| 4059 |
கொஃறேர் (கொல்தேர்) |
கால சக்கரம் |
| 4060 |
கொக்கு |
பறவை வகை, மாமரம் |
| 4061 |
கொகுடி |
ஒரு வகை முல்லை |
| 4062 |
கொங்கன் |
கொங்க நாட்டான் |
| 4063 |
கொங்கு |
பூந்தாது, தேன், கொங்கு நாடு |
| 4064 |
கொங்கு சுவர் சேவல் |
வண்டு |
| 4065 |
கொட்குதல் |
சூழ வருதல், சுழலுதல், பரத்தல் |
| 4066 |
கொட்கும் |
அலையும் |
| 4067 |
கொட்குவர் |
திரிவர் |
| 4068 |
கொட்டம் |
சிறிய ஓலைப் பெட்டி |
| 4069 |
கொட்டிக் கொடுத்தல் |
காட்டிக் கொடுத்தல், வெளிப்படுத்துதல் |
| 4070 |
கொட்டு |
வாத்திய அடிப்பு |
| 4071 |
கொட்டுதல் |
அப்புதல் |
| 4072 |
கொட்டை |
அலங்காரம் முதலியவற்றிற்காக ஆடைத் தும்பினைத் திரள முடிந்த முடிச்சு, தாமரைக் கொட்டை |
| 4073 |
கொட்ப |
சுழலும்படி, சுழன்று கழலும் படி |
| 4074 |
கொட்பன போல் |
சுழன்று திரியுமாறு போல |
| 4075 |
கொட்பித்தான் |
சுழலப் பண்ணினவன் |
| 4076 |
கொட்பு |
சுழற்சி |
| 4077 |
கொடி |
நீளம், ஒழுங்கு, கிழக்குத்திசை, வரிசை, துகிற்கொடி, பூங்கொடி |
| 4078 |
கொடி அறுகை |
கொடியாகிய அறுகம்புல் |
| 4079 |
கொடி அன்ன தகையார் |
கொடியை ஒத்த அழகினையுடையார் |
| 4080 |
கொடி இயல் |
கொடிபோன்ற, நுடக்கம், கொடியினது இயல்பு |
| 4081 |
கொடிச்சி |
குறிஞ்சி நிலத்துப் பெண் |
| 4082 |
கொடிச்சியர் |
குறத்தியர் |
| 4083 |
கொடிஞ்சி |
கைக்கு உதவியாகத் தாமரைப் பூ வடிவில் தேர்த்தட்டின் முன் நடப்படுவதாகிய ஒரு தேர் உறுப்பு |
| 4084 |
கொடிது |
தீத்தொழில், கொடுந்தொழில் |
| 4085 |
கொடி மின்னு |
ஒழுங்கினையுடைய மின்னல் |
| 4086 |
கொடியோன் |
தீயவன் |
| 4087 |
கொடி விடு கூர் எரி |
கொழுந்து விட்டெரியும் மிக்க தீ |
| 4088 |
கொடி விடுதல் |
மிகுதியாதல் |
| 4089 |
கொடிற்றுப் புண் |
புணர்ச்சிக் காலத்துக் கவுளிடத்துச் செய்யும் வடுக்கள் |
| 4090 |
கொடிறு |
ஒரு வகைக் குறடு, பற்றுக் கோடு, கன்னம் |
| 4091 |
கொடீஇயர் |
கொடுக்க |
| 4092 |
கொடுகொட்டி |
சிவபெருமான் எல்லா வற்றையும் அழித்து நின்று ஆடுங் கூத்து |
| 4093 |
கொடுங் கழி |
வளைந்த கழி |
| 4094 |
கொடுங்காய் |
வளைந்த காய் |
| 4095 |
கொடுங் கால் |
வளைந்த தாள் |
| 4096 |
கொடுங் குரல் |
வளைந்த கதிர் |
| 4097 |
கொடுங் குழாய் |
வளைந்த மகரக்குழையை யுடையாய் |
| 4098 |
கொடுங் கேழ் |
