிறுமை, குறளன் |
| 3814 |
குறி |
முன்னறிந்து கூறும் நிமித்தம், அடையாளம், கருத்து, குறிக்கப்படும் குணங்கள், குறிப்பு, குறியிடம், முகூர்த்தம் |
| 3815 |
குறிக்கொண்டு |
நிமித்தங்களைப் பெற்று |
| 3816 |
குறிசெய்தல் |
குறித்தல் செய்தல், குறியிட்டு விடல், குறியிடம் செய்தல் |
| 3817 |
குறிஞ்சி |
குறிஞ்சிப் பண், புணர்தலாகிய உரிப்பொருள் |
| 3818 |
குறித்தல் |
கருதுதல் |
| 3819 |
குறித்தனை |
கருதினாய் |
| 3820 |
குறித்தாங்கே |
குறித்தபடியிலே |
| 3821 |
குறித்து மாறெதிர்ப்பை |
குறித்த பிரதியுபகாரம் |
| 3822 |
குறிப்பு |
ஐம்பொறி, கருத்து, மனக்குறிப்பு |
| 3823 |
குறிவாய்த்தல் |
குறியிடத்தே தப்பாமல் வருதல் |
| 3824 |
குறுகல் |
அடைதல், தேய்ந்து குறைதல் |
| 3825 |
குறுகன்மின் |
முயங்காதே |
| 3826 |
குறுகினம் |
அணுகினேம் |
| 3827 |
குறுகுதல் |
அணுகுதல் |
| 3828 |
குறுகுறுநடத்தல் |
குறுகக் குறுக நடந்து செல்லுதல் |
| 3829 |
குறுங் காடு |
சிறு காடு |
| 3830 |
குறுங்கை |
குறிய கை |
| 3831 |
குறுங் கோல் |
சிறிய கோல் |
| 3832 |
குறுஞ் சினை |
குறுகிய கிளைகள் |
| 3833 |
குறுதல் |
பறித்தல், மேலிழுத்து வாங்குதல், நெல் முதலியன குற்றுதல் |
| 3834 |
குறுந் தாள் |
குறுகிய படிக்கட்டு |
| 3835 |
குறு நணி |
மிக்க அணிமை |
| 3836 |
குறுநர் |
பறிப்போர் |
| 3837 |
குறுநறுங்கண்ணி |
குன்றிப்பூ |
| 3838 |
குறு நெடுந் துணைய |
சிறியவும் பெரியவுமாய அளவினையுடைய |
| 3839 |
குறு நெறி |
குறுகிய மயிர் நெறிப்பு |
| 3840 |
குறும் படை |
கோட்டை |
| 3841 |
குறும் படை மழவர் |
கோட்டை வீரர் |
| 3842 |
குறும்பர் |
சிற்றரசர் |
| 3843 |
குறும் பல் |
குறிய பல |
| 3844 |
குறும் பறை |
பறவைப் பேடு |
| 3845 |
குறும் பறை பயிற்றி |
குறுகக் குறுகப் பறத்தலைச் செய்து |
| 3846 |
குறும்பிடி |
உடைவாள் |
| 3847 |
குறும்பு |
குறுநில மன்னர், அரண், அரண் வலி, வலிமை |
| 3848 |
குறும்பூழ் |
காடை |
| 3849 |
குறும் பொறி |
உதரபந்தம் |
| 3850 |
குறும் பொறை |
குறிய பொற்றைகள், சிறு மலை, காடு |
| 3851 |
குறு மக்கள் |
சிறிய பிள்ளைகள் |
| 3852 |
குறு மகள் |
இளம் பெண், மனைவி |
| 3853 |
குறு மறுகி |
அண்ணிதாக மனம் சுழன்று |
| 3854 |
குறு மாக்கள் |
குறு மக்கள், இள மகார்,அறிவில்லாத சிறிய மகளிர் |
| 3855 |
குறுமை |
சிறுமை, அண்மை |
| 3856 |
குறூஉந்து |
பறிக்கும் |
| 3857 |
குறை |
உண்ணுவதற்குப் பக்குவப்படுத்திய தசை, காரியம், ஒரு தாக்குடையமிடற்றுப் பாடல் வகை, என்பு |
| 3858 |
குறை கூறுதல் |
வருத்தத்தைச் சொல்லுதல் |
| 3859 |
குறைத்த அறை |
வெட்டிய (நெறியாக்கிய) குன்றம் |
| 3860 |
குறை நாளால் |
குறைகின்ற நாளிடத்தே |
| 3861 |
குறைபடாவாறு |
குறைபடாதபடி |
| 3862 |
குறைபடுத்தல் |
முகத்தல் |
| 3863 |
குறைபடுதல் |
துணிபடுதல் |
| 3864 |
குறைபடூஉம் |
குறைபட்டு வருவதற்குக் காரணமான |
| 3865 |
குறையா |
குறையாத |
| 3866 |
குறையோர் |
வறியோர் |
| 3867 |
குறைவில் |
வானவில் |
| 3868 |
குறைவேண்டுநர் |
அனுகூல காரியங்களை விரும்புவோர் |
| 3869 |
குன்று இறுவரை |
மலையிடத்து உறுகின்ற அடிவரை, மலையடிவாரம் |
| 3870 |
குன்றம் |
மலை |
| 3871 |
குன்றி |
குன்றிமணி |
| 3872 |
குன்று |
உதய கிரி, சிறு மலை, திருப்பரங்குன்று |
| 3873 |
குன்று பயன் |
களவொழுக்கம் |
| 3874 |
குன்றுபோல் வால் எக்கர் |
மலைபோல் உயர்ந்த வெண்மையை உடைய இடுமணல் |