3960 கேட்டமாறு கேட்ட பரிசு
3961 கேட்டல் கேட்டு மகிழ்ந்திருத்தல்
3962 கேட்டாங்கு கேட்கும் அப்பொழுதே
3963 கேட்டிசின் கேட்பாயாக
3964 கேட்டீ கேட்பாய், கேட்பாயாக
3965 கேட்டீன் கேட்பீராக
3966 கேட்டீவாய் கேட்பாய்
3967 கேட்டை கேள்
3968 கேட்டொறும் கேட்கும் பொழுதெல்லாம்
3969 கேட்பில் கேட்கில்
3970 கேட்புழி கேட்கலாம் இடம்
3971 கேண்மை உறவு, நட்பு
3972 கேணி சிறிய குளம், கிணறு
3973 கேழ் நிறம், வரி
3974 கேழல் பன்றி
3975 கேள் உறவானவர், உறவு, கணவன், தோழி
3976 கேள்வன் கணவன்
3977 கேள்வி கேட்டல், வேதம்
3978 கேளல் கேளிர் நொதுமலாளர்
3979 கேளன்மார் கேளாதொழிவாராக
3980 கேளாளன் கேளாக ஆளுந்தன்மையையுடையவன்
3981 கேளியர் கேட்க
3982 கேளிர் நண்பர், சுற்றத்தார், உறவானவர்
மேல்