வளைந்த வரி |
| 4099 |
கொடுஞ்சி |
கொடிஞ்சி, தேர்மொட்டு |
| 4100 |
கொடுஞ் சிலை |
கொடிய வில் |
| 4101 |
கொடுஞ் சிறை |
வளைந்த சிறகு |
| 4102 |
கொடுஞ்சினை (கொடுஞ்சி) |
தேர் மொட்டை வளைந்த தாமரை முகை |
| 4103 |
கொடுத்தல் |
வழங்குதல் |
| 4104 |
கொடுந் திமில் |
வளைந்த மீன் படகு |
| 4105 |
கொடுந் தொழு |
வளைந்த தொழு |
| 4106 |
கொடுநுகம் |
நுகத்தடி |
| 4107 |
கொடுப்ப போல் |
கொடுப்பாரைப்போல் |
| 4108 |
கொடும்பாடு |
மாறுபாடு, பொய்மை |
| 4109 |
கொடுமடி |
பண்டம் இடுதற்காக வளைத்துக் கட்டிய மடி |
| 4110 |
கொடுமணம் |
அணிகலங்களுக்குப் பேர் பெற்ற பழையதோர் ஊர் |
| 4111 |
கொடு மணி |
கொடிய மணி |
| 4112 |
கொடுமரம் |
வில் |
| 4113 |
கொடுமரம் தேய்த்தார் |
வில்லாலே கொல்லப்பட்டவர் |
| 4114 |
கொடு மடாய் |
வளைந்த மடிப்பை உடையாய் |
| 4115 |
கொடுமார் |
கொடுத்தற்கு |
| 4116 |
கொடுமை |
மனக் கோட்டம், கொடிய தன்மை, வளைவு |
| 4117 |
கொடுமோ |
விடுவாயாக, கொண்டு தருவாயாக |
| 4118 |
கொடுவரி |
புலி |
| 4119 |
கொடு வரி இரும் புலி |
வளைந்த கோடுகளையுடைய பெரிய புலி |
| 4120 |
கொடுவாய் இரும்பு |
தூண்டில் முதலியவற்றிலுள்ள இரும்புக் கொக்கி |
| 4121 |
கொடுவாள் |
வளைந்த அரிவாள் |
| 4122 |
கொடுவேரி |
கொடுவேலி, ஒரு வகை மரம் |
| 4123 |
கொடை நேர்தல் |
மகளை மணஞ்செய்து கொடுக்க உடன்படுதல் |
| 4124 |
கொடை மடம் |
வரைவின்றிக் கொடுக்கை |
| 4125 |
கொண்கன் |
நெய்தல் நிலத் தலைவன் |
| 4126 |
கொண்கானங் கிழான் |
ஓர் உபகாரி |
| 4127 |
கொண்கானம் |
ஒரு மலை |
| 4128 |
கொண்ட |
ஓர் உவம வாசகம், எடுத்த |
| 4129 |
கொண்டக்கால் |
கொண்ட காலம் |
| 4130 |
கொண்டல் |
கீழ்காற்று, மேகம் |
| 4131 |
கொண்டவன் |
கணவன் |
| 4132 |
கொண்டன்று |
கொண்டது |
| 4133 |
கொண்டார் |
கொண்டவர், கைக் கொண்டவர் |
| 4134 |
கொண்டி |
பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுகை, உணவு, கப்பம், கொள்ளை, மிகுதி, பரத்தை |
| 4135 |
கொண்டி மகளிர் |
சிறைபிடிக்கப்பட்ட மகளிர் |
| 4136 |
கொண்டீ |
கொள், கொண்டு தண்டிப்பை |
| 4137 |
கொண்டு |
தழுவி, நின்று |
| 4138 |
கொண்டு இறத்தல் |
கொண்டு போதல் |
| 4139 |
கொண்டு நிலை |
ஒருவர் கூற்றினை ஒருவர் கொண்டு கூறுதல், கொண்டுநிலைச் செய்யுள் |
| 4140 |
கொண்டென |
கொண்டதாக |
