4309 சகடம் வண்டி, உரோகிணி
4310 சங்கம் ஒரு பேர் எண், இலட்சங் கோடி
4311 சடை சடையாக அமைந்த மயிர்முடி சடையையுடைய ஈசனைத் தெய்வமாகவுடைய திருவாதிரை, மிதுன ராசி
4312 சண்பகம் மரவகை
4313 சண்பு சம்பு, ஒரு வகைக் கோரை
4314 சதுக்கம் நாற்சந்தி
4315 சந்தி பல தெருக் கூடும் இடம்
4316 சந்து வழி கூடும் இடம்
4317 சமம் நடுவு நிலை, போர், முன்படை
4318 சமழ்ப்பு வெட்கம்
4319 சமன் நடு
4320 சரணத்தர் ஒரு வகை ஆடையை அணிந்தவர், ஒரு சார் வேத சாகையை ஓதுவோர்
4321 சலம் நீர், தணியாக் கோபம், வஞ்சனை, மாறுபாடு
4322 சவட்டுதல் மெல்லுதல்
மேல்