4227 கோ அரசன், பசு, தகப்பன், குசவன், தந்தை
4228 கோஒய் கள் முகக்கும் கலம்
4229 கோகுலம் கோகிலம், குயில்
4230 கோங்கம் கோங்கிலவு
4231 கோங்கின் பொன் மருள் பசு வீ பொன்னை ஒத்த பசுமையான கோங்கின் மலர்
4232 கோங்கு கோங்க மரம்
4233 கோசர் பழைய வீரக் குடியினருள் ஒரு சாரார்
4234 கோட் சுரும்பு தேனைக் கொள்ளும் சுரும்பு
4235 கோட் சுறா கொல்லும் தன்மையுள்ள சுறா மீன்
4236 கோட்ட மரக் கொம்பிலுள்ள பூக்கள்
4237 கோட்ட கேழல் கொம்பையுடைய பன்றி
4238 கோட்டங் கண்ணி வளைந்த கண்ணி
4239 கோட்டம் கரை, ஒரு வகை நீர் நிலை, வளைவு, வளைவான இடம், கோயில்
4240 கோட்டின் கொம்பிலே
4241 கோட்டினம் எருமைக் கூட்டம், கொம்பையுடையனவாகிய எருமை இனம்
4242 கோட்டு மா யானை, பன்றி
4243 கோட்டு மீன் சுறா
4244 கோட்டு வட்டு யானைக் கொம்பினால் செய்த வட்டு
4245 கோட் கெங்கு குலைகளையுடைய தெங்கு
4246 கோட்படுதல் பிடித்துக் கொள்ளப்படுதல், விழுங்கப்படுதல்
4247 கோட் பலவு குலைகளையுடைய பலாமரம்
4248 கோட் பால் தீங்கின் பகுதி, ஆறலைக்கும் பகுதி
4249 கோட்புலி கொல்லுதலில் வல்ல புலி
4250 கோடல் வெண் கோடற் பூ, காந்தள், வளைதல், மாறுபடுதல், கொள்ளுதல்
4251 கோடல்கண்ணி கொய்து கொண்டு போதலைக் கருதி
4252 கோடாக் கொள்கை மாறுபடாத கோட்பாடு
4253 கோடிக் கலிங்கம் புதுப் புடைவை
4254 கோடியர் கூத்தர்
4255 கோடு மருப்பு, பக்கம், கிளை, சிறு கிளை, மரக் கொம்பு, நீர் வீசும் கொம்பு, சங்கு, மயிர்முடி, விலங்கின், கொம்பு, ஊது கொம்பு, மலைச் சிகரம், வீணைத் தண்டு, மேட்டு நிலம், முனை, கரை, கொடுமை, கொடுமுடி, முடி, வளைவு
4256 கோடு இடுதல் கோடுகளைக் கிழித்தல்
4257 கோடு இவர்தல் உயர்ந்த இடத்தின் மேல் ஏறுதல்
4258 கோடுதல் வளைதல்
4259 கோடு வாய் கூடாப் பிறை வளைவு தன்னிடத்து முழுதும் கூடாத இளம்பிறை
4260 கோடை கோடை மலை, கோடைக் கானல், காற்று, கோடைக் காலம்
4261 கோண்மா சிங்கம்
4262 கோண்மீன்(கோள்மீன்) கிரகம்
4263 கோணம் யானைத் தோட்டி
4264 கோத்தை பழுது, குற்றம்
4265 கோது சக்கை
4266 கோதை முத்தாரம், பூமாலை, மகளிர் மாலை, மாலை, சேரன்
4267 கோப்பு கோவை
4268 கோபம் தம்பலப் பூச்சி
4269 கோமான் பாதுகாப்பவன், அரசன்
4270 கோய் கள் முகக்கும் பாத்திரம்
4271 கோயில் ஆலயம்
4272 கோயிலாள் பட்டத்து அரசி
4273 கோரம் கொடிது
4274 கோல் திரட்சி, கம்பு, குடை முதலியவற்றின் காம்பு, அணியின் சித்திர வேலை, அம்பு, தண்டு, மரக் கொம்பு, ஊன்று கோல், கோற்றொழில், செங்கோல், தடி, தாற்றுக் கோல், மூங்கிலின் கோல், வீணையின் நரம்பு
4275 கோல் அணை வளைந்த படுக்கை
4276 கோல் கொள்ளுதல் முட்கோல் கொள்ளுதல், தேர் முதலியன செலுத்துதல்
4277 கோல் தொடி அழகிய வளையல், திரண்ட வளையல்
4278 கோல் நேர் கோற்றொழில் அமைந்த
4279 கோலங் கொள்ளுதல் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வேஷம் பூணுதல்
4280 கோலம் பன்றி, அழகு
4281 கோலி வளைத்து
4282 கோலுதல் வளைத்தல், குழித்தல்
4283 கோலெரி விளக்குத் தண்டின் மேல் உள்ள தீபம்
4284 கோலோர் மத யானையை அடக்கி நடத்தும் குத்துக் கோற்காரர்
4285 கோவம் தம்பலப் பூச்சி
4286 கோவலர் முல்லை நில மாக்கள்
4287 கோவலூர் தென்னார்க்காடு ஜில்லாவிவிலுள்ளதும், பழமையுடையதுமாகிய திருக்கோவலூர்
4288 கோவினம் பசுத் திரள்
4289 கோவூர் கிழார் கடைச் சங்கப் புலவருள் ஒருவர்
4290 கோவை வடம்
4291 கோழ் செழிப்பான
4292 கோழி கோழி என்னும் ஒரு வகைப் பறவை, கோழி யானையை வென்றதாகக் கூறப்படும் இடமும் சோழ ராச தானியுமாகிய உறையூர்
4293 கோழிப் போர் கோழிச் சண்டை
4294 கோள் காய், குலை, வித்து, கொள்ளுகை, கொண்டது, செருகுதல், தழுவல், பாய்தல், கொள்ளும் நிலை, கோடல் தொழில், புள், மனத்தாற் குறித்துக் கொள்ளப்படுவது, மறைத்த தன்மை
4295 கோள் இரை கொள்ளப் பட்ட இரை, கூற்றமாகிய இரை
4296 கோள் உகிர் கொல்லவல்ல கூரிய நகம்
4297 கோள் கால் கோள்களின் தொடர்பு
4298 கோள் சாற்றுதல் ஏற்றைத் தழுவச் சாற்றுதல், 'ஏறு கொள்ள வல்லேன்' என்று சாற்றுதல்
4299 கோள் சுரம் ஊறு பொருந்திய சுரம்
4300 கோள் வல் ஏறு கொல்லுதல் வல்ல பெரிய ஆண் புலி
4301 கோளாளர் ஏறு கொள்ள வல்லார்
4302 கோளி பூவாது காய்க்கும் மரம்
4303 கோன் தலைவன், அரசன்
4304 கோன் அடி தொடுதல் அரசனது அடி மேல் ஆணையிடுதல்
4305 கோனாடு சோணாட்டின் உட்பிரிவுகளில் ஒன்று
மேல்