| 4141 |
கொண்டை |
மயிர் முடிவகையுள் ஒன்று |
| 4142 |
கொண்பெருங்கானம் |
கொண்கானம் என்னும் பெரிய ஊர் |
| 4143 |
கொண்ம் |
கொள்ளுங்கள் |
| 4144 |
கொண்மார் |
கொள்ளல் வேண்டி, கொள்ளுதற்கு, பறித்துக் கோடற்கு |
| 4145 |
கொண்மூ |
மேகம் |
| 4146 |
கொண்மூக் குழீஇ |
மேகத்தோடு கூடி |
| 4147 |
கொணர்கம் |
கொணர்வேம் |
| 4148 |
கொணர்ந்த |
கொண்டுபோந்த |
| 4149 |
கொணர்ந்துய்த்தல் |
விடுதல் |
| 4150 |
கொப்பூழ் |
நாபி |
| 4151 |
கொம்பு |
ஊது கொம்பு, மரக் கிளை |
| 4152 |
கொம்மெனல் |
ஓர் ஒலிக்குறிப்பு |
| 4153 |
கொம்மை |
இளமுலை, பெருமை, இளமை, திரட்சி |
| 4154 |
கொய்சுவல் |
கத்தரிக்கப்பட்ட பிடரி மயிர் |
| 4155 |
கொய்தல் |
அறுத்தல், சிலிர்த்தல், பறித்தல், கத்தரித்தல் |
| 4156 |
கொய் தளிர் மேனி |
கொய்யப்படும் தளிர்போலும் நிறம் |
| 4157 |
கொயல் |
பறித்தல் |
| 4158 |
கொல் |
அசைநிலை, ஐயப் பொருளிலும் வியப்புப் பொருளிலும் வரும் இடைச்சொல் |
| 4159 |
கொல் களிறு |
கொல்கின்ற களிறு |
| 4160 |
கொல் தேர் |
கால சக்கரம் |
| 4161 |
கொல்பு |
முறித்து |
| 4162 |
கொல் புனம் |
வெட்டித் திருத்திய கொல்லை |
| 4163 |
கொல்லல் |
வருத்துதல் |
| 4164 |
கொல்லன் |
கருமான் |
| 4165 |
கொல்லி |
திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் உள்ள ஒரு மலை |
| 4166 |
கொல்லுதல் |
உழுதல், வெட்டுதல், கெடுத்து விடுதல், கொலை செய்தல் |
| 4167 |
கொல்லை |
தினைப் புனம், முல்லைநிலம், நிலம் |
| 4168 |
கொல்வை |
வருத்துவை, சினந்து கொல்வாய் |
| 4169 |
கொலைஇய |
கொல்லுதலைச் செய்த |
| 4170 |
கொலைவர் |
கொலைத் தொழிலை உடைய வேடர் |
| 4171 |
கொலைவன் |
கொலைத் தொழிலை உடைய இறைவன், சிவன், கொல்லுதலைச் செய்பவன், வேடன் |
| 4172 |
கொலை வேல் மறவர் |
கொலைத் தொழிலைச் செய்யும் வேலையுடைய மறச்சாதியார் |
| 4173 |
கொழித்தல் |
மேலே கிளம்புதல் |
| 4174 |
கொழு |
உழும் கருவி |
| 4175 |
கொழுங் கடை மழைக் கண் |
கொழுவியகடையையும் குளிர்ச்சியையும் உடைய கண்கள் |
| 4176 |
கொழுதல் |
தின்றல், கோதுதல், கிண்டுதல் |
| 4177 |
கொழுதி |
கிழித்து, தின்று |
| 4178 |
கொழுது |
கோது |
| 4179 |
கொழுதுதல் |
பறித்தல், கோதுதல் |
| 4180 |
கொழுநர் |
கணவர் |
| 4181 |
கொழு நிழல் |
குளிர்ந்த நிழல், கொழுவிய நிழல் |
