3875 கூஉ கூவுதல்
3876 கூஉங் கண்ணது கூப்பிடு தூரத்தில் உள்ளது
3877 கூஉம் கூவும்
3878 கூஉய்க் கூஉய் அழைத்து அழைத்து
3879 கூகை கோட்டான், பேராந்தை
3880 கூட்டம் கலவி, புணர்ச்சி
3881 கூட்டு கொள்ளைப் பொருள்
3882 கூட்டுணல் கொள்ளை கொண்டு உண்ணுதல்
3883 கூட்டு விரை கலந்த மணம்
3884 கூட்டுவேம் கூட்டி நுகரக் கடவேம்
3885 கூடம் சம்மட்டி
3886 கூடல் நதியின் சங்கமுகம், மதுரை
3887 கூடாது பொருந்தாது
3888 கூடு நெற்கூடு, குதிர்
3889 கூடு குவி பூ இதழ் குவிந்த பூக்கள்
3890 கூடுதல் உண்டாதல், சேர்தல்
3891 கூத்தர் கூத்தாடுபவர்
3892 கூதளம் கூதாளி
3893 கூதிர் கூதிர்க் காலம்
3894 கூதிர் யாமம் கூதிர்ப் பருவத்தின் நள்ளிரவு
3895 கூந்தல் குதிரைப் பிடரி மயிர், குதிரை, கேசி என்னும் அசுரன், சடை, மகளிர் தலைமயிர்
3896 கூந்தல் கொள்ளுதல் மகளிரைத் தழுவுதல்
3897 கூந்தற் கிழவர் கணவர்
3898 கூந்தற் குதிரை கழுத்தின் மயிரை உடைய குதிரை
3899 கூந்தற், கோடு மயிர் முடி
3900 கூப்பி குவித்து
3901 கூப்பிடு கூப்பிடு தூரம்
3902 கூப்பிடுதல் கூக்குரலிடுதல்
3903 கூம்பல் குவிதல், பொருந்துதல்
3904 கூம்பு குவிதல், பாய்மரம்
3905 கூம்புதல் ஊக்கங் குறைதல், குவிதல்
3906 கூம்பு விட தளை அவிழ
3907 கூய் கூப்பிட்டு
3908 கூர் மிகுதி, கூர்மை
3909 கூர் உகிர்ப் பேடை கூரிய நகங்களையுடைய பெட்டை
3910 கூர்கிற்பாள் மிகுவாள்
3911 கூர்தல் மிகுதல், வளைதல், உறுதல்
3912 கூர் மதன் மிக்க வலி
3913 கூர மிக, மிகுகையினாலே, குன்னாக்க
3914 கூரம் யாழ்
3915 கூரல் குன்னாக்கல், குளிரால் உடம்பு கூனி ஒடுங்குதல்
3916 கூரல் இருக்கை மழையாலும் குளிராலும் நனைந்து நடுங்கி இருத்தல்
3917 கூரும் தங்கும்
3918 கூரை இறப்பு
3919 கூலம் பண்டம்; நெல், புல், வரகு, சாமை, தினை முதலிய பதினெண் கூலம்
3920 கூவல் கிணறு
3921 கூவியர் அப்ப வாணிகர்
3922 கூவிரம் மலை மரவகை
3923 கூவிளம் வில்வம்
3924 கூவுதல் யானை முதலியன பிளிறுதல்
3925 கூவை செடிவகை, கூட்டம்
3926 கூழ் பலவகை உணவு, பாற்சோறு
3927 கூழ் அள்ளல் செறிந்த சேறு
3928 கூழ வட்டி நெல்லையுடைய வட்டி
3929 கூழை கூந்தல், குறை, படையின் பின்னணி, மகளிர் தலையின் மயிர்
3930 கூழை இருவி கூழையாகிய தாள்
3931 கூழைநொச்சி தழையணியின் பொருட்டுக் கொய்து குறைத்த நொச்சி
3932 கூளி பேய்
3933 கூளியர் ஆறலை கள்வர், வேட்டுவர், வழிப்பறி செய்யுங் கள்வர், நாடு காக்கும் வேடர், ஏவல் செய்வோர், பூதங்கள், பேய்கள்
3934 கூற்றம் கூற்றுவன், யமன்
3935 கூற்று இறைவன், கூற்றுவன், வார்த்தை
3936 கூற சொல்ல, சொல்லி விலக்க
3937 கூறின் கூறுவையாயின்
3938 கூறு கூறுங் கூற்று, கூறுவாயாக, சொல்வாய்
3939 கூறுநர் கூறுவார்
3940 கூறுமதி கூறுவாயாக
3941 கூறும் மாயமோ கூறும் கூற்றோ பொய்
3942 கூன் வளைவு
3943 கூனுதல் வளைதல்
மேல்