| 4182 |
கொழும் பதி |
செல்வத்தை உடைய ஊர் |
| 4183 |
கொழு மடல் தாழை |
கொழுவிய மடலை உடைய தாழை |
| 4184 |
கொழுமீன் |
ஒரு வகை மீன் |
| 4185 |
கொழு முகை |
கொழுவிய அரும்பு |
| 4186 |
கொழுமை |
அழகு, குளிர்ச்சி |
| 4187 |
கொள் |
காணம், குடைவேல் |
| 4188 |
கொள்க |
கேட்பதாக |
| 4189 |
கொள் கலம் |
கொண்டிருக்கும் கலம் |
| 4190 |
கொள்கை |
விரதம், கற்பு, மேம்பாடு கொள்கை, குறிக்கோள், கொள்ளுதல், கோட்பாடு |
| 4191 |
கொள்வதை |
வைத்துக்கொள்வது |
| 4192 |
கொள்வனை |
பிடித்துக் கொள்ளுமளவும் |
| 4193 |
கொள்வாம் |
பெறுவேம் |
| 4194 |
கொள்வான் |
கொள்கின்றவன், தழுவுமவன், வாங்குவான் |
| 4195 |
கொள்ளல் |
தீண்டாதே |
| 4196 |
கொள்ளாதி |
எடாதே |
| 4197 |
கொள்ளார் |
பகைவர் |
| 4198 |
கொள்ளி |
கொள்ளிக்கட்டை, நெருப்பு |
| 4199 |
கொள்ளுதல் |
முகத்தல், ஒத்தல், உட் கொள்ளுதல், கைப்பற்றுதல், தழுவுதல், மேற்கொள்ளுதல், வாங்குதல் |
| 4200 |
கொள்ளும் |
கொள்ளுங்கள் |
| 4201 |
கொள்ளும் கருவி |
நுகரும் பொறிகள், இந்திரியங்கள் |
| 4202 |
கொள்ளை |
விலை, மிகுதி |
| 4203 |
கொளல் |
வாங்கிக் கோடல் |
| 4204 |
கொளவிடா |
தழுவக் கொடாதே |
| 4205 |
கொளாஅ |
கொண்டு |
| 4206 |
கொளாஅல் |
கொளுவுதல் |
| 4207 |
கொளீஇ |
கொளுத்தி, பிடித்து, கொள்ளச் செய்து |
| 4208 |
கொளீஇய |
கொள்ளுவதற்கு |
| 4209 |
கொளீஇயள் |
கொள்ளப்பட்டாள் |
| 4210 |
கொளுத்தல் |
ஏவி விடுதல், கற்பித்தல் |
| 4211 |
கொளுவுதல் |
கொள்ளச் செய்தல், தூண்டி விடுதல், கொளுத்துதல் |
| 4212 |
கொளை |
கோட்பாடு, பயன், இசை, பாட்டு |
| 4213 |
கொற்கை |
பாண்டி நாட்டில் தாமிர பரணியின் சங்கமுகத்தில் அமைந்த பழைய துறைமுகப் பட்டினம் |
| 4214 |
கொற்றம் |
அரச உரிமை, வெற்றி |
| 4215 |
கொற்றவன் |
வெற்றியாளன் |
| 4216 |
கொற்றவை |
வன துர்க்கை |
| 4217 |
கொற்றி |
கொற்றவை |
| 4218 |
கொற்றுறை |
கொல்லன் பட்டடை |
| 4219 |
கொன் |
அச்சம், பெருமை, பெரிது, பயனின்மை, காலமுணர்த்தல் |
| 4220 |
கொன்றனர் |
கெடுத்து விட்டார் |
| 4221 |
கொன்று |
வெட்டி |
| 4222 |
கொன்றை |
சரக்கொன்றை |
| 4223 |
கொன்றோர் |
சிதைத்தோர் |
| 4224 |
கொன்னாளன் |
பயனற்றவன், பயனின்மையை ஆளுகின்றவன் |
| 4225 |
கொன்னும் |
ஒரு பயன் இல்லாமலும் |
| 4226 |
கொன்னே |
பயனற்று, வறிதே |